பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் முறையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தற்பொழுது உள்ள நமது மரியாதைக்குரிய துறை மேலதிகாரிகள் மிகுந்த முயற்சி எடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் அவர்கள் கவனத்திற்கு பெரும்பாலான இடங்களில் இருந்து இந்த குறைபாடுகள் கொண்டு செல்ல படுவது இல்லை.
இன்னும் ஐந்து மாதமாக ஊதியம் இல்லை என்று தொலைபேசி அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
DPH இருந்து அனுப்பபட்ட கீழே தரப்பட்ட படிவத்தை எத்தனை இடங்களில் அனைத்து செவிலியர்களிடம் ஊழியர்களிடமும் முழுமையாக தகவலை கேட்டு பெற்று பூர்த்தி செய்து கொண்டு செல்லப்பட்டது என்றால் அது கேள்வி குறியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு இருக்கும் பணி சுமை அவ்வாறு உள்ளது.
செவிலியர் புகார் பெட்டி என்ற நமது தளத்தில் இன்று இருந்து நான்காம் தேதி மாலை வரை ஊதிய பிரச்னை உள்ள சகோதரசகோதரிகள் பதிந்து கொள்ளலாம். சரியாக ஐந்தாம் தேதி காலை தகவல் அனுப்பபட்டு விடும்.
No comments :
Post a Comment