Thursday, July 31, 2014

HAI SISTERS

இதுவரை எங்களால் முடிந்த அளவு அலைந்து திரிந்து முயற்சி செய்து விட்டோம். அதேபோல் மரியாதைக்குரிய நமது துறை அதிகாரிகளும் நமக்காக எவ்வளவோ முயற்சி செய்து விட்டனர். செய்து கொண்டும் இருகின்றனர்.


ஆனால் நிதித்துறையில் நமக்கு ஒதுக்க நிதியும் நீதியும் இல்லை என்ற காரணத்தால் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரதிற்காக மக்கள் நல்வாழ்வு துறையால் அனுப்பபட்ட அனைத்து கோப்புகளுக்கும் முடிவு எட்டபடவில்லை.  இன்னும் சொல்ல போனால் நிதி துறையில் கூட நமது கோரிக்கை நியமானது ஆனால் நிதி தான் இல்லை என்று தெரிவித்து விட்டனர். இதே நிலை நீடித்தால் ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் கடந்த சூழலில் 2009 BATCH செவிலியர்கள் பணி நிரந்தரம் பெறவே இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். இதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு பணியில் இணைந்த செவிலிய சகோதரிகள் இருகின்றனர்.

ஏற்கனவே நாம் அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவித்து விட்டோம். போராட்டம் செய்வதோ, அல்லது வேறு ஏதேனும் வழிகளில் அரசுக்கும் அதிகாரிகளும் சிறிதளவு கூட எங்களால் எந்த தொந்தரவும் மனவருத்தமோ வரகூடாது என்பது தான் நிஜமாகவே எங்கள் எண்ணம். ஏனெனில் இப்போது உள்ள அனைத்து நமது துறை அதிகாரிகளும் நமது நலம் மீது அக்கறை கொண்டவர்களே, ஆனால் அவர்களையும் தாண்டி சில விஷயங்கள் உள்ளது.

வரும் 11 ஆம் மாநில கோரிக்கை அன்று தெய்வாதினமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அருளால் எதாவது நடந்தால் தான் உண்டு.  செவிலிய பெண்களின் தலைஎழுத்தை மாற்ற அவர்கள் ஒருவரால் தான் முடியும்.

இதன் பின்னர் ஒன்றும் நடைபெறவில்லை எனில் அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து சில நிலைகளை எடுத்து உள்ளோம்.

அனைத்து செவிலியர்களையும் வைத்து கூட்டம் நடத்தி இறுதியாக அவர்களிடம் கருத்து கேட்டபின்பு அடுத்த கட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளபடும்.

மாற்றத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கவேண்டாம். முதலில் உங்களில் ஏற்படுத்தி கொள்ளுங்கள்