Monday, April 6, 2015

தமிழ்நாடு அரசு செவிலிய சங்க தேர்தல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?

தமிழ்நாடு அரசு செவிலிய சங்க தேர்தல்

யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?

எதற்காக அளிக்க வேண்டும் ?

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த பட வேண்டிய வரும் தமிழ்நாடு அரசு செவிலிய சங்கத்தின் தேர்தல் கேட்க ஆளில்லாத காரணத்தாலும் மேலும் செவிலிய துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த காரணத்தால் பத்து ஆண்டுகளுக்கு ஒரே தலைமை அந்த பதவியை வகித்தது. பல முயற்சிகளுக்கு பிறகு வரும் 18/03/2014 தமிழ்நாடு அரசு செவிலிய சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் தேர்தலில் தொகுப்பூதிய செவிலியர்கள் வாக்களிக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பல குழப்பான சூழல் உள்ளது. உறுப்பினராக 200 வசூல் செய்து கொடுத்து வாக்களிக்க விடவில்லை எனிதில் அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.

மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் வாக்களித்தால் தங்களது நிலை மோசமாகிவிடும் என்ற பயத்தில் அதை பற்றி தெளிவான விளக்கம் அளிக்காமல் இழுத்தடித்து வருவதோடு உறுப்பினர் ஆக விடாமல் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றை பின்னர் பாப்போம்.




அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் செய்ய வேண்டியது என்ன ?

வரும் தேர்தலில் மூன்று அணிகள் போட்டி இடுகின்றன.

அதில் எதாவது ஒரு நல்ல அணிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.
இதுவரை அலசி ஆராய்ந்ததில் கீழ்க்கண்ட நமது TPR அணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

யார் வரவேண்டும் என்று எண்ணுவதை விட யார் வர கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் தாங்கள் பணி புரியும் மருத்துவமனைகளிலும் நமது சீனியர் செவிலியசகோதரிகளிடம் TPR அணிக்கு வாக்களிக்க கேட்டு கொள்ளுங்கள்.

இவர்களுக்கு ஏன் நாம் ஆதரவு அளிக்க வேண்டும் ?

1) அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் MCI விதிபடி நிரந்தர செவிலியர் பணி நிரப்ப

2) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்க

3) 3000 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யபட

4) செவிலியர்களுக்கு பணி காலத்திற்கு ஏற்ப முறையான பதவி உயர்வு அளித்திட

5) இரண்டு வருடத்திற்கு மேலான தொகுப்பூதிய காலத்தை பணி காலத்தோடு இணைத்திட

6) ஊதியத்துடன் கூட மகப்பேறு விடுப்பு பெற

அனைத்தையும் தாண்டி வலுவற்று கிடக்கும் செவிலிய சங்கத்தின் செயல்பாடுகளை நேர்படுத்தி சீர்படுத்தி செவிலியர்களுக்கான முறையான அங்கீகாரத்தை சமுதாயத்திலும் அரசிலும் பெற

நாம் TPR டீமை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மேலும் மீதம் உள்ள 3000 கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் விரைவில் செய்ய பட வேண்டுமெனில் நமக்கு சப்போர்ட் செய்யும் ஒரு நல்ல அணி தேவை.

ஆதரிப்போம் வெற்றி பெறுவோம்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91
Whatsapp please if important call

No comments :

Post a Comment