Sunday, August 24, 2014

கறுப்பு பேட்ச் - 25-08-2014 முதல் 27-08-2014 -தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய கோரி


அரசின் கவனத்தை ஈர்கும் பொருட்டு முதல்கட்டமாக வரும்
25-08-2014 முதல் 27-08-2014 வரை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை (BLACK BATCH) அணிந்து பணிபுரிய உள்ளோம்.
1. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 4000 த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2.செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும்,
3. 24 மணி நேரமும் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் (23-08-2014 - திருச்சி)

அன்பார்ந்த செவிலிய தோழமைகளுக்கு வணக்கம்,

நமது தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் 23-08-2014 அன்று, மாலை 2.00 மணியளவில்,   "மதுரம் ஹாலில்" NGGO HOME, ரெனால்ட்ஸ் ரோடு  திருச்சியில் நடைபெற்றது.அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பு செயதனர்.

கூட்டத்தில் எடுத்துக் கொண்ட  விவாதங்கள்:-தமிழக முதல்வருக்கு நன்றி
1) கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் சுகாதார துறைக்கு 1) "அம்மா குழந்தை நல பெட்டகம்" 2} தாய் சேய் நல பிரிவுகளை மேன்மைமிகு மையங்களாக உயர்த்தியது 3) பல்வேறு புதிய வட்ட மருத்துவமனைகளை உருவாக்கியமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.செயற்குழு கூட்டம் இடமிருந்து வலம் 1) இரவி சீத்தாராமன், 2) உமாபதி, 3) கார்த்திகா, 4) கலைச்செல்வி, 5) முனீஸ்வரி.

2) சுகாதார துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டினாலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் MCI, மற்றும் NABH மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்கு போதுமான செவிலியர்கள் இல்லை, மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணி செவிலியர்கள் இல்லை என்பது விவாதிக்கப்பட்டது.MCI & NABH குறைபாடுகள் பற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும்  இரவி சீத்தாராமன் விளக்குகிறார்
3) இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் விதமாக ஒப்பந்த செவிலியர்கள் சங்க கூட்டத்திற்கு செல்வதை தேச துரோகம் போல சித்தரித்து, ஒப்பந்த செவிலியர்களின் மீது அடக்குமுறையை திணிக்கும் அதிகாரிகளுக்கும், செவிலியர்களை கூட்டத்திற்கு சென்றாலே SUSPEND மற்றும் TERMINATE செய்துவிடுவேன் என கூறும் அலுவலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.செவிலியர்களின் அடிப்படை உரிமை மறுப்பு பற்றி இரமேஷ் பேசுகிறார்
4) நமது சங்கத்தின் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி உறுப்பினர்களை அனைவரையும் திரட்ட நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் 2014 - 2015 வருடத்திற்கான உறுப்பினர் அட்டை  வழங்க நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது. விரைவில் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.உறுப்பினர் சேர்க்கை, RCH/MMU/NCD பிரிவினை பற்றி பேசியபோது
 5) செவிலியர்கள் RCH - NCD - MMU   ஆகியோரிடையே மனக்கசப்பு மற்றும் ஒற்றுமையில்லை எனவும், இந்நிலை வளர்ந்து நமக்கு நாமே எதிரி ஆகிவிடக்கூடாது என கூறப்பட்டது.


6) தமிழக அரசின் சுகாதார துறையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் என்று கூறி ஏமாற்றி செவிலியர்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேற்பட்ட காலத்தை பணிக்காலத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.7) தமிழக முதல்வர் வழங்கிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்காமல் இல்லை என்று கூறிவதாக புகார் கூறப்பட்டது, இது அரசாணையை மீறும் செயலாகும் இது குறித்து அரசின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும்.8) நமது நடவடிக்கைகள் குறித்து நமது செவிலியர்களிடம் விழிப்புணர்வு இல்லை எனவும், கூட்டங்களுக்கு போக வேண்டாம் என நமது செவிலியர்களே தடுப்பதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல் வருந்த தக்கது. இப்போக்கினை மாற்றி கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது9) தமிழக சுகாதார துறையில் செவிலியர்களின் ஊதியம் வேறு வேறாக உள்ளது (DME - 5500, DMS - 7000, DPH - 7700 + 500, REGULAR - 29710) . இதனை போக்கவும், நமது பணி நிரந்தரத்திற்கும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் திங்கள் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.10)

