Wednesday, January 28, 2015

கவுன்சிலிங்

கவுன்சிலிங்


 
அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் நிரந்தர பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தகவல் பெறப்பட்டு உள்ளது. சரியாக தேதி விரைவில் தெரிவிக்கபடும்.
 
அது முடிந்த உடன் அடுத்த மாதமே 500 இல் இருந்து 600 மேற்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடத்தபட இருக்கிறது.
 
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிந்த உடன் நமக்கு இந்த 500 மேற்பட்ட நிரந்தர பணி இடங்கள் உருவாக்க அனுமதி அளித்து செவிலியர்கள் வாழ்வில் ஒளி ஏற்படுத்திய மாண்புமிகு அம்மாவுக்கு அவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும் நமக்கு கவுன்சிலிங் நடத்த தேதியும் கெடைக்கும்.
 
அதற்குள் முடிந்ததை சுருட்ட முயற்சி மேற்கொள்ளபட்டு உள்ளது.
 
5000 ரூபாய்:
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது
 
அவங்க எதை பற்றி நீங்கள் பேசினாலும் கடைசியில் வந்து நிற்பது 5000, நீங்க வேணும்னா செக் பண்ணி பாருங்க, பிரைன் வாஸ் அதவது மூளை சலவை நன்றாக செய்வார்கள்.
 
FILE இந்த TABLE இல் இருந்து அந்த TABLE கு போக வேண்டுமென்றால் இவ்வளோ காசு கொடுக்க வேண்டும் என்று.
 
உங்கள் மனம் சொல்லும் 5000 தானே, கொடுத்துருவோம், எதுக்கு வம்பு, சிக்கிரம் ரெகுலர் வந்தா போதும் என்று,.
 
சத்தியமாக அது தவறான எண்ணம் அது விழலுக்கு இரைத்த நீரை போல தான்.
 
நீங்கள் ஏமாந்தால் எங்களுக்கு பணகஷ்டம் இல்லை மனகஷ்டம் தான்.
 
ஏற்கவேனே 112 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று உள்ளனர். கேட்டு பாருங்கள் பணம் கொடுத்தார்களா என்று
 
எதோ தினமும் நான்கு பேர் ஐந்து பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து கொண்டு இந்த பணி நிரந்தர கலந்தைவிற்காக இரவும் பகலும் அலைவது போல் சில பெண் செவிலியர்களிடம் போலியாக நம்ப வைத்து 5000 ரூபாய் கொடுத்தால் விரைவில் கவுன்சலிங் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிவித்து இந்த 5000 ரூபாயை கலெக்ட் செய்ய தீவிரமாக பணி செய்து கொண்டு உள்ளனர்.
 
வழக்கம்போல் பழைய பாணியில் நமக்கு வர இருக்கும் கவுன்சலிங் இவன் தான் தடுக்கிறான் என்று வேறு செவிலிய
சகோதரசகோதரிகளை நம்ப வைத்து கொண்டு இருகின்றனர்.
 
விட்டா ஒட்டு மொத்த மக்கள் நல்வாழ்வு துறையை எனது கண்ட்ரோலில் தான் உள்ளது, மோடியுடன் இவனுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று சொல்லுவார்கள் போல
 
இவன் சொன்னால் தான் மக்கள் நல்வாழ்வு துறையில் அனைத்தும் நடைபெறும் என்று சொல்லுவார்கள் போல
 
இதையும் ஒரு குரூப் நம்புறாங்க
 
அதை நம்பி காசு கொடுத்தால் நமக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
மற்ற நமது சகோதரிகள் ஏமாந்து விட வேண்டாம்.
காசு கொடுத்தால் தான் கவுன்சிலிங் DATE கிடைக்கும் என்றால் அதை
நாங்களே களத்தில் இறங்கி வசூல் செய்து கொடுபோம்.
 
ஆனால் அங்கு அவ்வாறான நிலை கெடையாது, அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை நமது நிலையை உணர்ந்து விரைவாக கவுன்சலிங் வைக்கத்தான் முனைகிறார்கள்.
 
ஆனால் சிலர் இதனை பயன்படுத்தி நாங்கள் தான் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம் கவுன்சிலிங் தேதி வாங்க என்று பித்தலாட்டம் செய்து கொண்டு இருகின்றனர்.
 
