Wednesday, December 30, 2015

புதிதாக புதியதாக ஆரம்பிக்கலாமா


நமது செவிலியர்கள் அனைவருமே நன்கு அறிவர் கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய சங்கத்தின் மூலம் தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரதிற்காகவும் மற்ற செவிலியர்களின் பிரச்னைக்காகவும் நண்பர்கள் அனைவரும் இணைந்து பணிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தோம்.

தற்பொழுது அதில் சில கருத்து வேறுபாடுகளால் சில குழப்பங்கள்.
தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் மற்றும் மற்ற பிரச்சனைகளை கையாளுவதில் தொய்வு நிலவி வருகிறது.
மேலும் இத்தனை நாள் நம்பி இருந்த செவிலியர்களை நடுவழியில் விட்டு செல்வதில் நாட்டமில்லை.

மேலும் பணிகளை நாம் திறம்பட மேற்கொள்ள நிரந்தர செவிலியர்களின் ஆதரவும் தேவைபடுகிறது.

மேலும் இனி வரும் நிரந்தர செவிலியர்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

அதே போல் தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.காலம் கடந்து கொண்டு இருக்கிறது.

இதனை தனித்து தனிமனிதனாக செய்வது சிரமம் என்ற நிலையில் ஒரு சங்கம் என்ற அமைப்பு மூலம் அனைவரின் ஆதரவோடும் ஒற்றுமையோடும் தான் செய்ய முடியும்.

மேலும் தனிமனித விருப்புவெறுப்புகளுக்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை பூரணதள்ளுவதில் உடன்பாடு இல்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் புதிய சங்கத்தின் மூலம் மணலை திரித்து மலையக்குவோம், வானத்தை வளைப்போம் என்றோ, நான் நேர்மையின் சிகரம், அப்பழுக்கற்றவன் என்றோ எல்லாம் சொல்ல வில்லை.

ஆனால் முடிந்த வரை செவிலிய சமூகத்திற்கான சீரான பயணத்திற்கு சரியான பாதையை அமைக்க விரும்புகிறோம்.

மேலும் இதனை பதிவிட காரணம் அனைத்து செவிலியர்களும் கேட்கும் ஒரே கேள்வி இப்படி திடிரென ஒதுங்கி கொண்டால் இத்தனை நாள் நம்பி வந்த நாங்கள் ...................

மேலும் மற்றவர்களோடு வெறும் வெத்து விவாதம் நடத்தி கொண்டுஇருக்க மனமில்லை.

மேற்கண்ட காரணங்ககளால் ஒரு முடிவு எடுக்க பட்டு உள்ளது.
புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கவும் அதன் மூலம் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யபட்டு உள்ளது.

உங்கள் கருத்தை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை. உங்கள் கருத்துகளும் மாற்றுகருத்துகளும் வரவேற்கபடுகிறது.

முடிவு உங்கள் கையில் உங்கள் கருத்து

ஆரம்பிக்கலாமா வேண்டாமா

COMMENT

ரவி சீத்தாராமன்.

உங்கள் கருத்தை FACEBOOK மூலம் பதிவிடுங்கள்.

https://www.facebook.com/ravicameo

or
 
https://www.facebook.com/nurses.galata

 

Sunday, December 27, 2015

தேர்தலும் - பணி நிரந்தரமும்தற்போதைய 14–வது தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதம் 23–ந்தேதியுடன் முடிவடைகிறது

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பிப்ரவரி 28–ந்தேதி தேர்தல் தேதியும், தேர்தல் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதே போல் இந்த முறையும்
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.ஒரு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் போது தொகுப்புதியத்தில் பணி புரிந்த செவிலியர்கள் அடுத்த தேர்தலுக்குள் பணி நிரந்தரம் வந்து விடும் என்று நம்பி இருந்தனர்.


ஆனால் இவர்கள் எண்ணம் இன்னும் ஈடேறாமல் கனவாகவே உள்ளது.


மூடப்படும் கதவுகளை உடைய கோயில்களில் கூட ஐந்து ஆண்டுகள் தொகுபூதியத்தில் பணி புரிந்த நபர்கள் கூட பணி நிரந்தரம் செய்யபட்டனர்


ஆனால் மூடாத கதவுகளை கொண்ட மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது.


