www.facebook.com/CBNURSES
முக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.
Wednesday, December 28, 2016
Finally
வருகிற 03:01:2017 ல் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 இடமாற்றம் கலந்தாழ்வு நடைப்பெறும் .
மேலூம் 04-01-2017 அன்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 க்கான பதவி உயர்வு கலந்தாழ்வு DMS. ல் 6 வது மாடியில் 272 பேருக்கு நடைப்பெறும்.
அதனை தொடர்ந்து நமது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு வர இருக்கிறது.
இதற்காக உழைத்த அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி
Saturday, December 17, 2016
GRADE II - CB TO REGULAR ?
Monday, December 5, 2016
சகாப்தம் சரிந்தது.
தமிழகத்தையும் தமிழக மக்களையும்
நிரந்தரமாக கண்ணீரில் மிதக்கவிட்டு
இன்று அம்மா மறைந்தார் .
பெண் என்ற வார்த்தையே அம்மாவால்
பெருமைப்பட்டது.
எல்லா சூழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும்
கடந்து நின்றார் வென்றார்.
அம்மா.
பேசிய கடைசி வார்த்தை
விட்ட கடைசி மூச்சு
எங்களால்
எங்கள் மருத்துவதுறையால்
உங்களை காக்க முடியவில்லையே என்று எண்ணும்போது
கண்ணீர் வருகிறது தாயே
மன்னியுங்கள் எங்களை
முடிவெடுத்த அவனோடு முடியவில்லை எங்களால்
வரலாறே உங்களை வணங்கும்
Sunday, December 4, 2016
மதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிரந்தர செவிலிய பணி இடங்கள் கனவா நனவா?

தமிழகம் முழுவதும் நாம் கேள்விபட்ட கருவேலம் மரங்கள் பிரச்னை முதல் குழந்தைகள் திருட்டில் மருத்துவமனைகளில் கேமெரா பொருத்துதல், ஸ்கேன் சென்டர் பிரச்சனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாகுறை, உடல் உறுப்பு மாற்று, புற்றுநோய்கான சிகிச்சை மற்றும் பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் பெற்று தருதல் போன்ற பல்வேறு தளங்களில் இவரின் பங்கு அளப்பரியது.
அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறைபற்றி கேள்விபட்டு அதனை சரி செய்ய தன்னால் இயன்றதை செய்வேன் என உறுதி அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மதுரை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிவுற்ற வழக்கில் மாண்புமிகு நீதி அரசர் மதுரை மருத்தவகல்லூரியில் உள்ள 800 அதிகமான செவிலியர் பற்றாக்குறை பற்றி கேள்விபட்டு அதற்கான விளக்கம் கேட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார் திரு. ஆனந்தராஜ் அவர்கள்.
Tuesday, November 29, 2016
கருத்து பரிமாற்ற செயலியில் பகிரப்பட்ட கருத்துகள்(Whatsapp)
செவிலிய சமூகத்தின் முன்னேற்றதிற்காக பணி நிரந்தரதிற்காக பல்வேறு சிரமங்களுகிடையே பாடுபட்டு கொண்டு இருக்கும் அனைத்து தொகுப்பூதிய மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கு அனைத்து செவிலியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி
கீழ்க்கண்டவை நமக்கு கருத்துபரிமாற்ற செயலியில் வந்தவை.
****** (எண்ணிக்கை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது).*****
********(தேதியும் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது)******
அன்பார்ந்த செவிலிய சகோதரிகளே!!!!
இன்று நமது சங்கத்தின் மூலம் தெரிவிப்பது என்னவெனில் , நமது சங்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் சங்க செயலரின் பெறுமுயற்சியுடன் மேற்கொள்ளபட்ட Creation posts for Gr l-13,Grll -260ஆகியவை நமக்கு நமது அரசின் GO NO272/25.11.16 படி பெறப்பட்டதுஎன்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.(Go-வின் விளக்கவுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
இதன் படி New creation -13+vaccines ஏறத்தாழ-70ம் ,G-ll New creation-260+Retirement+promotion vaccines ஏறத்தாழ 400 பேருக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் மேலும் New creation staff nurse -Regular post ஏறத்தாழ 750 க்கு Go-டிசம்பர் இறுதிக்குள் அரசிடமிருந்து கிடைக்கப்பெறுவோம்.
Promotion vacancies+New creation சேர்த்து ஏறத்தாழ 1300பேர் தொகுப்பூதியத்திலிருந்து நிரந்தர பணிக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் நமது சங்கத்தேர்தல் நாள் டிசம்பர் மாத இறுதிக்குள் தெரிவிக்க Election commissioner -ரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, உறுப்பினர் பட்டியல் வராத காரணத்தால் தான் காலதாமதம் ஏற்பட்டது.பட்டியல் முழுமையாக கிடைத்த பின் விரைவில் தேதி அறிப்பதாக உறுதி கூறினார்.