திருநெல்வேலி (கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள்) செயற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

மதுரை (ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்) செயற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

கோயம்பத்தூர் (ஈரோடு, திருப்பூர், சத்தியமங்களம்,  ஆகிய மாவட்டங்கள்) செய்ற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

என தீர்மானிக்கப்பட்டது.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 4000 த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2.செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும்,

3. 24 மணி நேரமும் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும். 

மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்கட்டமாக வரும் 25-08-2014 முதல் 27-08-2014 வரை அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை (BLACK BATCH) அணிந்து பணிபுரிய உள்ளோம்.

-- இவண்
-- தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.

Friday, August 22, 2014

தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற உடனடியாக செய்யவேண்டியது-வாக்கெடுப்பு முடிவுகள்
மொத்த வாக்குகள்   -1567

நீதிமன்றம் போராட்டம்-இரண்டும் 
1054
போராட்டம்
220
நீதிமன்றம்
131
அமைதியாக அரசிடம் முறையிட்டு கொண்டே இருப்பது
79
பணி நிரந்தரத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக பணி புரிவது

3
மற்றவை
80


Sunday, August 17, 2014

வருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூலில் ஒரு காட்டம், வேட்டை நடத்திவிட்டு, பின்பு ஒரு நோட்டம்


நிரந்தர அரசு செவிலிய சங்கத்தின் சார்பில் விரைவில் கூட்டம் நடைபெற இருப்பதாக சொல்கிறார்கள், நடந்தால் மரியாதையைகுரிய தமிழ்நாடு கவர்மென்ட் நர்சஸ் அசோசியேசன் தலைவர் அறிவுகண் மேடம் மற்றும் செயலாளர் லீலாவதி மேடம் அவர்களிடம் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுகளும் கேட்க நெனைக்கும் நியாமான தகவல்கள் ?


இந்த கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் தயவு செய்து அடியேனின் தவறை பொறுத்தருள்க

இத்தனை ஆண்டுகள் தான் தொகுப்பூதிய காலம் என்று தொகுப்பூதிய செவிலியர்களின் தொகுப்பூதிய காலத்தை இத்தனை ஆண்டுகாலமாக தாங்கள் வரன்முறை படுத்தாதன் காரணம் என்ன ?


இரண்டு ஆட்சியிலும் ஓட்டுமொத்த செவிலிய சமூகத்தின் பிரதிநிதியாக தலைமைபொறுப்பில் உள்ள தங்களால் எந்த ஆட்சியில் நமது நிலையை ஆட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களால் வெற்றி பெற முடியவில்லையே
இந்த நிலைக்கு காரணம் முயற்சிகள் தவறா 
அல்லது 
முயற்சி மேற்கொண்டவர்கள் மேல் உள்ள தவறா?


ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொகுப்பூதிய செவிலியபிள்ளைகளின் 6 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்தபோது அதை தாங்கள் எதிர்த்து குரல் எழுப்பபடாதன் காரணம்?

மூன்று செவிலியர்கள் பணி புரிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு செவிலியர்களாக மாற்றி ஆணை பிறப்பித்து பெண் பிள்ளைகளின் தலையில் சுமையை எதற்காக கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகளை அனாதையாக விட்டு விட்ட காரணம் ?இரண்டு செவிலியர்கள் தான் ஒரு நிலையத்திற்கு என்ற சூழலில் ஒரு செவிலியர் எதோ ஒரு சூழலில் விடுப்பு எடுத்தால் அடுத்த செவிலியர் 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிந்து கொண்டு உள்ளார்களே அவர்களுக்கு தாங்கள் தரும் பதில் என்ன ?

கள்ளகுறிச்சியில் 2012  ஆம் ஆண்டு செயற்குழு கூட்டம் நடத்தி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கண்டிப்பாக பெற்று தருவேன், அதற்காக பேரணி நடத்துவோம் என்ற முழங்கி விட்டு அதற்காக அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரவேண்டும், அதற்கான சந்தாவை கட்டவேண்டும், பேரணி போக 500 ரூபாய் அனைவரும் தரவேண்டும் என்று முழங்கி விட்டு பல இடங்களில் வசூல் செய்து விட்டு அந்த பேரணியை நடத்தாமல் விட்டு விட்டுவிட்ட காரணம் என்ன ? 
தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற்று விட்டார்கள் என்ற காரணத்தால?


மருத்துவ துறை சார்ந்த ஒரு வருடம் இரண்டு வருட படிப்பை படித்தவர்கள், பகலில் மட்டுமே பணிபுரியும் அவர்களுக்கு 24 மணி நேரமமும் இரவு பகலாக பணி புரியும் தொகுப்பூதிய செவிலிய பிள்ளைகளை விட அதிகம் தொகுபூதியத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது எதற்கு தங்களின் மேலான கவனத்திற்கு ஏன் வரவில்லை?


வாங்கும் அரை ஊதியமும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அலுவலக ஊழியர்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கும் அவல நிலைக்கு தொகுப்பூதிய செவிலியபிள்ளைகள் தள்ளபட காரணம் என்ன?


ஆறாவது வருடம் முடித்து ஏழாம் பணி புரியும் 2007 BATCH சேர்ந்த 160 செவிலியர்களிடம் இந்த மாதம் ரெகுலர் வர இருக்கிறது, வரவேண்டுமென்றால் 5000 உடனே தாருங்கள் என்று உங்கள் பெயரை சொல்லிகொண்டு சிலர் கேட்கிறார்களே 
அது உங்கள் செவிகளுக்கு எட்ட வில்லையா ?
அல்லது 
எட்டாத தூரத்தில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் உங்களுக்கும் ஆனா இடைவெளி இருக்கிறதா ?


பணி நிரந்தம் நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு காலி பணிஇடங்களில் தானாக வந்த (retirement vacant ) பணி நிரந்தரத்தை நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு 2007 batch தொகுப்பூதிய செவிலியர்கலிடம் சிலர் 5000 ரூபாய் கலெக்ட் செய்தது மோசடி செய்தார்களே, இதை கொடுத்ததால் தான் தனக்கு ரெகுலர் வந்தது என்று குருட்டுதனமாக தொகுப்பூதிய செவிலியர்கள் என்னும் வண்ணம் கைவண்ணம் இருந்தது தங்கள் கவனத்திற்கு வரவில்லையா ?


பத்து நாட்களுக்கு முன் போராட்டம் செய்து பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நியாமானது என்று அரசுக்கு உணர்த்தி ஒரே வாரத்தில் முறையான ஊதிய உயர்வுவையும் அரசு ஆணையையும் பெற்றது போல் இத்தனை ஆண்டுகாலம் செவிலியதுறையின் தலைமை பொறுப்பில் உள்ள தங்களால் எந்த ஒரு சாதனையும் செய்ய முடிய வில்லையே ! எங்கள் வேதனையும் தங்கள் சாதனையும் தொடர்பு இல்லாமல் தொலைந்து கிடைக்கிறதே?


சுருக்கமாக சொன்னால் இன்னும் MMC & ஸ்டான்ட்லி மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் ஆறாம் ஆண்டு தொகுபூதியத்தில் வெறும்  5500 ரூபாய்க்கு துப்புரவு பணியார்களை விட குறைவான ஊதியத்தில் செவிலியபிள்ளைகள் பணி புரிகிறார்களே அதற்காக தாங்கள் வருத்த படவில்லையா ?


