Tuesday, July 15, 2014

தி ஹிந்து நாளிதலுக்கு மிக்க நன்றி



மதிப்பிற்குரிய ரவி சீத்தாராமன் அவர்களுக்கு,
வணக்கம்

தங்களின் மதிப்புவாய்ந்த பங்களிப்புக்கு நன்றி! தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வரவேற்கிறோம். 12.5.14 அன்று வெளியான தங்களின் ‘செவிலியர்களைச் சுரண்டாதீர்கள்’ கட்டுரைக்கான மதிப்புத்தொகையை ‘தி இந்து’ பின்பற்றிவரும் முறையில் (அதாவது, நேரடியாகத் தங்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறை) தங்களுக்கு அனுப்பிவைக்க, வங்கிக் கணக்கு எண், வங்கிக் கிளை, வங்கிக் கிளை எண் போன்று இன்னும் பலவும் தேவைப்படுகின்றன. எங்களின் முழுமையான தேவைக்கு இத்துடன் இணைத்துள்ள படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படிவத்தில் தங்களின் கையெழுத்து அவசியமில்லை.

தங்கள் அன்புள்ள,
ச.சிவசுப்பிரமணியன்,
தலைமை உதவியாசிரியர்,
‘தி இந்து’