இதற்காக மரியாதையைகுரிய லீலாவதி மேடம் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தொகுபூதியத்தை ரத்து செய்து 4500 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
30 ஆண்டுகளாக செவிலியராக பணியில் இணைந்து செவிலியராகவே பணி ஓய்வு பெறுவதால் 10, 15, 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு தரபடவேண்டும்.
இதில் முக்கியமான விஷயம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள அனைவரும் தன் உடல் நலனையும் கருத்தில் கொள்ளாது ஒன்று திரண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து இருந்தனர்.
உண்மையில் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்காக நமது கோரிகைக்காகக் இந்த வயதில் இங்கு வந்து இவர்கள் அமர வேண்டிய தேவை என்ன ? இருந்த போதிலும் நமது நலனையும் நமது துறையின் நலனையும் கருத்தில் கொண்டு நியாமான கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராடியது பெருமையாக இருந்தது.
இந்த கோரிக்கைகள் வென்று எடுக்காமல் இந்த முயற்சி வீணாகி விடகூடாது.
வெற்றிகான அனைத்து வழிகளையும் கையாள வேண்டும்.
பின் குறிப்பு:
மரியாதையைகுரிய லீலாவதி மேடம் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டு ரெகுலர் அடுத்த தெருவில் நிற்கிறது, நமது தெருவுக்கு வர வேண்டுமென்றால் இவ்வளோ காசு கொடுங்கள என்று எவனாவது கேட்டால் ஏற்கனவே சொன்னது போல் காலில் உள்ள செருப்பு அடுத்த ஒரு நொடியில் கைக்கு வந்து விட வேண்டும்.
நமது நலனுக்காக, செவிலிய சங்க நலனுக்காக எப்போது, எங்கே, எவ்வளவு தரவேண்டும் என்று தர வேண்டிய சூழ்நிலை வரும் போது அனைவர்க்கும் தெரிவிக்கக்படும்.
அதுவரை பிச்சைகாரர்களின் பொய்யான தகவலை நம்பி யாமற வேண்டாம் சகோதரிகளே.
ரெண்டாவது பிள்ளைகள் வளர்ந்து சம்பாரித்து தாயை கண்டிப்பாக பார்த்து கொள்ளலாம். அதுவரை பிள்ளைகளுக்கு அவர்கள் செய்வது தவறு இல்லை. மேலும் அவர்கள் நம்மிடம் இருந்து எதுவும் எதிர்பார்ப்பது இல்லை. ரொம்ப நல்லவங்க. எல்லாம் இந்த பிரிண்ட் அவுட் பாய்ஸ் அல்லக்கைகள் செய்யும் வேலை. யாவனவது காசு கீசு கேட்டா வாய்ஸ்ச ரெகார்டு பண்ணி அனுப்பி வைக்கவும்.
No comments :
Post a Comment