பயிற்சி மருத்துவர்களின் ஊதியத்தை ஒரே வாரத்தில் உயர்தி அதற்கு அரசு ஆணை வெளியிட முடிகிற நிர்வகாத்தல் MMC & ஸ்டான்ட்லி, NCD, CEMONC பிரிவுகளில் பணி புரியும் செவிலியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு ஆணையை வெளியிட இரண்டரை ஆண்டுகளை தாண்டிய பிறகும் கூட அந்த கோப்பு முதல்வர் அவர்களின் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளது என்ற நிர்வாகத்தின் மென்மையான போக்கை தங்களால் கேள்வி கேட்க ஏன் முடியவில்லை ?


தமிழகத்தில் 1777 மேற்பட்ட 2008 batch செவிலியர்கள் ஐந்தாம் வருடம் முடித்து ஆறாம் வருடத்திலும் 2300 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் மூன்றாம் வருடம் முடித்து நான்காம் வருடத்திலும் பணிபுரியும் செவிலியபிள்ளைகளின் வாழ்வில் தங்களால் எதற்கு ஒரு விடியலை ஏற்படுத்த முடியவில்லை ?


மாவட்ட மருத்துவமனைளை மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்திய அரசு ஆணையில் மருத்துவர்களுக்கு மட்டும் நிரந்தர பணி இடங்களாக அறிவித்து விட்டு 1160 செவிலிய பணி இடங்களை தொகுப்பூதிய செவிலிய பணி இடங்களாக அறிவித்த அரசு ஆணையை ஏன் தங்களால் நிரந்தர பணி இடங்களாக அறிவிக்க வைக்க இயலவில்லை ?


அதற்காக தாங்கள் கேக் வெட்டி கொண்டாடியது தான் நமக்கு மிச்சமா ? அல்லது அறிவிக்கபட இருப்பது நிரந்தர பணி இடங்களா அல்லது தொகுப்பூதிய பணி இடங்களா என்பதை கூட முறையாக தெரிந்து கொள்ளாமல் அதை வெற்றி விழா போல கொண்டாடி அதை தொலைகாட்சியில் பார்த்த செவிலியர்கள் 1160 பணி இடங்கள் வரும் இதன் மூலம் நாம் பணி நிரந்தரம் பெற்று விடுவோம் என்ற எண்ணி ஏமாற மறைமுக காரணம் ஆகி விட்டிர்கள் என்பது .குற்றமா? அல்லது தாங்கள் நடந்து கொண்டது தவறு என்று சுற்றி காட்டிய ஒரு செவிலியரை தாங்கள் வசைபாடியது குற்றமா ?


அரசு மருத்துவகல்லூரிகளில் MCI விதிப்படி செவிலியர்கள் நியமிக்கபடவில்லை என்பதும் தங்களுக்கு தெரிந்து இருந்தும், தாங்கள் பல வருடமாக பணி புரியும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியிலேயே வெறும் 132 நிரந்தர செவிலியர்களை வைத்து கொண்டு 372 நிரந்த செவிலியர்கள் இருப்பதாக  நிர்வாகம் கணக்கு காண்பிக்கும் போது அதை தடுத்து உண்மையில் அங்கு 372 [i]செவிலியர்கள் நியமிக்கபட முயற்சி எடுக்காமல் இல்லாமல் இருப்பதாக காண்பிக்கபட்ட பணி இடங்களில் பணி நிரந்தரம் பெற்று பணி ஆற்ற வேண்டிய தொகுப்பூதிய பிள்ளைகளின் வாழ்வில் விடியலை விலக்கி இருளை நீடித்த நிர்வாகத்திற்கு தலைமை பொறுப்பில் உள்ள தாங்கள் துணை போவது நியாமா?


நிதி துறை எங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட
எங்கள் நீதி துறை, தங்கள் நிதி துறையின் காரணமாக, எங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய நியாயத்தை, நீதியை, நிதியை, தங்களின் நிதிக்காக நீடித்தது நிதர்சனம நிஜம் ?

வருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூலில் ஒரு காட்டம், வேட்டை நடத்திவிட்டு, பின்பு ஒரு நோட்டம்

இதுதான் அரசு நிரந்தர செவிலிய சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மேல் கூறபடும் குற்றசாட்டு, உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் கயவர்கள், கள்வர்கள் எங்களை போன்ற கோமாளிகள் உங்களை போன்ற செவிலிய துறைக்காக தன்னை தியாகம் செய்து கொண்டு உழைத்து கொண்டு இருக்கும் தங்கள் மேல் சுமத்தும் குற்றசாட்டு, இதனை பொய்யாக்கி எங்கள் முகத்தில் கரியை பூசினால் சந்தோஷபடுவோம்.

விடியதா வாழ்கையில் விலகாத இருளை துணையாக கொண்டு வாழும் எங்கள் வாழ்கை மாறாது, உங்கள் கொள்கையும் பார்வையும் மாறாது.


Wednesday, August 13, 2014

கோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்


கோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவை செய்தால் பாவம் பாவம் பாவம்


கோவில் தொகுப்பூதிய பணியாளர்கள் 9,808 பேர் பணி நிரந்தரம்

சென்னை : கோவில்களில், பணிபுரியும் 9,808 தற்காலிக கோவில் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர்

வெளியிட்ட அறிவிப்புகள்:
கோவில்களில் அன்னதானம் வழங்கும் பணியில் உள்ள, சமையலர், உதவியாளர், துப்புரவாளர் என, 820 பேர் தொகுப்பு ஊதியத்திலும், தினக் கூலியிலும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, உரிய சம்பள விகிதத்தில், ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, 490 கோவில்களில், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் 804 பேருக்கு, ஊதிய விகித முறையில் பணி வரன்முறை செய்யப்படும். மேலும், காலியாக உள்ள, 154 பணியிடங்கள் நிரப்பப்படும். கோவில்களில், தொகுப்பூதிய அடிப்படையில், ஐந்தாண்டுகளுக்கு மேல், 8,184 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், ஊதிய விகித அடிப்படையில், வரன்முறை செய்யப்படுவர்.

இதன்மூலம், ஆண்டுக்கு, 44.14 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.இந்த தொகையை விட நமக்கு குறைவாகத்தான் ஆகும் சகோதரிகளே
 

நிதி துறையிடம் நிதி இல்லையாம் கடந்த இரண்டரை வருடமாக இதுதான் நிதிதுறையின் பதில்.
 

பத்து நாட்களுக்கு முன் போராட்டம் செய்த பயிற்சி மருத்துவர்களுக்கு நிதி எப்படி வந்தது???????????????????????????

 

கொடுப்பதற்கு மனம் இருந்து எடுப்பதற்கு பணம் இல்லை என்றால் ஏற்று கொள்வோம் நிச்சயமாக ????????????

 

 

எடுப்பதற்கு பணம் இருந்தும் கொடுப்பதற்கு மனம் இல்லை என்பது தான் வேதனையின் உச்சம்

 

 ஓவ்வொரு தொகுப்பூதிய செவிலியரும் 24 மணி நேரமும் பணி புரிந்து என்ன பயன் ????????????????????

 

பணி புரிந்து கொண்டே இருக்க வேண்டியது

தன்குழந்தைக்கு தாய்ப்பால் தர நேரமில்லாமல் பிரசவித்த தாய்க்கு தாய்பாலின் மகத்துவத்தை உணர்த்திகொண்டு

 

 

நமது மகத்துவத்தை ஒரே நாளில் ஒரே குரலில் உணர வைப்போமா?

Tuesday, August 12, 2014

செவிலிய சுகந்திரபோர்:


இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

செய்வதற்கு மட்டும் செயல்கள் மட்டுமே இருக்கின்றன.

இந்த மாத இறுதிக்குள் அல்லது இன்னும் ஒரு வாரத்திலோ..........................................என்னவென்று அனைவருக்கும் தெரிவிக்கபட்டு விடும்.


