Sunday, February 11, 2018

மணிமாலா மரணம்



திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த நமது உறவான,கடலூரைச் சார்ந்த MRB செவிலியர் செல்வி.மணிமாலா என்ற சகோதரி, பல மன உளைச்சல் காரணமாக, நேற்றுத் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 

மருத்துவர் முறையாக பணிக்கு வராததற்கு செவிலியற்கு விளக்கம் கேட்டு குறிப்பானை(மெமோ) இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கபட்டு உள்ளது.

மேலும் உயர்மருத்துவ அலுவலர் அவர்கள் செவிலியரை முறையற்ற வார்த்தைகளால் மனம் புண்படும்படியாக பேசியுள்ளார்.
 
இதனால் மனம் மொடிந்த செவிலியர் தூக்கிட்டு தன் இன்னுயிரை மாய்த்து கொண்டார்.
தற்கொலை தவறு என்றாலும்
 
இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்பட காரணம்
 
மருத்துவர் பணிக்கு வருவதையும்/வராததையும் கண்காணிப்பது யாருடைய பணி ?
அவ்வாறு மருத்துவர் பணிக்கு வரவில்லை என்று செவிலியர் தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்தால் அதன் பின்னர் அந்த மருத்துவர் அந்த செவிலியர் எவ்வாறு இணக்கமாக பணி புரிய முடியும்?
 
செவிலியருக்கு கீழ் பணி நபர்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றாலும் மேல் பணி புரியும் மருத்துவர்கள் சரியாக பணியை செய்யாவிட்டாலும் செவிலியர்கள் தான் பாதிக்கபட வேண்டுமா?
 
மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் அரசுக்கும் எந்த பிரச்னையும் வராமல் செவிலியர்கள் ஒரு சுமைதாங்கி போல் இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சுமந்து வருகின்றனர். இதை அனைவரும் அறிவர்.
 
ஜாதி என்ற ஒன்றால் தான் அதிகாரம் வர்க்கம் அடிமை வர்க்கம் என்ற இரண்டு பிரிவு இருக்கிறது என்ற காரணத்தால் தான் கல்வி எல்லாரும் பெற வேண்டும் இதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்வு கொண்டு வரலாம் என்றால் தற்பொழுது கற்ற கல்வியால் இவர்கள் அதிகாரவர்க்கம் இவர்கள் அடிமை வர்க்கம் என்ற சூழல் வந்து விட்டது.

பொதுவாகவே பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செவிலியர்களை அடிமைகளாகவே கருதுகிறார்கள் மக்களும் சரி மருத்துவர்களும் சரி.
 
மருத்துவர்கள் இல்லையென்றால் மக்கள் செவிலியர்களை மேல் கோபம் கொள்வார்கள், இதற்கு தீர்வு என்ன?
 
மருத்துவர் இல்லாமல் மருத்துவம் செய்யதால் சட்டப்படி குற்றம்.
அதை செய்யவில்லை என்றால் மக்கள் பார்வையில் அது குற்றம்.

 
மணிமாலா மரணம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
 
இதற்கு காரணமாணவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் இததான் மணிமாலா மரணத்திற்கான விலையா? தீர்வா?
 


மரித்தது மணிமாலா மட்டுமல்ல செவிலியமும் தான்