விடியலை நோக்கி
சத்தியமாக இது அரசுக்கு எதிரான முயற்சி
அல்ல,
எங்கள் சகோதரிகளின் வேதனைகளை மாற்ற
எடுக்கும் ஒரு முயற்சி
பெரும்பாலான சகோதரசகோதரிகள் போராட்டம்
மற்றும் வழக்கு மூலம் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண விருப்பம் தெரிவித்து
இருந்தனர்.
எனவே நிதி துறை நிராகரித்த கோரிக்கையை
நீதி துறை ஏற்று கொள்கிறதா என்று பார்ப்போம்?
இந்த மாத இறுதிக்குள் முறையாக
அதிகாரிகளுக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் தெரிவிக்கபட்டு இந்த முயற்சி
அமல்படுத்தபடும்.
கீழ்கண்ட கோரிக்கைகளை எதாவது ஒரு
காரணத்தை சுட்டி காட்டி இது தவறு என்று நிருபிக்கும் பட்சத்தில் அனைத்து
கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டு பணியை எத்தனை வருடம் வேண்டுமானாலும்
தொகுபூதியத்தில் தொடருவோம்.
இரண்டரை வருடங்களாக பல ஆயிரங்களை
செலவழித்து சென்னைக்கு நடையயாய் நடந்து இறுதியில் நிதி இல்லை என்று கூறும் நிதி
துறை, இரண்டு வாரம் முன்பு போராட்டம் செய்த நமது துறை நண்பர்களுக்கு ஊதிய உயர்வு
அளித்தது.
அவர்களுக்கு கொடுத்தது தவறு என்று
சொல்ல வில்லை, எங்களை ஏமாற்றி வருகிறீர்களே அதுதான் வருத்தமாக உள்ளது.
பார்க்கலாம் நிதி துறை வழங்காத நிதியை
நீதி துறை வழங்குகிறதா என்று ?
தொடுக்க இருக்கும் வழக்குகள்:
1. இந்திய மருத்தவ கவுன்சில் விதிகளின்
படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் செவிலிய பணி இடங்களை தோற்றுவித்து அதன்
தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற
2. NABH மருத்துவமனைகளில் NABH நெறிமுறைகளின் படி போதுமான அளவில் செவிலியர் எண்ணிக்கையை உயர்த்த
3. பெண் தொழிலாளர் சட்டவிதிகளுக்கு
எதிரான 12 மணி நேரத்தை மாற்றி 8 மணி நேர பணியாக வரன்முறை படுத்த
4. தொகுப்பூதிய செவிலியர்களுக்கும்
ஊதியத்துடன கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க கோரி
No comments :
Post a Comment