தேர்தல் தேதி அறிவித்து விட்டால் வழக்கம் போல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது இனி என்ன செய்வது என்று கையை விரிப்பார்கள்.

 

Monday, December 21, 2015

தொகுபூதியத்தில் பணி இட மாறுதல் பெற்ற 2008 பேட்ச் செவிலியர்கள் கவனத்திற்கு

ஏற்கனவே பணி புரிந்த இடத்தில் இருந்து சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பி இருந்து புது இடத்திற்கு பணி இட மாறுதல் பெற்று சென்று இருந்தால் அங்கிருந்து தயவு செய்து புதிதாக சர்வீஸ் பர்டிகுலர் பெற்று தயாராக வைத்து கொள்ளவும்.

ஏனெனில் கலந்தாய்வுவுக்கு முன்னர் பின்னர்  பணி நியமன ஆணைகளில் இது பல குழப்பங்களை ஏற்படுத்தும்.

ஒரே நாளில் அனைவரும் தபால் மூலம் மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

தேதி மற்றும் மெயில் ID ஓரிரு நாளில் தெரிவிக்கபடும்.


அதே போல் 2008 பேட்ச் எல்லாருமே இந்த சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். ஏனெனில் இதற்காக அடுத்த கவுன்சிலிங் வரும் பட்சத்தில் குழப்பம் இல்லாமல் இருக்கும்.

முடிந்தால் நான்கு காப்பிகள் கையொப்பம் பெற்று வைத்து கொள்ளவும்.

பெரிதாக ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம்.

ரவி சீத்தாராமன்


SERVICE PARTICULARS   MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் கையெழுத்து பெற்று வந்தால் போதும்.

மெடிக்கல் லீவ் இல் இருந்தால் SERVICE PARTICULARS   தர இயலாது என்று MO  இல் கூறினால் SERVICE PARTICULARS FORM ல்  மருத்துவ விடுப்பில் இந்த செவிலியர் உள்ளார் என்று கூறி MENTION செய்து SERVICE PARTICULARS தர சொல்லுங்கள்.


 
 SERVICE PARTICULARS
 

1
Name of the Individual
 
          KIRTHIKA.S                              
2
Date of Birth
 
      24/09/1986                       
 
3
The office proceedings No.in which
 
appointed along with SI.No
 
 
17352/N1/2/2009 Dated 2009
 
104
4
Date of Joining in the First Posting
 
             27.06.2009      
 
5
Place if Joining
 
GPHC Melakkal, Madurai HUD
6
If transferred, present place of posting
 
 
7
Date of joining in the Present Station
 
                       
                          27/06/2009
 
8
Whether he/she is continuously working for two years
 
YES
9
If not, the period of absence on duty in number of days
 
NIL
 
10
The date of completion of two years(excluding leave)
 
27.06.2011
11
Whether the conduct and performance are good
 
VERY GOOD
 

Thursday, December 17, 2015

2009 2010 BATCH பணி நிரந்தரத்திற்கான இறுதி முயற்சிதெரிவிக்கிறோம்
வெற்றி பெற்றால் 
GRADE II கவுன்சலிங் இந்த மாத இறுதியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாதிரி எல்லாம் ஸ்டேடஸ் போடவே உண்மையை சொல்ல வேண்டுமானால் வெக்கமாகவும் வேதனையாகவும்  உள்ளது. பல மாதமாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள், நாமும் சொல்லி கொண்டு இருக்கிறோம்.

இத்தனை தொடர்ந்து பணி நிரந்தர கலந்தாய்வு இருக்க வாய்ப்பு உள்ளது.2008 பேட்ச் செவிலியர்கள் எதற்கும் சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து தயாராக வைத்து கொள்ளவும்.

ரவி சீத்தாராமன்
--------------------------------------------------------------------------------

Monday, November 30, 2015

புதிய DMS?????????

 
மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்கள் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Sunday, November 29, 2015

GRADE II-REGULAR COUNSELING ?????????????????????????

