Saturday, March 28, 2015

6000 செவிலியபணி இடங்கள் விரைவில் நிரப்ப வாய்ப்பு
தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்பூதிய செவிலியர் காலி பணி 
இடங்களுக்கு விரைவில் MRB மூலம் தேர்வு வைத்து செவிலியர்கள் (தொகுபூதிய அடிப்படையில்) தேர்வு செய்யபட வாய்ப்பு உள்ளது
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியிட வாய்ப்பு

நமது செவிலியசகோதரசகோதரிகள் தேர்வுக்கு இப்போது இருந்தே தயார்படுத்தி கொள்ளுங்கள்.

இதைப்பற்றி முறையான அறிவிப்பு வந்தஉடன் தெளிவாக தெரிவிக்கபடும்.

ரவி சீத்தாராமன்
9789 3435 91


Whatsapp pls if important call

அரசு ஆணை 60 படி எட்டு பஞ்சாயத் யுனியன் டிஸ்பென்சரிஸ் ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்வு


எப்படியும் 24 மணி நேர பணி புரிய செவிலியர் இங்கே நியமிக்கபடுவார்கள்.

குறைந்தபட்சம் அரசு ஆணை 400 இன் படி இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களும் ஒரு நிரந்தர செவிலியரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமித்தால் 8 புதிய இடங்கள் உருவாகும்.

டாக்டர் ரெகுலர்
பார்மசிஸ்ட் ரெகுலர்
ANM ரெகுலர்
ஜூனியர் அசிஸ்டென்ட் ரெகுலர்
டிரைவர் ரெகுலர்
லேப் டேக்நிசியன் ரெகுலர்

இந்த அனைத்து பணி இடங்களும் எட்டு மணி நேர பணி புரிபவர்கள் 

PHC லேயே 24 மணி நேர பணி புரிபவர்கள் செவிலியர்கள் 

PHC ஆரம்பிப்பதன் நோக்கம் அதன் உட்கருவனா 24 மணி நேர சேவை 

எந்த நோயாளி வந்தாலும், எந்த நேரம் வந்தாலும், பிரசவ கேஸ் எப்போது வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது யார்?

அப்புறம் ஏன் செவிலியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம்?

மல்டிபர்ஸ் ஹெழ்த் வோர்கர் காண்ட்ராக்ட்
நர்ஸ் காண்ட்ராக் ?????????????????


இதெல்லாம் நாம் முறையிட்டு பெறவேண்டிய நியமான உரிமைகள் 

முறையிடவேண்டியவர்கள் முறையிடாததன் காரணமாக


Wednesday, March 25, 2015

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் நம்பிக்கையா ? நாடகமா ?


பல ஆண்டுகள் கழித்து நமது சீனியர் சகோதரர் அருள் போன்றோர் 
பல முயற்சிகள் மேற்கொண்டதன் காரணமாக தமிழ்நாடு அரசு செவிலியர் 
சங்கத்தில் தேர்தல் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர் ? 
தெரியவில்லை

வாக்களிக்க தகுதியான செவிலியர்கள் எத்தனை பேர் ? 
தெரியவில்லை, 

வாக்களிக்க தேவையான அடிப்படை ஆவணங்கள் என்ன ?
தெரியவில்லை, 

சந்தா கட்டிய சீட்டு தான் அடிப்படை தகுதியா ?

சங்கத்தின் நடவடிக்கையில் அதிருப்தி காரணமாக -பல மூத்த செவிலியர்களே 
பல வருடங்களாக சந்தா செலுத்த வில்லை

அப்போ 25 வருட அனுபவம் உள்ள செவிலியர் சந்தா செலுத்தவில்லை என்றால் 
வாக்களிக்க கூடாதா ?

வாக்காளர் பட்டியல் எங்கே?

ஆனால் தற்பொழுது புதிய தலைமை வர வாய்ப்புள்ள சூழலில் வாக்களிக்க விருப்பம் 
இருந்தும் வாக்களிக்க சந்தா கட்டிய சீட்டு இருந்தால் தான் வாக்களிக்க முடியும் 
என்பது ஏமாற்று வேலை

மேலும் தங்கள் மேல் அதிர்ப்தியில் உள்ள செவிலியர்கள்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு 
அளிக்க கூடாது என சதி வேலைகள் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடும் மாற்று அணியினரை மிரட்டுவது, 
கைக்குள் போட்டு கொள்ள முயற்சி செய்வது ?

தொகுப்பூதிய செவிலியர்கள் ஓட்டு போட்டால் டெபாசிட் இழக்க நேரிடும் 
என்ற பயத்தில் நாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைவரும் 
நிரந்தர செவிலியர் சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்று தெரிவித்த உடன் அனைத்து சந்தா புத்தகங்களையும் குழந்தைதனமாக ஒளித்து வைத்து கொண்டனர்.

தொகுப்பூதிய செவிலியர்கள் ஓட்டு போட்டால் நாம் தோற்றுவிடுவோம் என்று தோல்வி பயம்.

அந்த பயம் இருக்கனும்.

