Monday, November 30, 2015

புதிய DMS?????????

 
மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்கள் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Sunday, November 29, 2015

GRADE II-REGULAR COUNSELING ?????????????????????????

வரும் மாதம் அதாவது டிசம்பர் மாதம் GRADE II கவுன்சிலிங் மற்றும் ரெகுலர் கவுன்சிலிங் இருக்க கண்டிப்பான முறையில் வாய்ப்புள்ளதாக நமது உளவுதுறை வட்டாரங்கள் தெரிவிகின்றது. இது அதிகாரபூர்வ தகவல் அல்ல.


                                       ரவி சீத்தாராமன்MMU RURAL ALLOWANCE 500 GO

Wednesday, November 4, 2015

2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:தொகுப்பூதியம் என்ற அரை ஆயுள் தண்டனையில் இருந்து நமது 2008 பேட்சை சேர்ந்த நண்பர்கள் 50 பேர் விடுதலை பெற்று செல்கின்றனர்.

2008 பேட்சை சேர்ந்த அடுத்த 961 முதல் 1012 வரை உள்ள செவிலியர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து நேரிடியாக பணி ஆணைகள் இன்று அனுப்பபட்டு உள்ளது.

இப்படியே ஒரு 3500  ஆணைகளை ஒரே நாளில் அனுப்பினால் கோயில் கட்டலாம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி.


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்


Monday, November 2, 2015

உண்ணாவிரதம்


பல குழப்பமான சூழலில் பல செவிலியர்கள் உள்ளனர்.

 சில தனிப்பட்ட நபர்களின் முட்டாள் தனத்தினால் இயக்கம் தோல்வி அடைய கூடாது மேலும் அரசிற்கு இது ஏளனமான பார்வையை நம் மேல் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் இது சமந்தமான தெளிவான விளக்கத்தை இப்பொழுதும் கூட தர யோசிக்கிறோம், .


மேலும் செவிலிய இயக்கத்தை ஒரு அரசியல் சார்ந்த பாதையில் இயக்குவதில் உடன்பாடு இல்லை.

ஆனால் புரிகிறது இருக்கின்ற இரண்டு மாதத்தில் இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா என்று.

மேலும் நாம் அனைவரும் பொதுவாக நினைப்பது மற்ற பிரச்னை எல்லாம் இருக்கட்டும் எல்லாரும் ஒற்றுமையாக நமது பலத்தை நிரூபிக்க வேண்டும் இந்த சூழலில் என்று.

ஆனால் இன்னொரு பக்கம் பல விஷயங்களை யோசித்து தான் செய்ய வேண்டியுள்ளது.


சங்கம் என்பது நமது செவிலியர்களின் மேல், நமது 

ஒற்றுமையின்மேல் தான் நம்பிக்கை வைக்க 

வேண்டும். ஒரு கட்சியின் மேல் அல்ல

உண்ணவிரதிற்கு செல்லும் செவிளியர்களுக்கு 

ஏதேனும் பிரச்னைஎன்றால் சங்கமாக இணைத்து 

சரி செய்ய திராணி வேண்டுமே அன்றி, 

ஒரேஒருவரின் பலத்தில் நாம் எத்தனை 

நாள் நிற்க முடியும்.

தனித்து செயல்படுவதற்கும் தனிதன்மையோடு செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது..

இதில் நாங்கள் கலந்து கொள்ள வில்லை என்றால் எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று அர்த்தம் இல்லை, செவிலியகளின் பணி நிரந்தரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அர்த்தம் இல்லை. கடந்த ஐந்து வருடமாக அதற்கு தானே அனைவரும் முயன்று கொண்டு இருக்கிறோம்.

இருபினும் பல முட்டாள் தனமான முடிவுகளை தனது தனிப்பட்ட பெயருகாகவும், தான் சார்ந்த இயக்கதிற்காகவும் சிலர் எடுத்து உள்ளனர்.

நமக்கு தேவை தலையாட்டி பொம்மைகள் அல்ல தலையையே ஆட்ட கூடிய பொம்மைகள்.

போராட்டத்தால் ஏதேனும் செவிலியர்களுக்கு பிரச்னை என்றால் கடைசி வரை உடன் இருந்து கரை ஏற்ற வேண்டும்.
சில நண்பர்கள் தலைமை பதவியை தராததால் இவ்வாறு பாலிடிக்ஸ் செய்கிறோம் என்று எண்ணுகின்றனர். அப்படியல்ல கொடுக்க பட்டாலும் அதை நாங்கள் ஏற்று கொள்ள போவதும் இல்லை, நமக்கு தேவை திறம்பட செயலாற்றகூடிய நபர்கள்.

ஐந்து வருடமாக ஒரே ஒரு மீட்டிங் அதுவும் நாம் இறுதியாக வைத்த மீடிங்கில் கலந்து கொண்ட செவிலியருக்கு தலைவர் பதவி அளிக்க பட்டதில் இருந்தே எப்பேர்பட்ட நபர்களை ஒருவர் தேர்தெடுத்து உள்ளார்கள், உண்மையை சொன்னால் தேர்தேடுக்கபட்ட நபர்கள் அல்ல தனி நபரால் நியமிக்கபட்டவர்கள். இவர்கள் தலைமையில் போக எங்களுக்கு விருப்பம் இல்லை.

இதை ஒரே நாளில் உடைந்து ஏறிய எங்களால் முடியும் என்ற போதிலும் அது எங்கள் விருப்பம் அல்ல.
உண்ணாவிரத்தில் நாங்கள் கலந்து கொள்வதை சில தனிப்பட்ட நபர்கள் விரும்ப வில்லை. அது மதுரையில் நடந்த கூட்டத்திலேயே தெரிந்தது. மதுரை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் தெரியும்.
மேலும் தலைமை என்பது பணி நிரந்தரம் சமந்தமான முயற்சிகளில் நினைத்தால் வருவது போவது அல்ல,

மேலும் உண்ணாவிரத்தில் நாங்கள் கலந்து கொள்ள வில்லை என்ற காரணத்தால் நீங்களும் கலந்து கொள்ளாதிர்கள் என்று மிக கேவலமான பாலிடிக்ஸ் செய்ய விருப்பம் இல்லை. எங்களுக்கு தேவை அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம்


எங்களது நிலை புலி வாலை பிடித்த கதைதான்.

அதற்காக இதோடு அனைத்தையும் விட்டு விட்டு சென்று விட்டோம் என்று அர்த்தம் இல்லை. பணிகள் தொடரும் அனைவர்க்கும் பணி நிரந்தரம் வரும் வரை, முயற்சிகள் தொடரும் முடிவு கிடைக்கும் வரை.நல்லதே நடக்கும்.

ரவி சீத்தாராமன்.

Sunday, November 1, 2015

செவிலியர்களின் பார்வைக்கு

ஓவ்வொரு நாளும் இணையதளத்தை ஆர்வமுடன் பார்க்கும் பொழுது எந்த விதமான தகவலும் இல்லை என்று அனைவரும் வருந்துவதை உணர்கிறோம்.


நாங்களும் அறிவோம் நமது செவிலிய சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்பு என்ன,
அடுத்த GRADEE II கவுன்சிலிங் எப்போது,
ரெகுலர் கவுன்சிலிங் எப்போது,
எத்தனை பேருக்கு,
இந்த வருட இறுதிக்குள் எத்தனை பேருக்கு வரும்,
புதிய பணி இடங்கள் உருவாக்கபட்டு உள்ளதா,
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளலாம கூடாத,
2011 பேட்சுகு எப்போது ரெகுலர்,
MRB செவிலியர்களில் மீதம் உள்ள 2000 பேருக்கு எப்போது பணி ஆணை வழங்கபடும், இன்னும்.....................


ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான தகவல் பெறப்பட்டு தரப்படும், முயற்சிகள் முன்னெடுக்கபடுகிறது.

முடிந்தவரை இன்னும் தெளிவாக விரைவாக அப்டேட் செய்யப்படும்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாளி ஊக்கதொகை

தமிழக அரசின் கீழ் தமிழக மக்களுகாக சேவை செய்யும் சரி பணி
செய்யும் ஏழு வருடமாக பணி செய்யும் தொகுப்பூதிய
செவிலியர்களுக்கு?????????????????
 
சம்பளம் தான் மத்திய அரசு தருகிறது, வருடத்திற்கு ஒருமுறை நம்
சுகாதார துறையின் சாதனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும்
பங்கு உண்டு என்பதை கருத்தில் கொண்டு அல்லது கருணை
கொண்டு எதாவது வழங்கலாமே
 
 
இதுல 50000 சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு தீபாளி
கொண்டாட 5000 முன்பணம்
 
தொகுபூதியத்தில் பணி புரியும் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்து விட்டனரா என்ன