சென்னை,தலைமை
செயலகத்தில் மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் மற்றும் மருத்துவ இயக்குனா் பெருமக்களுடன் சந்திப்பு:
💐💐💐💐💐💐💐💐💐💐
நேற்று(28/11/2016)
தலைமை செயலகம்,சென்னையில் திருமதி.K.வளா்மதி அவா்களின் தலைமையில் திருமதி.காளியம்மாள் மற்றும் குழுவினா் அனைவரும் மாண்புமிகு.சுகாதாரதுறை அமைச்சா் அவா்களையும் இயக்குனா்,(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்)அவா்களையும் சந்தித்தனா்.
அமைச்சா் அவா்களின் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:
-----------------------------------------
♦தஞ்சாவூா் மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள செவிலிய காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதாக உறுதியளித்தாா்.
♦செவிலிய கண்காணிப்பாளா் நிலை - II ல் மொத்தம் 260 நபா்களுக்கான கலந்தாய்வு ஆணை
இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியிடுவதாக தொிவித்தாா்.
♦செவிலியா் கண்காணிப்பாளா் நிலை - I கலந்தாய்வுக்கான விளக்கம் கேட்டபோது அமைச்சாின் தனிச்செயலரை அழைத்து விளக்கம் கேட்டாா். அதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் ஆனால் சற்று கால தாமதம் ஆகும் எனவும் தொிவித்தாா்.
♦மொத்த செவிலிய கண்காணிப்பாளா் நிலை - I மற்றும் நிலை - II கான கலந்தாய்வு விரைவில் நடத்தி அந்த காலிப்பணியிடங்களில் மீதமுள்ள ஒப்பந்த செவிலியா்களை பணி நியமனம் செய்ய நமது குழுவினரால் வேண்டுகோள் வைத்ததில்,அமைச்சா் அவா்கள் உடன் ஆவண செய்வதாக உறுதியளித்தாா்.
♦எங்களது செவிலியா்களுக்கான கோாிக்கைகளை கவனத்துடன் கேட்டறிந்து, ஆவண செய்யவதாக உறுதியளித்த மாண்புமிகு.சுகாதார
துறை அமைச்சா் அண்ணன் அவா்களுக்கு தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக கோடானு கோடி நன்றிகளை தொிவித்துகொள்கிறோம்.
மருத்துவ இயக்குனா் அவா்களின் சந்திப்பின்
சிறப்பம்சங்கள்:
*********
♦விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுாியும் செவிலியருக்கு ஏற்பட்ட சிக்கலை தீா்க்கும் பொருட்டு, சகோதாியின் குறைகளை இயக்குனா் அவா்களிடம் விளக்கியதில், இயக்குனா் அவா்களும் நமது செவிலியாின் பிரச்சனைகளை DD யிடம் பேசி விரைவில் தீா்வு காண்பதாக உறுதியளித்தாா்.
♦தேனி மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில்,சில தொலைக்காட்சி நிறுவனங்களால் வேண்டுமென்றே சித்தாிக்கப்பட்ட செய்திகளால் எங்களது செவிலியா்களுக்கும், செவிலிய கண்காணிப்பாளா்களுக்கும் எந்த சிக்கலும் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களது கோாிக்கைகளை ஏற்று Enquiry மட்டும் வைத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கும், துறை மூலம் கண்டனம் தொிவிப்பதாக உறுதியளித்தாா்.
மருத்துவ இயக்குனா் அவா்களுக்கும் தமிழக அரசு அனைத்து செவிலியா்கள் சாா்பாக மனமாா்ந்த நன்றிகளை தொிவித்துக்கொள்கிறோம்.
Sunday, November 13, 2016
Tuesday, November 8, 2016
மகப்பேறு விடுப்பு காலம்- 9 மாதமாக உயர்வு
மகப்பேறு விடுப்பு காலம்
Wednesday, October 19, 2016
Tuesday, October 18, 2016
Friday, October 14, 2016
Saturday, October 8, 2016
பணி நிரந்தரம்.......2009 பேட்ச்-PROPOSAL CALLED...
உடனடியாக அதாவது 19/10/2016 முன் DMS அலுவலகத்திற்கு அனுப்புமாறு DMS அலுவலகத்தில் இருந்து அனைத்து இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பபட்டு உள்ளது.