முதலில் தேர்தலுக்குள் அனைத்து செவிலியர்களையும் உறுப்பினர் ஆக்க 
சொல்லுங்கள் ஆக்க மாட்டார்கள்

உறுப்பினர் ஆக விருப்பம் உள்ளது என்று சொன்னாலும் ஏற்று கொள்ளமாட்டார்கள் 


அனைத்து அரசு செவிலியர்களும் வாக்களிக்கலாம ? அதுக்கும் ஒத்துகொள்ள மாட்டார்கள்

தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் வாக்களிக்கலாமா ? 
அதுக்கும் ஒத்துகொள்ள மாட்டார்கள் ?

சரி நாங்கள் அனைவரும் உறுப்பினர் ஆகலாம் என்றால் ரசிது புத்தகத்தை தரமாட்டார்கள்

உங்களது செயல்பாடுகள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் 
உங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்

இல்லை வேதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்

ஆனால் முடிந்த வரை தொகுப்பூதிய செவிலியர்கள் ஓட்டு போட முயற்சி மேற்கொள்ளபடும்.

ஆனால் எது எப்படி இருந்தாலும் நாம் நமது சீனியர் செவிலியர்களிடம் 
கலந்து பேசி நல்ல தலைமையை தேர்தெடுக்க வேண்டும் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்..

முறைகேடு நடைபெறும் பட்சத்தில் அரசிடமோ 
அல்லது நீதி துறையிடமோ முறையிடப்பட்டு தேர்தல் ரத்து செய்யப்படும்.

சரியான தலைமை அமையாவிட்டால் அப்புறம் சாவுதான் நமக்கு

இப்பொழுதே இணைத்து செயல்படாதன் காரணமாக அந்த குரூப் இந்த குரூப் 
என்று நாம் சில இடங்களில் அவமானபடவேண்டியுள்ளது

எதோ ஒரு நல்ல தலைமை அமைந்தால் ஒற்றுமையாக ஒன்று பட்டு செயல்பட்டு 
நியமான கோரிக்கைகளை நாம் வென்று எடுக்கலாம்.

அதற்காக அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

ரவி சீத்தாராமன்

Wednesday, March 11, 2015

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு 16, 17,18அதிகாரபூர்வ தகவல்

மாண்புமிகு மக்கள் முதலவர் அம்மா அவர்களின் கருணையாலும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் முயற்சியால் பல வருடங்களுக்கு பின்னர் தமிழகத்தில் 600 கும் மேற்பட்ட புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு அதன் மூலம் தொகுப்பூதிய செவிலியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புதிய நிரந்தர பணி இடங்கள் தோற்றுவிக்கபடாமல் போயிருந்தால் எப்போது நிரந்தர பணியில் இருக்கும் ஒரு செவிலியர் பணி ஓய்வு பெறுவார் அல்லது பதவி உயர்வு பெறுவார் என்று தொகுப்பூதிய செவிலியர்கள் காத்துகொண்டிருக்க வேண்டிய நிலை. ஏனெனில் இதுவரை இது மாதிரியான நிகழ்வுகள் மூலம் ஏற்பட்ட காலி பணி இடங்களின் மூலம் மட்டுமே தொகுப்பூதிய செவிலியர்கள் பனி நிரந்தரம் பெற்று வந்தோம்.

தற்பொழுது அந்த நிலை மாறி ஏற்கனவே 2008 பேட்சை சேர்ந்த 100 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்ற சூழலில் இந்த புதிய பணி இட உருவாக்கம் காரணமாக தற்பொழுது 2008 பேட்சில் அடுத்து உள்ள 540 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் என்ற நமது கனவை பெற உள்ளனர்.

அதே போல் அடுத்து உள்ள அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் முறையான வழியில் விரைவில் பணி நிரந்தரம் பெறுவதற்கான அனைத்து சாத்தியகூறுகளும் ஆராயபட்டுளது.

விரைவில் மக்களவை தேர்தல் வேறு நெருங்கி வந்து கொண்டிருகிறது. எனவே நாம் அனைவரும் ஒருகிணைந்து செயல்பட்டு சரியான வழியில் நமது கோரிக்கைகள் எடுத்து அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் இந்த வருட இறுதிக்குள் பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒற்றுமை இந்த வார்த்தை தான் அனைத்திற்கும் மூலகாரணம்.
நமது வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இந்த வார்த்தைதான்.

வரும் 16, 17, 18 தேதிகளில் கவுன்சிலிங் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உள்ள அனைத்து சகோதரசகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். இதோடு நமது பயணம் முடிந்து விடாது, இன்னும் நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டிய, சீர்திருத்த வேண்டிய பல விஷயங்கள் செவிலிய துறையில் உள்ளது.

இதற்கு அனைத்து செவிலியர்களின் பங்களிப்பும் அவசியம்.

இங்கு பணி நிரந்தரம்தான் செய்யபட இருக்கும் செவிலியர்ளின் தரவரிசை பட்டியல் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்வீஸ் பர்டிகுலர் NOT RECEIVED என்று குறிப்பிட்ட நபர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.

