
தமிழகம் முழுவதும் நாம் கேள்விபட்ட கருவேலம் மரங்கள் பிரச்னை முதல் குழந்தைகள் திருட்டில் மருத்துவமனைகளில் கேமெரா பொருத்துதல், ஸ்கேன் சென்டர் பிரச்சனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை, உடல் உறுப்பு மாற்று, புற்றுநோய்கான சிகிச்சை மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்று தருதல் போன்ற பல்வேறு தளங்களில் இவரின் பங்கு அளப்பரியது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறைபற்றி கேள்விபட்டு அதனை சரி செய்ய தன்னால் இயன்றதை செய்வேன் என உறுதி அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிவுற்ற வழக்கில் மாண்புமிகு நீதி அரசர் மதுரை மருத்தவகல்லூரியில் உள்ள 800 அதிகமான செவிலியர் பற்றாக்குறை பற்றி கேள்விபட்டு அதற்கான விளக்கம் கேட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.
No comments :
Post a Comment