வரும் மாதம் அதாவது டிசம்பர் மாதம் GRADE II கவுன்சிலிங் மற்றும் ரெகுலர் கவுன்சிலிங் இருக்க கண்டிப்பான முறையில் வாய்ப்புள்ளதாக நமது உளவுதுறை வட்டாரங்கள் தெரிவிகின்றது. இது அதிகாரபூர்வ தகவல் அல்ல.


                                       ரவி சீத்தாராமன்MMU RURAL ALLOWANCE 500 GO

Wednesday, November 4, 2015

2008 BATCH - 50 பேருக்கு நேரடி பணி நிரந்தர் ஆணைகள்:தொகுப்பூதியம் என்ற அரை ஆயுள் தண்டனையில் இருந்து நமது 2008 பேட்சை சேர்ந்த நண்பர்கள் 50 பேர் விடுதலை பெற்று செல்கின்றனர்.

2008 பேட்சை சேர்ந்த அடுத்த 961 முதல் 1012 வரை உள்ள செவிலியர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து நேரிடியாக பணி ஆணைகள் இன்று அனுப்பபட்டு உள்ளது.

இப்படியே ஒரு 3500  ஆணைகளை ஒரே நாளில் அனுப்பினால் கோயில் கட்டலாம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி.


இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்


Monday, November 2, 2015

உண்ணாவிரதம்


பல குழப்பமான சூழலில் பல செவிலியர்கள் உள்ளனர்.

 சில தனிப்பட்ட நபர்களின் முட்டாள் தனத்தினால் இயக்கம் தோல்வி அடைய கூடாது மேலும் அரசிற்கு இது ஏளனமான பார்வையை நம் மேல் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் இது சமந்தமான தெளிவான விளக்கத்தை இப்பொழுதும் கூட தர யோசிக்கிறோம், .


மேலும் செவிலிய இயக்கத்தை ஒரு அரசியல் சார்ந்த பாதையில் இயக்குவதில் உடன்பாடு இல்லை.

ஆனால் புரிகிறது இருக்கின்ற இரண்டு மாதத்தில் இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா என்று.

மேலும் நாம் அனைவரும் பொதுவாக நினைப்பது மற்ற பிரச்னை எல்லாம் இருக்கட்டும் எல்லாரும் ஒற்றுமையாக நமது பலத்தை நிரூபிக்க வேண்டும் இந்த சூழலில் என்று.

ஆனால் இன்னொரு பக்கம் பல விஷயங்களை யோசித்து தான் செய்ய வேண்டியுள்ளது.


சங்கம் என்பது நமது செவிலியர்களின் மேல், நமது 

ஒற்றுமையின்மேல் தான் நம்பிக்கை வைக்க 

வேண்டும். ஒரு கட்சியின் மேல் அல்ல

உண்ணவிரதிற்கு செல்லும் செவிளியர்களுக்கு 

ஏதேனும் பிரச்னைஎன்றால் சங்கமாக இணைத்து 

சரி செய்ய திராணி வேண்டுமே அன்றி, 

ஒரேஒருவரின் பலத்தில் நாம் எத்தனை 

நாள் நிற்க முடியும்.

தனித்து செயல்படுவதற்கும் தனிதன்மையோடு செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது..

இதில் நாங்கள் கலந்து கொள்ள வில்லை என்றால் எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று அர்த்தம் இல்லை, செவிலியகளின் பணி நிரந்தரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அர்த்தம் இல்லை. கடந்த ஐந்து வருடமாக அதற்கு தானே அனைவரும் முயன்று கொண்டு இருக்கிறோம்.

இருபினும் பல முட்டாள் தனமான முடிவுகளை தனது தனிப்பட்ட பெயருகாகவும், தான் சார்ந்த இயக்கதிற்காகவும் சிலர் எடுத்து உள்ளனர்.

நமக்கு தேவை தலையாட்டி பொம்மைகள் அல்ல தலையையே ஆட்ட கூடிய பொம்மைகள்.