ஒத்துழைத்தால் உயர்வு ஊதாசினபடுத்தினால் தாழ்வு

சத்தியமாக இது அரசுக்கோ அதிகாரிகளுக்கோ யார்க்கும் எதிரான செயல் அல்ல, 

நமது நியாமான கோரிக்கைகளை வென்றெடுக்க முன்னெடுக்க இருக்கும் செவிலிய சுகந்திரபோர்


முடிவு உங்கள் கைகளில் சகோதரிகளே

Monday, August 11, 2014

செவிலியர் புகார் பெட்டியில் ஊதியம் அரியர் சமந்தமாக புகார் - மரியாதையைகுரிய PD மகேஸ்வரன் சார் அவர்கள் உடனடி நடவடிக்கை

கடந்த இரண்டு வருடங்களாக பல தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அரியர் மட்டும் ஊதியம் அரசு ஆணை 312 படியும் அரசு 342 படியும் வழங்கபடாமல் பல இடங்களில் பல குளறுபடிகள் நடந்து வந்தது. பணியும் செய்து விட்டு அதற்கு வழங்கப்படும் முறையான ஊதியத்தையும் பெறமுடியாமல் நமது தொகுப்பூதிய செவிலியர்கள் பல இன்னல்களை சந்தித்து வந்தனர், சந்தித்தும் கொண்டு இருகின்றனர்.
இதனை நாம் மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்த்து துறை செயலர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். மரியாதைக்குரிய செயலர் சார் அவர்களும் தொகுப்பூதிய செவிலியர்களின் உண்மை நிலையை புரிந்து செவிலியர்கள் மாதமாதம் உரிய நேரத்தில் ஊதியம் பெற சில முக்கியமான செயல்களையும் உதவிகளையும் செய்தார். அதன் பின்பு NRHM இயக்குனர் அவர்களை சந்தித்து நமது குறைகளை தெரிவித்து இருந்தோம்.
அதன்பின்பு மரியாதைக்குரிய NRHM இயக்குனர் மகேஸ்வரன் சார் அவர்களின் ஆணையாலும் அங்கு பணிபுரியும் CHIEF ACCOUNT OFFICER சார் அவர்களாலும் தொகுப்பூதிய செவிலியர்கள் மாதமாதம் ஊதியம்  பெறவும் அரியர் தொகை நிலுவை இன்றி வழங்கபடவும் பணிகள் மேற்கொள்ளபட்டன.
இருந்தபோதிலும் பல துணைஇயக்குனர் அலுவலங்களிலும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகங்களிலும் அவர்களுக்கு உள்ள பணி சுமை காரணமாக தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதிய சுமையை கண்டுகொள்ள இயலவில்லை.  
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய குறைபாடுகள் எதுவும் உள்ளதா NRHM இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பெரும்பாலான துணைஇயக்குனர் அலுவலகங்களில்  தொகுப்பூதிய செவிலியர்களின் பிரச்சனைகளை யாரும் பெரிதாக எடுத்து அதை NRHM இயக்குனர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாது போல் காண்பிக்கபட்டு விட்டது.
பல துணை இயக்குனர் அலுவலங்களில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பல மாதங்களாக அரியர் மற்றும் ஊதிய நிலுவை தொகைக்கான தேவை இருப்பதை முறையாக கருத்துரு அனுப்பி தெரிவிக்காததொடு NRHM அலுவலகத்தில் இருந்து அவர்களே கேட்கும்பொது கூட யாருக்கும் எந்த ஊதிய பிரச்னையும் இல்லை என தெரிவித்து விடுகின்றனர். இதனால் போதுமான நிதி  அரசில் இருந்தும் எவ்வளவு தேவை என்பதை துணை இயக்குனர் அலுவலங்கள் முறையாக தெரிவிக்காததால் NRHM இயக்குனர் அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி ஒதுக்க இயலவில்லை.
தேவையை தெரிவித்தால் தானே அவர்களால் நமக்கு உதவ முடியும்.
இதனால் பல தொகுப்பூதிய செவிலியர்கள் பலர் பல மாதங்களாக ஊதியம் பெறாமல் இருப்பதையும், கடந்த 2012 ஆண்டு முதல் அரியர், அரசு ஆணை 342 படி 12  மணி நேர பணிக்கான  கூடுதல் தொகை வழங்கபடவில்லை என தெரிவித்தனர்.
எனவே இந்த மாதம் ஊதியம் அரியர் வராமல் இருந்த செவிலியர்கள் பலர் நாம் செவிலியர் புகார் பெட்டியில் பதிவு செய்ய கேட்டு கொண்டதற்கு இணங்க அவர்களின் பிரச்னைகளை பதிந்து இருந்தனர்.
இதனை கடந்த வாரம் ஐந்தாம் தேதி அன்று NRHM இயக்குனர் அவர்களின்
கவனத்திற்கு இந்த ஊதிய பிரச்னை சமந்தமாக உரிய ஆவணங்களுடனும், மேலும் செவிலியர் புகார் பெட்டியில் பதிந்த செவிலியர்களின் தகவலை சேர்த்து அளித்தோம்.
இதனை அடுத்து அனைத்து துணை இயக்குனர் அலுவலங்களுக்கும் தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம் மற்றும் அரியர் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யவும் மேலும் செவிலியர் புகார்பெட்டில் பதிவு செய்த அனைத்து செவிலியர்களுக்கும் உடனடியாக ஊதியம் மற்றும் அரியர் பிரச்சனையை சரிசெய்து அந்த தகவலை வரும் 20  ஆம் தேதிக்குள் NRHM இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்க ஆணை இடபட்டு உள்ளது.தொகுப்பூதிய செவிளியர்களின் ஊதிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கும் மரியாதைக்குரிய உயர்திரு இயக்குனர் மகேஸ்வரன் சார் அவர்களுக்கும் CHIEF ACCOUNT OFFICER சார் அவர்களுக்கும் NRHM அலுவலக ஊழியர்களுக்கும் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


உயர்திரு NRHM இயக்குனர் அவர்களுக்கு நாம் அனுப்பிய மின்னச்சல்
From:-
S. Ravi Seetharaman,
Vice President,
Tamilnadu Govt Contract Nurses Welfare Association,
Chennai
To:-
The Mission Director,
State Health Society,
Chennai -6.
Respected Sir,
            Greetings Sir, 
            Sub: - Tamil Nadu Government Contract Nurses Salary and Allowance issues-      
            Regarding
I am Ravi Seetharaman, staff nurse, from Contract Nurses Association (Tamilnadu Government Contract Nurses Welfare Association.)
This mail is regarding Salary and Allowance issues of the Contract Nurses.
We would like to cordially thank for your effective measures and efforts to solve salary and arrear issues of our medical department employees and especially contract nurses.
In spite of your serious and sincere efforts, contract nurses who are all working under NRHM in RCH and MMU schemes are suffered due to NOT getting proper salary and allowances.
For your kind information, in all over Tamilnadu in PHCs more than 1400 nurses are working in sixth year because they joined in 2009 and also remaining members are working fourth year. But the fund allotted based on fourth year calculation so that some places sixth year working staff nurses getting low salary and NRHM allowance due to less fund.
 Most of the contract nurses and their family members are depended on this salary only. 
 Getting salary from the attached office is tougher than work. They simply tells no fund for salary and allowances. We have no other way to express our problem in this regard sir.
This salary and allowance problem are persist in all over Tamil Nadu. Here I have mentioned example only sir.
For your kind reference, we would like to mention some districts and some nurses contact numbers.
If the contract nurses intimate salary issues to higher official to solve their problems, some places immediate superiors like office people and BMO, and deputy director office people taking revenge actions toward contract nurses who intimate higher officials. We kindly request you sir, please solve the salary and arrear issues without affect any contract nurse.
We would not like to create problem to anyone, simply we would like to solve our people problem sir.
The last and least hope is for us is you only sir. That is why we are sending this mail to you sir. We need our salary monthly basis sir, please give any permanent solution for this salary issue sir.
If anything find wrong on this measures means I sincerely beg your pardon sir.
In this mail, I have attached contract nurse’s salary issue details. Please find the attachment.  
Thanking You Sir
S.Ravi Seetharaman
Tamilnadu Govt Contract Nurses Welfare Association
cell:-9789 3435 91

               www.cbnurse.com