ரவி சீத்தாராமன்
9789 34358 91
Sunday, October 2, 2016
Friday, September 23, 2016
NAME LIST-CB TO REGULAR-26/09/2016
இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்
Thursday, September 22, 2016
26/09/2016 தொகுப்பூதியம் இருந்து நிரந்தர கலந்தாய்வு உறுதி-அதிகாரபூர்வ தகவல்
ஆனால் எத்தனை பேருக்கு பணி நிரந்தர கலந்தாய்வு என்பது நாளை தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.
நாளை GRADE II கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதில் ஏற்படும் காலி பணி இடங்களை பொருத்து எத்தனை பணி இடங்கள் என்ற இறுதி பட்டியல் வர வாய்ப்பு இருக்கிறது. இது நமது அனுமானம். அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் பதிவேற்றம் செய்யப்படும்.
Monday, September 19, 2016
26/09/2016 பணி நிரந்தர கலந்தாய்வு.........................
Friday, September 16, 2016
Saturday, September 10, 2016
Wednesday, August 3, 2016
Up-to 476
💐தமிழ் நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்💐
04.07.2016 நாளை பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது..
307 நபர்களுக்கு
S.no 151 முதல்
458 வரை உள்ளவர்களுக்கு
நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது..
தற்பொழுது
சங்கத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியினால்
18 விடுபட்ட (Absent and Abscanded)இடங்கள்
கண்டறிந்து ,உயர் அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து தற்பொழுது அனுமதி பெற்றுள்ளோம்..
S.no 151 முதல்
S.no 476 வரை உள்ளவர்களுக்கு 04.07.2016 நாளை கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தற்பொழுது நமக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்
பட்டுள்ளது...
எனவே,தற்பொழுது கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள
S.no 458 முதல் 476 வரை உள்ள நபர்களுக்கு
இந்த தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்....
மேலும்,நாளை கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பவர்களில் சிலரது Service Particulars இன்னும் வந்து சேரவில்லை...
அவர்களுடைய விவரங்கள் பின்வருமாறு அனுப்பப்படுகிறது...
கலந்தாய்வில் கலந்து கொள்ள இருப்பவர்களில்,
Service Particulars அனுப்ப இயலாதவர்கள் நேரில் வரும் பொழுது
கண்டிப்பாக கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம்....
இப்படிக்கு
தமிழ் நாடு அரசு
ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்
Upto 476
Saturday, July 30, 2016
ஆணைகள் மற்றும் பெயர் பட்டியல்
Friday, July 29, 2016
மகிழ்ச்சி
வரும் வாரம் செவ்வாய் கிழமை (2/8/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு DMS வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து வரும் வாரம் வியாழக்கிழமை (4/8/2016) அன்று தொகுப்பூதியத்தில் பணி ஆற்றி வரும் 2009 பேட்சை சேர்ந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்க பட வில்லை.
கிடைத்த தகவலின் அடிப்படையில் 458 ரேங்க் வரை அதாவது 307 செவிலியர்களுக்கு என்று தெரிவிக்க பட்டு உள்ளது.
இருப்பினும் அதிகாரபூர்வ பெயர் பட்டியல் வந்த உடன் வெளியிடப்படும்.
ரவி சீத்தாராமன்
9789 3435 91
Sunday, July 24, 2016
பி.எஸ்சி நர்சிங் விண்ணப்பம்
சென்னை: 'பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25ல் துவங்குகிறது.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:
மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, ஜூலை, 24ல் வெளியாகும். ஜூலை, 25 முதல் ஆக., 4 வரை, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆக., 5க்குள் தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டும். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்ப படிவங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, July 20, 2016
MRB பணி நியமனம்- புதிதாக 400 தொகுப்பூதிய செவிலியர்கள்
http://www.mrb.tn.gov.in/notifications.html
நாம் ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது போல தற்பொழுது MRB மூலம் முதல் கட்டமாக 400 செவிலியர்கள் தேர்தெடுக்கபட உள்ளனர்.
இ்தனை முன்னிட்டு அந்த 400 செவிலியர்களின் பெயர் பட்டியல் அதாவது 8001 முதல் 8400 வரை அதிகாரபூர்வமாக MRB இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது.
அந்த பட்டியில் நமது இணைய தளத்திலும் செவிலியர்கள் பார்வைகாக தரவேற்றம் செய்யபட்டு உள்ளது.
www.tnfwebsite.com
www.cbnurse.com
பெயர்களை காண scroll செய்து பார்க்கவும்
ஏற்கனவே சர்டிபிகேட் verification முடித்தவர்கள் குழம்ப தேவை இல்லை.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செவிலிய காலி பணி இடங்களை நிரப்பியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தமிழக சுகாதார துறைக்கும் செவிலியர்கள் சார்பாக
நன்றி
ரவி சீத்தாராமன்
(9789 3435 91)