சர்விஸ் பர்டிகுலர் வந்து சேரவில்லை என்று அதை எனது விலாசத்துக்கு அனுப்புங்கள், மேலும் கவுன்லிங் விரைவாகவர பாடுபட்டு கொண்டு இருக்கிறோம், கொஞ்சம் பணம் தேவை படும் என்று அவுத்து விடுவார்கள்.
 
ஒன்றும் இல்லை DMS அலுவலகத்தில் சர்விஸ் வந்து சேரவில்லை என்றாலும் ஒரு பிரச்னையும் இல்லை. முடிந்த வரை அனைத்தும் சேர்த்து விடுவோம்.
 
ஒரு வேளை தவறினால் கூட கவுன்சிலிங் அழைக்கும் போது எத்தனை நபர்களுக்கு கவுன்சிலிங் என்று லிஸ்ட் DMS அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும்.
 
அதில் சர்விஸ் பர்டிகிலர்ஸ் மிஸ் ஆயிருந்தால் பெயர் இருக்கும்,
ஒரு நாள் முன்னாடியோ முடியாவிட்டால் கவுன்சிலிங் தேதி அன்று கூட கொடுத்து கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம்.
ஏற்கவனே நமது பேட்ச்சிற்கு நடைபெற்ற கவுன்சிலிங்கில் இதே முறை தான் பின்பற்றபட்டது.
 
அதனால் எதை நினைத்தும் அஞ்ச வேண்டாம், ஏமாற வேண்டாம்.
 
கவுன்சலிங் வரும், ஒருத்தரும் மிஸ் ஆக மாட்டாங்க, ஆகவும் விட மாட்டோம்.
 
 

Monday, January 26, 2015

சேவையை பாராட்டி செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு

 
 
 
 
 
 
 
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியசகோதரர் திரு சந்தோஸ் அவர்களுக்கு அவரது சிறப்பான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் பாராட்டு தெரிவிக்கபட்டு குடியருசு தினத்தன்று பாராட்டு சான்றிதல் வழங்கபட்டு அவரது சேவை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் கவுரவிக்கபட்டது.
 
 
 
 
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியசகோதரி திருமதி சூரியா அவர்களுக்கு அவரது சிறப்பான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் பாராட்டு தெரிவிக்கபட்டு குடியருசு தினத்தன்று பாராட்டு சான்றிதல் வழங்கபட்டு அவரது சேவை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் கவுரவிக்கபட்டது.
 
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் சகோதரசகோதரிக்கு வாழ்த்துக்கள்
 
 
 

Sunday, January 25, 2015

குடியரசு தின வாழ்த்துக்கள்.
இந்தியர் அனைவர்க்கும் செவிலிய சகோதரசகோதரிகளுக்கும்
இன்று நாம் நமது உரிமைகள் அனைத்தையும் பெறுகிறோமோ இல்லையோ ஆனால் அதை உரிமையோடு கோருவதற்கு உகந்த சூழலை ரத்தம் சிந்தி பெற்று தந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி அனைவருக்கும் குடியருசு தின வாழ்த்துக்கள்
அடக்குமுறைசெய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
சூடிய தினம்

உப்புசத்தியாகிரங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்

தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்
தன் தாய்நாட்டிற்க்காக
அர்ப்பணம் செய்தவர்களை
நினைவுக்கூறும் தினம்தன்
வம்சா வழியினர்கள்
வசந்தமாய் வாழ
தன்
வாழ்நாட்க்களை
வலியுடன் கழித்தவர்களை
வருத்தமுடன்
நினைக்கும் தினம்

சுதந்திரக்காற்றை
நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம்
தூக்கியெறிந்த
தியாகிகளின்
தியாக தினம் நம்தாய்நாட்டினை
அன்னியர்களின்
பிடியிலிருந்து காப்பாற்ற
பாட்டுபட்டவர்களை
இன்றுமட்டும்
நினைப்பதில்
நியாயமில்லை

எந்த நோக்கத்தில் நமக்காக
சுதந்திரத்தை வாங்கித்தந்தந்தர்களோ
அதைகண்ணியத்துடன்
காத்துக்கொள்ளவேண்டியது
நம்கடமை

சுதந்திரகாற்றை சுகமாய்
அனுபவிக்கும்
நம் சுதந்திரகொடிபோல்
நாமும் நமக்காக பாடுபட்டு
வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி
வாழ்வோமாக

நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போரடியகளையும்
நினையுகூறுவோமாக.

அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
எந்தாய்திருநாட்டில்
வாழும் கோடானகோடி
மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என்
இந்தியமக்களுக்கும்

என்அன்பான
குடியரசு தின வாழ்த்துக்கள்.

Wednesday, January 21, 2015

அடுத்த கவுன்சலிங் எப்போது எத்தனை பேருக்கு ?

எந்த மீட்டிங்கும் இந்த மாதம் நாம் நமது தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக எங்கும் வைக்க வில்லை.

யாரவது எங்கள் பெயரை சொல்லி பணம் தர சொல்லி கேட்டால் தரதேவை இல்லை.

பணம் தருவதால் ரெகுலர் வாராது.

அடுத்த மாதம் 500 இருந்து 600 மேற்பட்ட நபர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளது.

அதற்கான நிர்வாக ரீதியான பணிகள் நல்ல ஆட்சியின் காரணமாகவும் நல்ல அதிகாரிகள் உள்ளதன் காரணமாகவும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. இந்த 600 பின்னர் என்ன என்பது விரைவில் தெரிவிக்கபடும்.

நாம் கடந்த காலங்களில் தெருதெருவாக நாய் போல் சுற்றி செவிலியர்களின் நிலையை அவர்களுக்கு புரிய வைத்து அவர்களை ஒருங்கிணைத்து சில மாநில அளவிலான கூட்டங்களை நடந்த எந்த வித ஆதரவும் இல்லாமல் அனாதையாக தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்த்ரதிற்காக பாடு பட்டபோதும், மாநில கூட்டங்கள் நடத்த முயற்சி மேற்கொண்ட போது தன்னுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் பயன்படுத்தி நமது அனைத்து முயற்சிகளையும் வெற்றி பெற விடாமல் வீணடித்து, நமது மனதை நோகடிதர்வர்கள் இன்று வாங்க வாங்க மீட்டிங் வாங்க

செவிலியர்களின் உரிமைகளை கேளுங்கள் என்று நாம் கூறினால்
அவர்கள் நம்மை பார்த்து நீ சங்க சந்தா கட்டி உள்ளயா என்று

சத்தியமாக ஒரே வரியில் சொன்னால் ப்ளிஸ் முதலை கண்ணீர் ஏமாரவேண்டாம்.

நாம் இவ்வாறு மோசமான நிலையில் இன்றளவும் இருபதற்கு காரணமே அந்த நல்ல மாமனிதர்கள் தான்.

யாரையும் தாக்க வேண்டும் தாழ்த்தி கூற வேண்டும் என்பது சத்தியமாக நமது நிலை கெடையாது, துறை அதிகாரிகளுக்கு இருக்கும் நல்ல மனம் கூட துறையை ஆள்பவர்களுக்கு இல்லை என்றால் எங்கள் நிலை?

மாறுவார்கள் என்ற நம்பிக்கை சுத்தமாக மனதில் இல்லை.

நடிப்பார்கள் அல்லது சிறப்பாக நடிப்பார்கள் அவ்வளவுதான்.

50 வருட சங்க நடைமுறையில் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு செய்து

1) 6 வது ஊதிய குழுவில் 25% ஊதிய உயர்வை 500 ரூபாயாக குறைத்தது

2) 3 ஷிப்டு முறையை ஒழித்து 24 மணி நேரம், 36 மணி நேரம், 48 மணி நேரம் என நாதியில்லாமல் பணி புரிய வைத்தது

3) ஊதியத்தை கூட பிச்சையாய் கேட்க வைத்தது

4) 2 வருடம் என APPOINTMENT ORDER ல் போட்டுவிட்டு 6 வருடத்திற்கு மேலாக குடும்பம் குட்டிய விட்டு அனாதையாய் வாழ வைத்தது.

5) எப்ப நம்ம ரெகுலர் பத்தி கேட்டாலும் நீ உறுப்பினர் கட்டணம் செலுத்தல, சொல்லி ஒப்பந்த செவிலியர்களுக்கு எதுவும் இதுவரை செய்யல.
                 
--- இனிமே நீங்க செய்வீங்கனு நாங்க நெனச்சா....

