2008 படித்து முடித்து 2009 பணியில் இணைந்த தொகுப்பூதிய செவிலியர்களில் அடுத்த 737 ரேங்க் முதல் 859 வரை உள்ள 112 செவிலியர்களுக்கு 4/9/2015 அன்று DMS வளாகத்தில் வைத்து பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதை தொகுப்பூதிய செவிலியர் நலசங்கத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
கலந்தாய்வு வரும் பொழுது எதுவும் எடுத்து வர தேவை இல்லை.
இடையில் ஒரு நாள் தான் உள்ளது. நமது இணைய தளத்தில் செவிலியர் பதிவில் பெயர் பதிந்து உள்ள அனைவர்க்கும் முடிந்த வரை SMS மூலம் தெரிவிக்கபடும்.
நமக்கு தான் ரெகுலர் வந்து விட்டதே என்று எண்ணி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்காமல் செவிலியர் நலன் சமந்தமாக எடுக்கப்படும் முயற்சிகளில் அனைத்திலும் தங்கள் அனைவரின் பங்களிப்பையும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறோம்.
No comments :
Post a Comment