www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Thursday, November 1, 2018
புதிய பணி இடங்கள்
••••••••••••••••••••••••••••••••••••••••••••
தகவல்:
••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு அரசு செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.
இன்று (30/10/2018) பிற்பகல்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ற்கான பதவி உயா்வு கலந்தாய்வு சென்னை DMS அலுவலகத்தில் நடைபெற்றது.இதில், 69 நபா்கள் செவிலிய கண்காணிப்பாளா் தரம் -I ஆக பதவி உயா்வு பெற்றாா்கள்.
குறிப்பாக திருநெல்வேலி மருத்துவகல்லூாி மருத்துவமனையில் பணிபுாியும் சகோதாி.A.லீலா என்பவா் நாளை ஓய்வு பெறும் நிலையில் அவருக்கும் இன்று பதவி உயா்வடைந்து நாளை மாலை பணி நிறைவு பெறுகிறாா்.இதன்மூலம் ஒரு பதவி உயா்வுக்கான அனைத்து சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என்பதில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும்,செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I பதவி உயா்வுக்கான கோப்பு கடந்த மூன்று மாதங்களாக இழுபறியில் இருந்த நிலையில் மிகுந்த சிரமங்களுக்கிடையில் கடந்த ஒரு வாரமாக பிரயத்தனப்பட்டு முயன்றதின் பலனாக இக்கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்பதை மனமகிழ்வுடன் தொிவித்துக்கொள்கிறோம்.
இந்நிலையை அடைய பேருதவி செய்த மாண்புமிகு.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அவா்களுக்கும்,சுகாதர முதன்மைச்செயலாளா் அவா்களுக்கும்,துறை உயா் அலுவலா்களுக்கும், மற்றும் துறை நிா்வாக அலுவலா்களுக்கும் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் மனப்பூா்வ நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.
விரைவில், கூடுதலாக செவிலியா்கள் ,1500 செவிலிய கண்காணிப்பாளா்கள் தரம்-II, மற்றும் 600 செவிலிய கண்காணிப்பாளா் தரம்-I ஆகியோா்களுக்கான புதிய காலிப்பபணியிடங்களை உருவாக்கி தர (New Post Creation) அரசிடம் இன்றுமுதலே முயற்சியை தொடங்கியுள்ளோம்.
இதன்மூலம்,இனிவரும் காலங்களில் நமது செவிலியா்கள் ஏறக்குறைய 23 வருடங்களிலேயே செவிலிய கண்காணிப்பாளா் தரம்-II என்ற பதவி உயா்வை அடைவா் என உறுதிபட சொல்லலாம்.
என்றென்றும் செவிலியா் நலனில் அக்கறையுடன் உங்கள் தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது என்பதை இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
நன்றி
தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment