மருத்துவரை
கண்டித்து போராட்டம் செய்த
மருந்தாளுனர்
சங்க தலைவரையும்,
மருத்துவமனை
மூத்த செவிலிய கண்காணிபாளரையும்
போலீசார்
கடுமையாக தாக்கினர்.
முதலில்
மருத்துவர்களை பற்றி பார்போம்.
அநேக மருத்துவர்கள் அநேக
இடங்களில் மருத்துவமனையில் உடன் பணி புரியும் மருத்துவதுறை சகஊழியர்களை அடிமைகள் போல் எண்ணி கொண்டு வார்த்தைகளையும் அதிகாரங்களையும் மற்றவர்கள் மேல் தவறாக
பிரயோகின்றனர்.
இதனை சரி செய்ய
வேண்டி நாம் சென்று தெரிவிக்கும் மேலதிகாரிகள் யார்
JD ஒரு மருத்துவர்
DD ஒரு மருத்துவர்
DMS ஒரு மருத்துவர்
DME ஒரு மருத்துவர்
DPH ஒரு மருத்துவர்
சில நேரங்களில்
IAS அதிகாரியும் மருத்துவர்
அமைச்சரும் மருத்துவர்
கண்டிபார்களா தண்டிபார்களா ??????????????????????????????????????????
(இங்கு மருத்துவர்கள்
என்ற வார்த்தையை TERM
யை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும். இதில்
நல்லவர்கள் உள்ளனர் அவர்கள் விதிவிலக்கு)
எத்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு சரியான
நேரத்திற்கு வந்து பணியை விட்டு சரியான நேரத்திற்கு செல்கின்றனர்.
சத்தியமாக மருத்துவர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.
அவர்களுக்கு கெட்ட பெயர் வரமால், அரசுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்னையும்
அவபெயரும் வராமல் வரும் நோயாளிகளுக்கு தங்களால் முடிந்த வரை இயன்ற சிகிச்சியை
அளித்து, வரும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சையின் விவரம் அறியாமல் அளித்த
சிகிச்சையில் அறியாமையால் குறை கண்டுபிடித்து புகார் அனுப்பினால் அதற்காக
மேலதிகாரிகளிடமும் மருத்துவரிடமும் திட்டுகளையும் பெற்று கொண்டு மேலதிகாரியிடம்
மெமோ வாங்கி கொண்டு இறுதியில் பழிகடா ஆக்க படும் செவிலியர்கள் என்ன பாவம் செய்தனர்.
சில மருத்துவர்கள் மரியாதையை பெறுவதற்காக பல்வேறு இடங்களில் இவ்வாறு நடந்து
கொள்கின்றனர். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், மரியாதையை மதிப்பதால் தான் வருமே தவிர
மிதிப்பதால் அல்ல.
மருத்துவர்கள் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொள்வது நல்லது.
காவல் துறைக்கு:
ஒரு மூத்த செவிலியரை அதுவும் ஒரு கண்காணிப்பாளரை அடிக்கும் அளவுக்கு
துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை
காவல் துறை நண்பர்கள் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் காவல் துறை தான்,
கடவுள் இல்லை.
பிரச்னை என்பதால் மருத்துவதுறை நண்பர்கள் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர் அடிக்குதுனா பிரச்னை பண்றோம்.
ஒரு பொண்ணு செத்து இருக்கு, ஒரு நாள் போராட்டம் பண்ண கூடாதா
அப்படியே போராட்டம்னா பொங்கி எழுந்துருவிங்களோ,
அப்படியே நேர்மைக்கும் நீதிக்கும் கட்டுபட்டவர் ஐயா.
அரசியல் கட்சி தலைவருக்கு எதாவது ஒன்னுனா கட்சி காரங்க எத்தனை பேரு பொதுமக்களுக்கு
இடஞ்சாலா எத்தனை போராட்டம் பண்றாங்க, அங்க ஒன்னும் கலட்டுனா மாதிரி தெரியல,
வேடிக்கை தான் பார்த்திங்க.
உங்க கிட்ட துப்பாகியும் காக்கி யுனிபாம்மும் இருந்தா என்ன வேணா
செய்விங்களா
பீரங்கி வைத்து இருந்த வெள்ளைகாரனே
போராட்டத்தை பார்த்து பின்வாங்கியவன் தான்
ஒரு பெண் என்றும் பாராமல்
அதுவும் பணியில் யுனிபாம்மில் உள்ள ஒரு செவிலியர்
மூத்த செவிலிய கண்காணிப்பாளர்
மேல் கைவைக்கும் அளவுக்கு துணிச்சல்.
இங்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள்
செவிலியர்கள், மருந்தாளுனர்கள், மற்ற மருத்துவதுறை நண்பர்கள் வெளியே வந்து
நின்றோம் என்றால் என்ன ஆகும் நிலைமை
காவல் துறை நண்பர்கள் தமிழகம் முழுவதும் ஒரு லச்சம் இல்லை ரெண்டு லச்சம்
கூட இருந்து விட்டு போங்கள்
உங்களுக்கு காக்க சொல்லி தான் ஆணை தாக்க சொல்லி அல்ல.
உங்களை காக்க
மற்றவர்களை தாக்க
லத்திகளும் துப்பாகிகளும்
அரசால் நீதி துறையால் உங்களுக்கு வழங்க பட்டு இருக்கலாம்.
மருத்துவதுறை நண்பர்கள், செவிலியர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கலாம்.
நாங்கள் காவல் துறை எங்களை காக்க வில்லை, என்று ஒரு நாளோ ஒரு மணி நேரமோ மக்களை
காக்காமல் இருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து விட்டு மருத்துவதுறையினர் மேலே
கை வைக்கவும்.
ஆனால் இங்கு ஒற்றுமை என்ற வார்த்தை ஓங்கி ஒலிக்காததால் தான் இவ்வளவு
பிரச்னை.
சங்கங்கள் என்ன செய்து கொண்டு இருகின்றனர் என்று தெரியவில்லை. வாயில் கண்டனம்
தெரிவித்தால் போதுமா என்பதை நீங்களே ஒரு முறை யோசித்து கொள்ளுங்கள்.
செவிலியர்களுக்கு
செவிலிய சகோதரிகள் சத்தியமாக ஒன்றை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.
செவிலியர்கள் என்றாலே இன்னல்களையும் துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்க
பிறந்த பிறவிகள் தான்.
அது ஏனோ ஆண்டவன் எழுதிய எழுதாத விதி.
இதற்காக நம்மை நாம் மாய்த்து கொள்வது தீர்வாகாது.
பிரச்சனைகளை எதிர்கொள்வோம் வெறியோடு, அல்லது வாழ்வோம் வேதனைகளோடு.
இதனை எழுதும் பொழுது வேதனைகளோடும் வெறியோடும் கண்களில் கண்ணீர் வருகிறது
என்பது உண்மை.
காவல்
துறைக்கும் மருத்துவர்களுக்கும்
மேலே எழுதிய
வார்த்தைகளில் வருத்தம் இருக்கலாம்
வார்த்தைகளில் வருத்தம் இருக்கலாம் வலியோடு எழுதியதால்
ஆனால் எங்களுக்கு
உங்கள் மேல் வஞ்சனை, வன்மம்
இல்லை,
வலிகளோடு நாங்கள்
விழிகளோடு நீங்கள் இருந்தால் நல்லது என்பதே எங்கள் ஆசை.
காலம் மாறும் களம் மாறும் கதைகள் மாறும், மாற்றப்படும்.
அதற்கான நேரம் வரும்.
ரவி சீத்தாராமன்.