போராட்டத்தால் ஏதேனும் செவிலியர்களுக்கு பிரச்னை என்றால் கடைசி வரை உடன் இருந்து கரை ஏற்ற வேண்டும்.
சில நண்பர்கள் தலைமை பதவியை தராததால் இவ்வாறு பாலிடிக்ஸ் செய்கிறோம் என்று எண்ணுகின்றனர். அப்படியல்ல கொடுக்க பட்டாலும் அதை நாங்கள் ஏற்று கொள்ள போவதும் இல்லை, நமக்கு தேவை திறம்பட செயலாற்றகூடிய நபர்கள்.

ஐந்து வருடமாக ஒரே ஒரு மீட்டிங் அதுவும் நாம் இறுதியாக வைத்த மீடிங்கில் கலந்து கொண்ட செவிலியருக்கு தலைவர் பதவி அளிக்க பட்டதில் இருந்தே எப்பேர்பட்ட நபர்களை ஒருவர் தேர்தெடுத்து உள்ளார்கள், உண்மையை சொன்னால் தேர்தேடுக்கபட்ட நபர்கள் அல்ல தனி நபரால் நியமிக்கபட்டவர்கள். இவர்கள் தலைமையில் போக எங்களுக்கு விருப்பம் இல்லை.

இதை ஒரே நாளில் உடைந்து ஏறிய எங்களால் முடியும் என்ற போதிலும் அது எங்கள் விருப்பம் அல்ல.
உண்ணாவிரத்தில் நாங்கள் கலந்து கொள்வதை சில தனிப்பட்ட நபர்கள் விரும்ப வில்லை. அது மதுரையில் நடந்த கூட்டத்திலேயே தெரிந்தது. மதுரை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் தெரியும்.
மேலும் தலைமை என்பது பணி நிரந்தரம் சமந்தமான முயற்சிகளில் நினைத்தால் வருவது போவது அல்ல,

மேலும் உண்ணாவிரத்தில் நாங்கள் கலந்து கொள்ள வில்லை என்ற காரணத்தால் நீங்களும் கலந்து கொள்ளாதிர்கள் என்று மிக கேவலமான பாலிடிக்ஸ் செய்ய விருப்பம் இல்லை. எங்களுக்கு தேவை அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம்


எங்களது நிலை புலி வாலை பிடித்த கதைதான்.

அதற்காக இதோடு அனைத்தையும் விட்டு விட்டு சென்று விட்டோம் என்று அர்த்தம் இல்லை. பணிகள் தொடரும் அனைவர்க்கும் பணி நிரந்தரம் வரும் வரை, முயற்சிகள் தொடரும் முடிவு கிடைக்கும் வரை.நல்லதே நடக்கும்.

ரவி சீத்தாராமன்.

Sunday, November 1, 2015

செவிலியர்களின் பார்வைக்கு

ஓவ்வொரு நாளும் இணையதளத்தை ஆர்வமுடன் பார்க்கும் பொழுது எந்த விதமான தகவலும் இல்லை என்று அனைவரும் வருந்துவதை உணர்கிறோம்.


நாங்களும் அறிவோம் நமது செவிலிய சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்பு என்ன,
அடுத்த GRADEE II கவுன்சிலிங் எப்போது,
ரெகுலர் கவுன்சிலிங் எப்போது,
எத்தனை பேருக்கு,
இந்த வருட இறுதிக்குள் எத்தனை பேருக்கு வரும்,
புதிய பணி இடங்கள் உருவாக்கபட்டு உள்ளதா,
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளலாம கூடாத,
2011 பேட்சுகு எப்போது ரெகுலர்,
MRB செவிலியர்களில் மீதம் உள்ள 2000 பேருக்கு எப்போது பணி ஆணை வழங்கபடும், இன்னும்.....................


ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான தகவல் பெறப்பட்டு தரப்படும், முயற்சிகள் முன்னெடுக்கபடுகிறது.

முடிந்தவரை இன்னும் தெளிவாக விரைவாக அப்டேட் செய்யப்படும்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தீபாளி ஊக்கதொகை

தமிழக அரசின் கீழ் தமிழக மக்களுகாக சேவை செய்யும் சரி பணி
செய்யும் ஏழு வருடமாக பணி செய்யும் தொகுப்பூதிய
செவிலியர்களுக்கு?????????????????
 
