Thursday, November 6, 2014

ரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி கூறுங்கள்







தயவு செய்து ரத்ததான முகாமில் அனைத்து செவிலியர்களும் கலந்து கொள்ளுங்கள்.

எந்த முயற்சிக்கும் துணை நிற்காமல் எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் ரெகுலர் எப்போது வரும் எதிர்பார்ப்பது மிகவும் அபத்தமானது.

முகாமில் அனைவரும் கலந்து கொண்டு சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நபராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாருங்கள் வாருங்கல் என்று அழைக்க இது திருமண நிகழ்வு அல்ல.

அனைவர்க்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தபடும் ஒரு முயற்சி.
தயவு செய்து அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

வராமல் இருபதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான் கலந்து கொள்ள முடியும்.
எங்களால் முயற்சிகளையும் முன்னேற்பாடுகளையும் தான் செய்ய முடியமே தவிர அதை சீரும்சிறப்பாக நடத்தி முடிப்பது நம் அனைவரின் கைகளில் தான் உள்ளது.

\
தயவு செய்து இப்போதும் சரி எப்போதும் சரி நமது நலனுக்காக நமது துறை நலனுக்காக என்ன முயற்சி மேற்கொள்ள பட்டாலும் உங்கள் கரங்கள் அதை வலுபடுத்த வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.

ஏனெனில் இங்கு யாரும் சர்தார் வல்லாபாய் படேல் இல்லை.