Friday, May 22, 2015




இப்பொழுது உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யபட வேண்டுமெனில் அதற்கான மந்திரம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த பக்கத்தில் தான் உள்ளது.

நாம் எதிர்பார்த்தபடி மக்கள் எதிர்பார்த்தபடியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்கள். அடுத்த முதல்வரும் 100% அம்மா அவர்கள் தான்.

கிட்டத்தட்ட எழாம் வருடத்தில் 1000 மேற்பட்ட செவிலியர்களும் ஐந்தாம் வருடத்தில் 2500 கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புரிகிறோம்.

இந்த வருட இறுதிக்குள் பணி நிரந்தரம் பெற்று விட வேண்டும்.

இறுதியாக ஆனால் உறுதியாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
காலில் விழுவதோ, போராட்டமோ, வழக்கோ, எதுவாக இருந்தாலும் ஒற்றுமையாக ஒருகிணைந்து செயல்பட்டால் தான் வெற்றி.

இந்த மாத இறுதிக்குள் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து அறிவிக்கபடும்.
பிரச்னை என்னவென்றால் சில முதேவிகள், பணி நிரந்திற்காக நாம் முயற்சி மேற்கொண்டால் அரசிடமும் அதிகாரிகளிடமும் எதோ நாம் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவது போல் திரித்து கூறி நம்மேல் மோசமான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் துளி கூட இங்கு யாருக்கும் இல்லை.
சில நேரங்களில் இந்த முத்தேவிகள் எங்களை பற்றி நாங்கள் சுயநலத்திற்காக இவ்வாறு செய்கிறோம், சரி அட பொதுநலவாதிகள் யாரோ அவங்க முன்னின்று செய்யுங்கள் யாரும் தடுக்கவில்லை

ஆக்கவும் விடுவது இல்லை அழிக்கவும் விடுவது.

சரி நீங்கலாவது எங்களுக்காக முயற்சி எடுங்கள் என்றால் அதுவும் இல்லை.
ஒரு விசயத்தை எடுத்து செய்ய வேண்டும், இல்லை செய்ய நினைப்பவர்களை செய்ய விட வேண்டும்.

இங்கு யாரும் சுய விளம்பரத்திற்காகவோ பெயர் விளம்பரத்திற்காக செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை. தங்கத்தோடு செம்பு கலந்தால் தான் நகை செய்யமுடியும் அதுபோல் சில நேரங்களில் சில வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.

என்ன நோட்டை சொல்லலாம் எப்படி நோட்டை சொல்லலாம் என்பதை விடுதது

எடுத்து செய் இல்லை விடுத்து போ

அடுத்த கட்ட பணிகள் குறித்து இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்கபடும்.

அதை ஒழுங்காக அனைவரும் ஒருகிணைந்து செய்தாலே இந்த வருட இறுதிக்குள் சத்தியமாக அனைவரும் பணி நிரந்தரம் பெற்று விடலாம்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatsapp only if important call

Sunday, May 17, 2015

அடுத்த கவுன்சலிங் எப்போது ? எத்தனை பேருக்கு ?






அடுத்த கவுன்சலிங் எப்போது ? எத்தனை பேருக்கு ?

தற்பொழுது 92 செவிலியர்களுக்கு GRADE 1 ப்ரோமோசன் பேனல் வெளியிடபட்டு உள்ளது,

ஏற்கனவே 2014-15 குரிய GRADE II பேனலில் 300 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.

அதே போல் 2015-16 குரிய GRADE II பேனலில் 200 கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளனர்.

இதை தவிர்த்து பத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தபட்டதால் 100 மேற்பட்ட செவிலிய பணி இடங்கள் உருவாக்கபட்டு உள்ளது.

இதை தவிர்த்து பணி ஓய்வு, மற்றும் பணி மாறுதல் போன்றவற்றின் தமிழகம் முழுவதும் நெறைய இடங்களில் செவிலிய காலி பணி இடங்கள் உள்ளது.

இந்த காலி பணிடங்கள்,  தகவல்கள் சரியாக சென்றடையாததின் காரணமாக அவ்வளவு துல்லியமாக நிரப்பபடுவது இல்லை.

அதனால் இந்த தகவல்களை விரைவில் திரட்டவேண்டும்.

வழக்கம்போல் PAYWARD and TRAUMA CARE GO குழப்பத்தில் உள்ளது.

ஆக மொத்தத்தில் ஒரு 500 மேற்பட்ட இடங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் நிரப்பபட வாய்ப்புள்ளது. இது அதிகாரபூர்வமானதோ அல்லது துல்லியமான தகவலோ அல்ல.
PAYWARD and TRAUMA CARE இந்த இரண்டையும் சரியாக முறையில் கேட்டு பெற்று விட்டால் 1000 மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பபடும்.

அதற்கான முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளுவோம்.
இதை தவிர்த்து 2009, 2010 பேட்ச் சகோதரிகள் பணி நிரந்தரம் பெற வேண்டுமானால் சில பெரிய முயற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும். அதையும் விரைவில் செய்ய வேண்டும்.




 ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatspp please if important call

Tuesday, May 5, 2015

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் எப்போது என்று அனைவரும் கேட்கிறார்கள்


ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் நாம் அனைவரும் சென்று கோரிக்கை வைத்தால் தான் வைப்பார்கள். எப்போது என்று தெரிவிக்கிறோம் அப்போது வாருங்கள்.


இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் ரெகுலருக்காக இறுதியாக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இணைந்து முயற்சி செய்வோம். 
.

DME ORDER

DME இல் இருந்து அனைத்து பணி நியமன தபால்களும் JD, DD அலுவலங்களுக்கு அனுப்பபட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது. இந்த வாரம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.