Sunday, September 24, 2017

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்

அன்புடையீர்!

இன்று 21.09.17 காலை முதல் நமது மாண்புமிகு தமிழ்நாடு அரசு துணைமுதல்வர் ஐயா அவர்களுடன் சந்திக்கும் பொருட்டு நமது மாநில சங்க நிர்வாகிகள் காத்திருந்தோம்.

_இடையே சில மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாண்புமிகு துணை முதல்வர் ஐயா_ _அவர்களுக்கு மீட்டிங் இருந்ததால் நம்மை சந்திக்க காலதாமதம் ஏற்பட்டது.அதனால் இடையே மாண்புமிகு நமது துறைஅமைச்சரை சந்தித்து நமது கோரிக்கைகளை வழியுறித்தினோம் என்ற செய்தியை விரிவாக மாலையில் தங்கள் அனைவருக்கும் தெரியபடுத்தியிருந்தோம்.

காலதாமதம் ஏற்பட்டதால் நமது மாநில நிர்வாகிகளை மாண்புமிகு துணமுதல்வர் ஐயா வீட்டில் சந்திக்க நேரம் ஒதுக்கி அதிகாரிகள் மூலம் எங்களுக்கு தெரியபடுத்தப்பட்டது.

நாங்கள் மாண்புமிகு துணைமுதல்வர் ஐயா வீட்டிற்கு சென்றபோது,எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் கூட்டம் அலைமோதிய போதிலும், எங்களை அனைவரையும் அலுவலகத்தில் அழைத்து அமரவைத்து பேசும்போது மணி சரியாக 10 pm

நாம் குடுத்த கோரிக்கைகளை நிதானமாக வரி வரியாக படித்து எங்களிடமும் சில கேள்விகளை மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள் வினவினார்.

எத்தனை வருடம் தாங்கள் படிக்கிறீர்கள்,3 1/2 வருடம் படித்தும் ஏன் டிப்ளோமா ஐ டிகிரியாக இன்னும் மாற்றவில்லை, ஆறாவது ஊதியக் குழு மற்றும் ஒன்மேன் கமிசனில் உங்கள் சம்பள உயர்வு மற்றும் படிகளை ஏன் வாங்கவில்லை என்று வினவினார்.

நாங்கள் தக்க சான்றுகளுடன் எடுத்துக்கூறியவுடன் மிகவும் கவனமாகவும் பறிவுடனும் கேட்டறிந்தபின்னர்,நமது கோரிக்கைகளுக்கான பைனான்ஸ் அப்ருவலுக்கு தாம் ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் எங்கள் முன்னிலையில் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு_ _செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் ,நாளை தாங்கள் சென்னையில் இருப்பீர்களா என்று வினாவினார்,

நமது துறை அமைச்சர் இங்கு தான் இருப்பேன் என்றதும் நாளை காலை 11மணியளவில் நேரம் ஒதுக்குங்கள், நானும் வருகிறேன் செவிலியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசலாம் என கூறி ,எங்களிடமும் நாளை உங்கள் துறை அமைச்சர் முன்னிலையில் இன்னும் தெளிவாக பேசி உங்கள் குறைகளை கண்டிப்பாக நிவர்த்தி செய்கிறோம் என்று கனிவோடு கூறினார்கள் நமது மாண்புமிகு துணை முதல்வர் ஐயா அவர்கள் என மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்


தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்

Saturday, September 9, 2017

MRB மூலம் பணி நியமனம் செய்யபட்ட எங்களுக்கு எப்போது பணி நிரந்தம்

MRB மூலம் தொகுப்பூதிய பணி நியமனம் பெற்ற பெரும்பாலான சகோதரிகள் தொகுப்பூதிய காலமான இரண்டு வருடம் முடிந்த உடன் பணி நிரந்தரம் செய்யபடுவோமா என ஐயம் கொள்கின்றனர்.
ஆணையை முழுவதுமாக ஆராய்ந்தால் விளக்கம் விளங்கும்.

தங்களுக்கு பணி நியமன ஆணையில் இரண்டு வருடம் தொகுப்பூதிய காலமே குறிப்பிடபட்டு உள்ளது என பெரும்பாலான பதிவுகள் தெரிவிகின்றன.
 
இதுவரை உள்ள நடைமுறை மற்றும் அரசு ஆணை தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு வருடம் கண்டிப்பான முறையில் தொகுப்பூதியம், அதன் பின்னர்

1. இருக்கின்ற நிரந்தர காலி இடங்கள்(நிரந்தர செவிலியர்கள் பணி ஓய்வு மூலம் ஏற்படுவது)

2. ஏற்படுகின்ற நிரந்தர காலி பணி இடங்கள்(செவிலியர்கள் பணி உயர்வு GRADE II பெறுவதன் மூலம்ஏற்படும் காலி பணி இடங்கள்),

3.உருவாக்க படுகின்ற நிரந்தர காலி பணி இடங்களை (புது மருத்துவகல்லுரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உருவாகத்தை பொருத்து  ஏற்படுவது) அவர்கள் சீனியாரிட்டி முறையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யபடுவார்கள்.
 

முக்கிய குறிப்பு தமிழ்நாட்டின் மொத்த நிரந்தர செவிலியர் எண்ணிக்கை ஏறக்குறைய 15000 மேற்பட்டவர்கள் 

தொகுப்பூதிய செவிலியர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 மேற்பட்டவர்கள்


தராசு போல ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்தால் இன்னொரு பக்கம் எண்ணிக்கை ஏறும்.

ஒரு வேளை 2006 செய்யப்பட்டது போல் மொத்தமாக பணி நிரந்தரம் செய்யபட்டாள் தாங்கள் பணி புரியும் நிலையத்திலேயே பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது. நடந்தால்

விரைவில் நடந்தால் GR II விரைவில் CB TO REGULAR நடக்கும்

தமிழ்நாடு அரசு நர்சுகள்  சங்கம்

 முக்கிய அறிவிப்பு
         சேவை மிகுந்த நமது செவிலிய சொந்தங்களுக்கு மகிழ்ச்சியான தகவல் . நமது மாநில நிர்வாகிகள்  சுகாதாரதுறை அமைச்சர் மற்றும் துறைசெயலாளரை இடைவிடாது சந்தித்து முயற்சி செய்ததன் விளைவாக 800 செவிலிய கண்காணிப்பாளர் நிலை- ||  பணியிடங்களுக்கு (panel list 6814 முதல் 7770 )வரை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பட்டியலில் உள்ளவர்கள் உடனடியாக தங்களது particulars ஐ DMS அலுவலகத்திற்கு அனுப்பவும்.


       இதனால் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் விரைவாக காலமுறை ஊதியம் பெறவும் தங்களுக்கு உடனடியாக பதவி உயர்வு கிடைக்கவும் சங்கம் சார்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

         மேலும் Grade 1 panel வெளிவந்து இரண்டு மாத காலமாகியும் 40 நபர்களின் particulars மட்டுமே வந்துள்ளது. Particulars வராதவர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக particulars DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.
       நன்றி
தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்
💐💐💐💐💐