சம்பளம் தான் மத்திய அரசு தருகிறது, வருடத்திற்கு ஒருமுறை நம்
சுகாதார துறையின் சாதனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும்
பங்கு உண்டு என்பதை கருத்தில் கொண்டு அல்லது கருணை
கொண்டு எதாவது வழங்கலாமே
 
 
இதுல 50000 சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு தீபாளி
கொண்டாட 5000 முன்பணம்
 
தொகுபூதியத்தில் பணி புரியும் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்து விட்டனரா என்ன


Monday, October 19, 2015

முதல் முயற்சி: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்

 
 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் மொத்தம் 2,626 படுக்கைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 2,600 முதல் 2,800 உள் நோயாளிகளும், 9,000 வெளி நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி 100 வெளி நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணிபுரிய வே ண்டும். அதன்படி, ராஜாஜி மருத் துவமனையில் தினமும் வரும் 9,000 வெளிநோயாளிகளுக்கு குறைந்தபட்சம் 90 செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், செவி லியர் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
 
 
இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த சுகாதார சமூக செயற்பா ட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:
இந்திய மருத்துவக் கவுன் சில் நிர்ணயித்துள்ளபடி போது மான செவிலியர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியவில்லை. 1,200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி யாற்ற வேண்டும். ஆனால், இங்கு 338 நிரந்தர செவிலியர்கள், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 81 டெபுடேஷன் செவிலியர்கள் உட்பட 420 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் 49 வெளிநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு 2 செவிலியர்கள் வீதம் 98 செவிலியர்கள் கட்டாயம் பணி யாற்ற வேண்டும். ஆனால், 49 செவிலியர்கள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றனர். பொது வார்டில் 8 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும் என விதி உள்ளது. அனேக பொது வார்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
 
செவிலியர்களுக்கு வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை என்று கழித்தாலும், சராசரியாக ஒவ்வொரு ஷிப்டிலும் 60-லிருந்து 80 நோயாளிகளுக்கு 3 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இங்கு 3 அல்லது 4 செவிலியர்கள் மட்டுமே ஒரு ஷிப்டில் பணியில் உள்ளனர்.
பல வார்டுகளில் 150-க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு, ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். பிரசவ வார்டில் அறுவை சிகிச்சை முடிந்தபிறகு தாய்மார்களை, குழந்தைகளுக்கு பால் ஊட்ட பழக்குவது, வலி உள்ளிட்ட இதர பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
ஒரு செவிலியரே 150-க்கும் மேற்பட்ட பெண்களை கவனிப்பதால், தரமற்ற மருத்துவச் சேவையே நோயாளிகளுக்கு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
 
‘போதுமான செவிலியர்கள் உள்ளனர்’
இதுகுறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் மூன்று ஷிப்டுகளிலும் போதுமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். டெபுடேஷன் மூலமும் தேனி, சிவகங்கை வெளி மாவட்டங்களில் இருந்தும் செவிலியர்கள் இங்கு வந்து பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 7400 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தினசரி 2 பேர் வீதம் சராசரியாக மதுரை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
 
இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி
 
செவிலியர்கள் பணியாற்றுவது
 
சாத்தியமில்லாதது. போதுமான
 
செவிலியர்களைக் கொண்டு நோயாளிகளுக்கு
 
தரமான சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றார்.
Sunday, October 11, 2015

தவிப்பு

செங்கல்பட்டு மருத்துவமனை

செங்கல்பட்டு மருத்துவமனை

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மட்டுமா தவிப்பு

சிகிச்சை அளிக்கும் செவிலியர்களும் தான் தவிப்பு

பணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் தொகுப்பூதிய செவிலியர்களும் தான் தவிப்பு

இருப்பது 130

கணக்கு 247


காந்தி கணக்கு மீதி 117 பேரு
Friday, October 2, 2015

பணி நிரந்தரதிற்கான நோக்கிய பயணம்


பணி நிரந்தரதிற்கான வழிமுறைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சென்னை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது.

கூட்டத்தை புதுகோட்டை மாவட்ட நிர்வாகி திரு.மாரிமுத்து மற்றும் நீலகிரியில் திரு.சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து விளக்கினர்.