Tuesday, January 13, 2015

NCD செவிலியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க மரியாதைக்குரிய அதிகாரிகள் நடவடிக்கை

NCD செவிலியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க மரியாதைக்குரிய அதிகாரிகள் நடவடிக்கை

இதன் மூலம் கடந்த ஆறு மாதமாக ஊதியம் பெறாமல் பணி புரிந்த NCD செவிலியர்கள் அனைவரும் பயன்அடைவர்.


இந்த கடிதம் மூலம் நிலுவை தொகையில் இருந்து புதிய ஊதியம் வரை அனைத்தையும் கேட்டு பெற்று கொள்ளவும். நிதி இல்லை என இனிமேல் அலுவலகத்தில் படித்தவர்களால் கூற இயலாது, இந்த ஆணையை படித்து படித்து பார்த்து நிதி இல்லை என படித்தவர்கள் கூற மாட்டார்கள்.

இதனை படித்து பார்த்து புரிந்து கொண்டு நமது ஊதியத்தை உடனே வழங்க அலுவலகத்தில் முயற்சி எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரும் கொடுக்கவேண்டும்.இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்Friday, January 9, 2015

கவனம்


பொதுவாவே மருத்துவ துறை ஊழியர்கள் என்றால் சிலருக்கு இளக்கார பார்வை

ஒரு நாள் ஒரே ஒரு நாள் மருத்துவதுறை இயங்குவது நின்றால் என்ன ஆகும் என்பது இந்த மாதிரி அரைமேண்டல்களுக்கு தெரிவது இல்லை.

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தால் என்ன டெலிவரி பார்கிரிர்கள் எப்போது பார்த்தாலும் பெண் குழந்தை பிறக்கிறது என்று செவிலியரை அடிக்க வந்தானாம் ஒரு ஒரு மெண்டல்


இந்த மாதிரி சமுகத்தில், எந்த வித பணி பாதுகாப்பும் இன்றி, யாரை நம்பி,யாருக்காக, உயிரை பணயம் வைத்து.

இப்போது எல்லாம் உள்ள சூழலில் நோயாளியின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளும் அதே வேளையில் நம் உயிரையும் சேர்ந்து காப்பற்றி கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பணியின் காரணமாக  பாதிக்கபட்ட கிராம சுகாதார செவிலியருக்கு அரசாங்கத்தின் பதில்

என்ன சில நாட்கள் அவனை சிறையில் வைப்பீர்கள் அப்புறம் அவர் ஹாயா வெளிய வந்து இன்னொரு குழந்தைக்கு பிரசவத்திற்கு போவான்.

கண்டிக்கபட வேண்டும் தண்டிக்கபடவேண்டும்

இல்லையென்றால் அனைவரும் இணைந்து தான் உணர்த்தவேண்டும் உண்மையைசெவிலியர்கள் கவனத்திற்கு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியா இருக்கீங்க ஒரு துணையும் கெடையாது, ரொம்ப கவனமா செயல்படுங்க

ரிஸ்க்னு தெரிஞ்சா உடனே 108 தொடர்பு கொண்டு பக்கத்தில் உள்ள உயர் மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி விடனும்

நோயாளியோட எல்லா வரலாறையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். HIGH RISK னு தெரியாம டெலிவரி பார்த்திங்கனா அப்புறம் உங்க நிலைமை HIGH RISK ஆயிரும்.

பத்து பாக்கணுமே டெலிவரி பாக்கணுமேனு பாக்கதிங்க
வார்த்தைகளை கவனமா கையாளுங்க

நோயாளிகளிடம் பிரச்னை இருந்தா அவங்களுக்கு புரியுற பாமர மொழியில தெளிவா சொல்லுங்க
மருத்துவறது உதவி தேவையான உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

இல்லை நோயாளியை விட்டே தொடர்பு கொள்ள சொல்லுங்கள்

நாட்டுல ஒன்னும் நிலவரம் சரி இல்லை.

கவனமா இருங்க

Monday, January 5, 2015

NCD செவிலியர்கள் ஊதியம்

ஆறு மாசத்துக்கு மேல ஆகியும் சம்பளம் வாங்கம இருக்கீங்கனு தெரியும் சிஸ்டர்ஸ்
அதற்கான முயற்சிகள் மேல்கொள்ளபட்டு விட்டன.
கண்டிப்பாக இந்த மாத இறுதிக்குள் உங்களது ஊதியம் உங்களுக்கு வந்துவிடும்.