இதை தவிர்த்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் WHATSAPP இல் மெசேஜ் செய்யவும். தவிர்க்க முடியாத சூழலில் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


16 ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய செவிலியர்களின் பெயர்கள்

ROLL NO 113 TO 250
TOTAL MEMBERS 123
17  ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய செவிலியர்களின் பெயர்கள்
ROLL NO 251 TO  500 

TOTAL MEMBERS 230

18 ஆம் தேதி ரெகுலர் கவுன்சிலிங் அட்டென்ட் செய்ய வேண்டிய தொகுப்பூதிய செவிலியர்களின் பெயர்கள்


ROLL NO 502- 724

TOTAL MEMBERS 197


மீதம் உள்ள செவிலியர்களுக்கு எப்பொழுது அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முயற்சிகள் குறித்து அடுத்த சங்க கூட்டத்தில் தெரிவிக்கபடும்.small lettters

WWW.TNFWEBSITE.COM
WWW.CBNURSE.COM


மீதம் உள்ள செவிலியர்களுக்கு எப்பொழுது அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முயற்சிகள் குறித்து அடுத்த சங்க கூட்டத்தில் தெரிவிக்கபடும்.

ரவி சீத்தாராமன்

செல்: 9789 3435 91
   
           90928 69205

small lettters

WWW.TNFWEBSITE.COM

WWW.CBNURSE.COM


அரசு ஒப்பந்த செவிலியர்களுக்கு, நிரந்தர பணி அமர்த்தலுக்கான கலந்தாய்வு வரும் 16, 17,18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

16-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்
17-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்
18-03-2015 ஆம் நாள் கலந்தாய்வு கடிதம்ரவி சீத்தாராமன்

செல்: 9789 3435 91
   
           90928 69205

Thursday, March 5, 2015

300 பேர் கூடுதலாக பணி நிரந்தரம் பெறுவதற்கான வாய்ப்புDMS அலுவலகத்தில் இருந்து இந்த வருடத்திற்கான ஹெட் நர்ஸ் ப்ரோமோசன்கான பேனல் வெளியிடபட்டு உள்ளது.


இதன் மூலம் ஏறக்குறைய மேலும் 300 நிரந்தர செவிலியர் பணி இடங்கள் கிடைக்கும்.
இதன் பலனாக 2008 பேட்சை சேர்ந்த செவிலியர்கள் மேலும் 300 பேர் இன்னும் ஒருசில மாதங்களில் பணி நிரந்தரம் பெற அதாவது நிரந்தர செவிலியராக பணி புரியும் 300 செவிலியர்களும் ஹெட் நர்ஸ் ப்ரோமோசன் ஆன உடன் இந்த 300 தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெறுவார்.
அதாவது 2008 பேட்சை சேர்ந்த 100 பேர் ஏற்கனவே பணி நிரந்தரம் பெற்று விட்டனர்.

இதை தவிர்த்து இந்த மாதத்தில் மேலும் 500 கும் மேற்பட்ட செவிலியர்கள்(சரியான எண்ணிக்கை விரைவில் தெரிவிக்கபடும்) பணி நிரந்தரம் பெறுவர்.
இது முடிந்த பின்னர் ஹெட் நர்ஸ் ப்ரோமோசன்கான கவுன்சிலிங் முடிந்த உடன் அடுத்த 300 செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறுவர். தோரயமாக மூன்றில் இருந்து நான்கு மாதங்களுக்குள் இதை நடைபெற வாய்ப்புள்ளது.(மாத கணக்கு-நமது கணிப்பு)
இதை தவிர்த்து இந்த வருடத்திற்குள் எத்தனை பேர் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது ஒருசில விஷயங்களை சார்ந்து உள்ளது. விரைவில் அது சமந்தமாக தெரிவிக்கபடும். வரும் தேர்தலுக்குள் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெற வேண்டும் என்பதே நமது குறிக்கோள். முயற்சிகளும் அதை நோக்கியே.

தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று வரும் இந்த சூழலில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், அரசுக்கும், செவிலியர்களின் நிலையயை அறிந்து அவர்களுக்கு விரைவாக பணி நிரந்தரம் பெற முயற்சிகள் மேற்கொண்ட மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் அதிகாரி அவர்களுக்கும் தொகுபூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.


Wednesday, March 4, 2015

சோகமான ஒரு நிகழ்வு

 
 
 
 
குளச்சல் அரசு மருத்துவமனையில் பணி புரியும் நமது தொகுப்பூதிய சகோதரர் திரு.ஐய்யப்பன் நேற்று இரவு பணிக்கு வரும் பொழுது மோட்டார் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழந்தார்.
 
அவரது ஆத்மா சாந்தி அடைய அனைவரும் வேண்டிகொள்வோம்.
 
நாம் அனைவரும் ஒருகிணைந்து நம்மால் முடிந்த சில குறைந்தபட்ச உதவிகளை செய்ய வேண்டியுள்ளது, என்னவென்று விரைவில் தெரிவிக்கிறோம்.