Friday, November 14, 2014

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக ரத்த தான முகாம், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் முன்னிலையில்


இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. என புதுக் கோட்டையில் நடை பெற்ற ரத்ததான முகா மில் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

ரத்ததான முகாம்

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத் துறையின் சார்பில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் 4 ஆயிரத்து 500 பேர் பங் கேற்கும் ரத்ததான முகாமினை முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் மனோகரன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தும், ரத்ததான கொடையாளர் களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

தானத்தில் சிறந்தது ரத்த தானம். இத்தானத்தினால் பெற்ற வரும், கொடுத்த வரும் பயன்பெறுகிறார்கள். நம் உடலில் அழிந்து போகக் கூடிய ரத்த அணுக்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் நாம் எதையும் இழந்து விடுவ தில்லை. நம்முடைய உடலுக்கு புதிய ரத்தம் வந்தடைகிறது. ஆகவே ரத்ததானம் செய் வதை ஒவ்வொருவரும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் நாடு அரசு ஒப்பந்த செவிலியர் கள் 4 ஆயிரத்து 500 பேர்பங் கேற்கும் ரத்ததான முகாமின் முதற்கட்டம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தொடக்கி வைக்கப்பட்டுள் ளது. மேலும், அனைத்து மாவட்டங்களி லும் உள்ள அரசு ஒப்பந்த செவிலி யர்கள் ரத்த தானம் செய்ய உள்ளனர்.

அரசு அனுமதி பெற்ற...

ரத்த தானம் செய்பவர்கள் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். 18 வயது முதல் 60 வரை உள்ள அனைவரும் ரத்த தானம் செய்யலாம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை தாராளமாக ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதன் மூலம் மாரடைப்பு குறைகிறது. புதிய ரத்த அணுக்கள் உருவாக ஊக்கமளிப்பதுடன், நமது உடலில் 500 கலோரிகளுக்கு மேலாக எரிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்பவர்கள் அரசு ரத்த வங்கிகள் மற்றும் அரசு அனுமதி பெற்ற ரத்த வங்கிகளில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும். இதன் மூலம் விலை மதிப்பில்லா மனித உயிர்கள் காப்பாற்றப்படும். எனவே, அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை அரசு ஆஸ் பத்திரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபாதை தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனைகளின் அனைத்து அடிப்படை வசதி களையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

இந்தியாவில் தமிழகம் முதலிடம்

ரத்ததானத்தை போன்று நாம்அனைவரும் உடல் உறுப் புக்களையும் தானம் செய்ய வேண்டும். நம் இறப்பிற்கு பின் நம் உடலில் உள்ள சிறுநீரகம், கண்கள், கல்லீரல், கணையம், இதயம் போன்ற பல்வேறு உடல் உறுப்புக்களை தானம் செய்வதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுவதுடன் இறப் பிற்கு பின்பும் நாம் வாழலாம். மேலும், இந்தியாவில் உடல் உறுப்புக்களை தானம் செய்வதில் தமிழகம் முதலி டத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கார்த்திக் தொண்டை மான், கு.ப.கிருஷ்ணன், வைரமுத்து, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வி.சி.ராமையா, நகர் மன்றத் தலைவர் ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ராமசாமி, இணை இயக்குனர் மரு.சையது மொய் தீன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணி யன், நகர்மன்ற துணைத் தலைவர் அப்துல் ரகுமான், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள்¢, வட்டாட்சியர் கதிரேசன், மருத்துவர்கள், அரசு ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment