Friday, October 31, 2014

NCD செவிலியர்களுக்கு மீண்டும் விருப்ப பணி மாறுதல் - வாய்ப்பு




NCD செவிலியர்களுக்கு PHASE II மற்றும் PHASE I மாவட்டங்களுக்கும் விருப்ப பணி மாறுதல் வழங்கபட வாய்ப்பு. இது சமந்தமான தெளிவான விளக்கம் பெறப்பட்டஉடன் தெரிவிக்கபடும்.

PHASE I மற்றும் PHASE II என்ற வார்த்தைகள் நாம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இணைக்கபட்டு உள்ளது. அதிகாரபூர்வ வார்த்தைகள் அல்ல.


கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் மாவட்ட NCD COORDINATOR அவர்களிடம் அளிக்கவும்.


தொலைபேசியில் இது சமந்தமாக தொடர்பு கொள்ளவேண்டாம். மேலும் தகவல் பெறபட்ட உடன் கண்டிப்பாக தெரிவிக்கபடும்.










Wednesday, October 29, 2014

2007 பேட்ச் மீதம் உள்ள செவிலியர்களுக்கு கவுன்சிலிங்-ஆறாம் தேதி-அதிகாரபூர்வ அறிவிப்பு



கடைசியாக இதோ அதோ என்று வந்து விட்டது பணி நிரந்தர கலந்தாய்வு

தொகுபூதிய செவிலியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரிகளே

வரும் ஆறாம் தேதி அன்று 2007 பேட்ச்சை  2008 ஆம் ஆண்டு பணியில் இணைந்த 141 செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடபட்டு உள்ளது.

அதிகாரபூர்வ தகவல் கீழே வெளியிடபட்டு உள்ளது.

இதற்காக உழைத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
























டாப் மோஸ்ட் சீனியர்ஸ்









Monday, October 27, 2014

4500 அரசு மருத்துவர்கள் ராஜிநாமா


பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிலேயே தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது உட்பட, 14 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள், வரும், 27ம் தேதி ராஜினாமா செய்ய தீர்மானித்து உள்ளனர்.

ராஜினாமா : பெங்களூருவில், கர்நாடகா மாநில அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வீரபத்ரய்யா கூறியதாவது:
கர்நாடகா முழுவதும், 4,500 அரசு டாக்டர்களும், 250 குத்தகை அடிப்படையிலான டாக்டர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் வரும், 27ம் தேதி, காலை, ௧௧:௦௦ மணிக்கு பெங்களூரு ஆனந்தராவ் சர்க்கிளிலுள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கமிஷனரின் அலுவலகத்தின் எதிரில் கூடி, ராஜினாமா செய்ய உள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு, அரசே நேரடி பொறுப்பு. கடந்த, 2009, 2013ல், போராட்டம் நடத்தினோம். இதுவரை, எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதல்வர் சித்தராமையாவை, நான்கு முறை சந்தித்தும், பலனில்லை. சுகாதார துறை அமைச்சரும் கவனம் செலுத்தவில்லை. மாவட்ட பஞ்சாயத்து எல்லையிலுள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கான ஊதியத்தை, நிதித்துறையிலிருந்து விடுவிக்க வேண்டும். பலமுறை சிபாரிசு செய்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.

டாக்டர் பற்றாக்குறை : மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில், 60 சதவீதம் அளவு சிறப்பு டாக்டர் பற்றாக்குறை உள்ளது. இதனால், அனைத்து சிகிச்சைகளையும் சாதாரண டாக்டர்களே வழங்குகின்றனர். தமிழகத்தை போன்று, இங்குள்ள சுகாதார துறையில் காலியாகவுள்ள பதவிகளை, ஒவ்வொரு, மூன்று மாதத்துக்கு ஒரு முறை நிரப்ப வேண்டும். குத்தகை அடிப்படையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, குறைந்தபட்சம் சம்பளம், 28 ஆயிரம் ரூபாய். அவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். மூன்று ஆண்டு பணியாற்றியவர்களை நிரந்தரமாக்க வேண்டும்.

திருத்தம் : அதிகமான மருந்துகளை சப்ளை செய்ய வேண்டும். சில மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிகளுக்கு மருந்துகள் இல்லை. இடமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் காலகட்டத்தில், சரியான நேரத்துக்கு ஊதியம், இதர படி வழங்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். மருத்துவ துறையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைத்து, ராஜினாமா செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டாலும் பின் வாங்கமாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

சிவகங்கை-டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை-நோயாளிகள் கடும் அவதி

சிவகங்கை, :

சிவகங்கை, :
ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நோயாளிகள் கடும் அவதி


சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 6 தாலுகா தலைமை மருத்துவமனைகள், 47ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இங்கு பகலில் மட்டுமே டாக்டர்கள் சிகிச்சையளிக்கின்றனர். இரவு நேரங்களில் பிரசவம் பார்ப்பது, உள்ளிட்ட பல்வேறு பணிகளை செவிலியர்களே மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்வது, கர்ப்பிணிகள் கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு என பல்வேறும் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு முகாம்கள் உள்ள நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவர்கள் ஊசி போடுவதற்குகூட வழயில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். பகல் நேரத்தில் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல கர்ப்பிணிகள் தயங்குகின்றனர். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் டாக்டர்களை அழைப்பது அல்லது வேறு தலைமை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்வது நோயாளிகளுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில்,‘வாரத்தில் பெரும்பாலான நாட்கள் செவிலியர்கள் பல்வேறு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 

இதனால், பணி ஓய்வு பெற்ற செவிலியர்கள் சிலர் தற்போதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வந்து ஊசி போடுவது, மாத்திரை வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். டாக்டர்கள் முழுநேரம் இல்லாதது, செவிலியர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிப்படுகிறோம். 

 கிராமங்களில் உள்ளவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களே நம்பி உள்ளனர். எனவே, போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Saturday, October 25, 2014

குமுதம் ரிப்போர்ட்டர்-திணறும் அரசு மருத்துவமனைகள்


சுத்தம் சுகாதாரம் என்ற வார்த்தைக்கு பொருள் தேடி அரசு மருத்துவமனைக்கு சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனென்றால் அரசு ஆண்டுதொறும் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு நிதியை அதிகரித்து வந்தாலும் அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்காது இதற்கு முக்கிய காரணம்.

தமிழகத்தில் மருத்துவ அறிவியல் துறை இயக்குனரகத்தின் DMS கீழ் 30 தலைமை மருத்துவமனைகள் 158 தாலுகா மருத்துவமனைகள் 79 இதர மருத்துவமனைகள் 7 பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகள் 19 டிஸ்பென்சரிகள் உள்ளன. இதில் கிரேடு 1 நர்சிங் கண்காணிப்பார்கள் 25 பேர் Grade II நர்சிங் கண்காணிபாளர்கள் 279 பேர் 4997  நர்சுகள் பணியில் உள்ளனர்.
 மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் 19 மருத்துவ கல்லூரிகள் 35  மருத்துவகல்லுரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் GRADE 1 நர்சிங் கண்காணிபாளர்கள் 35 பேர், GRADE II நர்சிங் கண்காணிபாளர்கள் 557 பேர் 7500 ஸ்டாப் நர்சுகள் பணியாற்றுகின்றனர்.

பொதுவாக மருத்துவமனைகளில் 8 நோயாளிகளுக்கு ஒரு நர்சு நியமிக்கபடவேண்டும். என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிபடி உள்ளது. தமிழக மக்கள் தொகை சுமார் 7 கோடி. இவர்களில் 10 சதவிதம் பேர் மட்டும் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களாக எடுத்து கொண்டால் கூட 70 லச்சம் பேர் வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள நர்சுகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்துக்கும் கீழ் தானாம். அதிலும் 4500 பேர் தொகுபூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆக 411 நோயாளிகளுக்கு ஒரு என்ற நிலையே உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொகுப்பூதிய நர்சுகள் நலச்சங்க மாநில துணை தலைவர் ரவிசீத்தாராமன் கூறுகையில் தமிழகத்தில் தான் தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது. இதற்கு முக்கிய காரணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களே. அதே சமயம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகத்ரா நிலையங்களின் எண்ணிக்கை வெறும்
1624, இங்கு முதுகெலும்பாக தொகுபூதிய நர்சுகள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் 5 வருடம் பணி முடித்த நர்சுகள் 1700 பேரும் 4 வருடம் முடித்த 2800 பேரும் கடந்த 6 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யபடாமல் தொகுபூதியதிலே பணியாற்றி வருகின்றனர். இவர்களூகு அடிப்படை சம்பளம் 7700 விடுப்பு பணி பாதுகாப்பு கருணை உதவி எதுவும் கெடையாது.

செவிலியர்கள் சங்க மாநில துணை செயலாளர் கலை செல்வி கூறுகையில் அரசு ஆணை 230 படி நர்சுகளை 2 வருட ஒப்பந்த காலம் முடிந்ததுமே நிரந்தம் செய்ய வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் நிரந்தரம் செய்யாமல் அதிகாரிகள் இழுத்துதடிகின்றர். அதாவது நிரந்தர பணி இடம்
உருவனால் மட்டுமே தொகுபூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியும் என இன்னொரு உத்தரவை போட்டு குழப்பம் ஏற்படுத்துகின்றனர்.

1970 இல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணி இடங்கள் இருந்ததோ அதே பணி இடங்கள்தான் இப்போதும் உள்ளன, ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை பல லச்சம் அதிகம். என்றார்.

தொகுப்பூதியல் பணி புரியும் செவிலியர்களான ரேவதி யசோதா ஆகியோர் கூறுகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுபூதியத்தில் பணிபுரியும் நர்சுகளின் முக்கால்வாசி பேர் பெண்கள். இவர்களின் பேருகாலதிற்கு விடுப்பு கூட கிடையாத நிலை உள்ளது. என்று புலம்பினர்.

ஆண் நர்சு உமாபதி மாதம் மாதம் ரூபாய் 80000 ஆயிரம் வாங்கும் அரசு அதிகாரியின் சம்பளத்தை ஒரே தவணையில் ஒரு லட்சமாக உயர்த்துகிறார்கள் அதே சமயம் தொகுப்பூதியமாக 80000 சம்பளம் வாங்கும் நாங்களும் அதே விலைவாசியில் தான் வாழ்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். எநேரரமும் நோயாளிகளுடன் பொழுதை கழித்து வரும் நர்சுகள் மனபுழுக்கம் எதுவுமில்லாமல் நல்ல மனநிலையில் இருந்தால் தான் அவர்களின் சேவை சிறக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்கிறார் வேதனையுடன்.

இது தொடர்பாக சுகாதார துறை உயர் அதிகாரிகளிடம் பேசிய போது அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நர்சுகளை நியமிக்க வேண்டும் என்று  தனியாரில் பயிற்சி பெற்றவர்களும் அவர்களை நியமிக்க கூடாது என அரசில் பயிற்சி பெற்றவர்களும் கோர்ட்டுக்கு போனதால் சில ஆண்டுகளாக நர்சு நியமனம் நடைபெறவில்லை. கோர்ட்
 தீர்ப்பின் படி விரைவில் 6 ஆயிரம் முதல் 7000 நர்சுகள் நியமிக்கபட உள்ளனர். இதற்கான அரசு ஆணையும் பிறப்பிக்கபட்டு விட்டது.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட்ட நர்சுகள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய பட்டு வருகின்றனர் இந்த ஆண்டு 500 பேர் பணி நிரந்தரம் செய்யபட உள்ளனர்.



Saturday, October 18, 2014







Monday, October 13, 2014

டாஸ்மாக் பணியே சிறந்தது




டாஸ்மாக் பணியே சிறந்தது

வாழ்க டாஸ்மாக், வளர்க டாஸ்மாக்

தொகுப்பூதிய செவிலியராக ஆறு வருடமாக பணி புரிந்தும் நோயாளிகளுக்கு பணி செய்தும்,


ஊசி போட்டும்,


டெலிவரி பார்த்தும்,


அறுவை சிகிச்சையின் போது அச்சிஸ்இட் செய்தும்,
விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு சேவை செய்தும்


தீவாளி, பொங்கல் அன்றும் மற்ற அரசு விடுமுறை நாட்களில் விடுப்புகள் இன்றி பணி செய்தும்,


12 மணி நேரம் 24 மணி நேரம் PHC லையே படுத்து கிடந்தும்

இன்றைய செய்தி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 10% போனஸ்

உயிர் காக்கும் 108 ஊழியர்கள் போனஸ் கேட்டு விரைவில் போராட்டம்

தொகுபூதிய செவிலியர்கள் அதுவும் கிடையாது.



தத்துவம்:

கண்ணா கூட்டம் சேத்தவன்லா போனஸ் வாங்க முடியாது.

நம்ம கிட்ட வர்ற கூட்டம் அடிபட்டு வர்ற கூட்டம்.

அங்கு போற கூட்டம் அன்பால போற கூட்டம்

Thursday, October 9, 2014

2007 பேட்ச் அடுத்த வாரம்? இப்படியே எத்தனை வாரம் ? வாழ்கை கடந்து போகிறது?






அடுத்த வாரம்  2007 மீதம் உள்ள செவிலியர்களுக்கு வர வாய்ப்புள்ளது.



இணையதளத்தில் வெளியிட்ட உடன் 100% வந்து விடும் என்று அர்த்தம் இல்லை.



உளவு துறை தகவல் தான். 


அதற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.


சிறப்பான தலைமையை நாம் நமது துறைக்கு பெற்ற காரணத்தால் ஏழு வருடம் பொறுமையாக இருந்து விட்டோம். என்ன செய்ய இன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 

Saturday, October 4, 2014

அடுத்த வாரம் தெரிய வாய்ப்பு இருக்கிறது 2007 மீதம் உள்ள சகோதரிகளுக்கு எப்போ என்று ?


என்னடா சத்தமே இல்லாம இருக்கு ?




செவிலிய சகோதரசகோதரிகளே வழக்கு தொடுக்க வேண்டும் என்றார்கள், போராட்டம் செய்ய வேண்டும் என்றார்கள் ஒன்று செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று தவறாக யாரும் நெனைக்க வேண்டாம்.

வழக்கு முதல் போராட்டம் வரை அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் உள்ளது.

பிரச்னை என்னவென்றால் நாங்கள் வாங்கி இருப்போம். இவர்கள் தான் வழக்கு தொடுத்து போராட்டம் செய்து அரசுக்கு நம் அதிப்தியை ஏற்படுத்தி விட்டார்கள்.

பெனால மை எல்லாம் ஊத்தி ரெடியா வச்சு இருந்தாங்க,

ரெகுலர் ஆர்டர் டைப் பண்ணிட்டு இருந்தாங்க

கையெழுத்து போட போறப்போ இவங்களலா எல்லாம் கெட்டுபோச்சு

அப்படி இப்படினு பழிய தூக்கி போட ரெடியா இருகாங்க.

அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்த வேண்டாம், ஊத்துன மை ஊத்தியதாகவே இருக்கட்டும்.

இன்னும் சில நாட்கள் பார்க்கலாம்,

அரசியல் நிலவரமும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.


இரண்டவாது செவிலியகள் மத்தியில் பல கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடைபெற வேண்டும், செவிலியர்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக நிலவுகிறது.  அதற்கான முயற்சிகள் எடுக்கபட உள்ளது.

அதற்கு செவிலிய சகோதரிகள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.



பார்க்கலாம் பொறுமை வெல்கிறதா அல்லது போராட்டம் வெல்கிறதா என்று ?