Wednesday, May 28, 2014

28/05/2014 அன்று சென்னை பயணம் - 2009 பேட்ச் ரெகுலர் விரைவில்கடந்த 28/05/2014 ரெகுலர் சமந்தமான பணிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஊதிய பிரச்சனைகள், மற்றும் NCD & CEMONC செவிலியர்கள் ஊதியம் உயர்வு சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.


தலைமைசெயலகத்தில் நமது மரியாதையைகுரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களை சந்தித்து ரெகுலர் சமந்தமான பணிகள் குறித்து கேட்டு அறிந்தோம்.


ரெகுலர் எப்போது வரும் ?
ரெகுலர் சமந்தமாக பணிகள் மூன்று விதமான கோணங்களில் மும்முரமாக முயற்சிகள் மேற்கொள்ளபட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான முடிவு தெரிய வாய்ப்பு உள்ளது. இதை பற்றி விளக்கத்தை ஒரு தெளிவான நிலை பெறபட்டவுடன் அடுத்த வாரம் தெரிவிக்கபடும். ஏறக்குறைய 2009 பணியில் இணைந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்பு உள்ளது. முழுமையாக பெற்ற தகவல்கள் எப்படி ரெகுலர் செய்வார்கள், எத்தனை பேர் செய்வார்கள், அனைத்தையும் தெரிவிக்காததற்கு காரணம் யாரையும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்பதால் தான். ஏனெனில் ஒரு தெளிவான நிலை பெறப்பட்டஉடன் அனைவருக்கும் சரியான தகவல் தெரிவிக்கபடும்.


இதில் ஒரே ஒரு விஷயம் உள்ளது. அது விரைவில் தெரிவிக்கபடும். பழசுதான் நம்ம பழைய ஆளுங்க பழக்கி வச்சது தான்.

Anyway get ready for regular. The one & only ultimate aim is getting REGULAR soon. We no need to interrogate about negative things.

ஊதிய பிரச்னை அரியர் பிரச்னை சமந்தமாக

தமிழகம் முழுவதும் அரசு ஆணை 312 ஊதியம் அளிக்காமல், ஐந்தாம் வருடம் ஆறாம் வருடம் பணி புரியும் செவிலியர்களுக்கு வெறும் நான்கு வருடம் பணி புரிவதற்கான ஊதியம் வழங்குவதையும், மேலும் 12 மணி நேர பணிக்கான ஊதியத்தை வழங்காமல் தொகுப்பூதிய செவிலியர்களை அலைகிழிப்பதையும், RURAL ALLOWANCE, ஊதியம் வழங்க சில இடங்களில் ஊதியம் வழங்க வேண்டிய நிலை இருப்பது பற்றியும், எடுத்து கூறினோம்.

NCD & CEMONC ஊதிய உயர்வு:
நிதிதுறையில் இறுதி கட்ட பணிகளுக்காக உள்ளதாகவும் விரைவில் வெளியிடபடும் என்று தெரிவிக்கபட்டது


செவிலியர் புகார் பெட்டி
நமது www.cbnurse.com மற்றும் www.tnfwebsite.com என்ற இணையதளங்களில் செவிலியர் புகார் பெட்டியில் பதிவு செய்து இருந்த செவிளியர்களில் மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ள 12 செவிலியர்களின் விவரங்களை மட்டும் அளித்தோம்.
குன்னூர் மேலூர்ஒசாட்டி மற்றும் கன்னியகுமாரி குட்டகுளி PHC யில் முறையே 7 மாதம் 5 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்று தெரிவித்தோம் மற்ற செவிலியர்களின் பிரச்னையும் பார்த்த மரியாதையைகுரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்கள் உடனே மரியாதையைகுரிய திட்ட இயக்குனர் மகேஸ்வரன் (PD) அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கீழ்க்கண்ட செவிலியர்களின் பிரச்சனையை உடனே சரிசெய்யுமாறும் மற்றும் இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பிரச்னையை முழுவதுமாக தீர்க்கவும், அதற்கான உயர்அதிகாரிகள் அலுவலர்கள் கொண்ட மீட்டிங் நடந்த ஏற்பாடு செய்யுமாறும் கூறி நாம் கொண்டு சென்ற நகலை FORWARD செய்து PD அவர்களை உடனே சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

திட்ட இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு
திட்ட இயக்குனர் அவர்களை சந்தித்து செயலர் அவர்களால் FORWARD செய்த நகலை அளித்ததும் PD அவர்களே  குன்னூர் மேலூர்ஒசாட்டி மற்றும் கன்னியகுமாரி குட்டகுளி செவிலியருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனையை கேட்டு அறிந்தார். அவர்களுது மாவட்ட DD அவர்களை தொடர்பு கொண்டு இன்னும் ஒரே நாளில் இந்த இந்த செவிலியர்களின் ஊதியம் தரப்படவேண்டும் என்று ஆணையிட்டார். மேலும் ஊதிய தரப்படாமல் இருப்தற்கான இடையூறுகளை கண்டறிந்து, அதை சரி செய்ய வரும் வாரம் அனைத்து முக்கிய அலுவலர்களையும் வைத்து மீட்டிங் நடந்த அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு ஆணை இட்டார்.

நாமும் இனி வரும் காலங்களில் இவ்வாறு ஊதியம் தரப்படாமல் இருந்தால் மின்அஞ்சல் மூலம் தங்களது கவனத்திற்கு கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கேட்டு அனுமதி பெற்று உள்ளோம்.

எனவே இனிவரும் நாட்களில் செவிலியர்கள் நமது இணையத்தில் உள்ள இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளவும்.

தயவு செய்து எதோ ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் போல் இல்லாமல் DIPLOMA IN NURSING படித்த செவிலியர்கள் போன்று பிரச்சனைகளை தெளிவாக பதிவு செய்யவும்.

அதிகாரிகள் தொடர்பு கொண்டாலும் கனிவாகபணிவாகதெளிவாக, அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக  தங்களது கருத்தை தெரிவியுங்கள்.

WE ARE NURSES. WE ARE DOING LIFE SAVING SERVICE.  

DPH சார் அவர்களுடன் சந்திப்பு:

கடைசியாக DPH சார் அவர்களை சந்தித்து நமது பிரச்சனைகளை தெரிவித்தோம். செயலர் அவர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், விரைவில் விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் வேறு ஏதேனும் பிரச்சனைகளில் இருந்தால் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு தெரிவத்தார்.


சுவாரசியமான விஷயங்கள்:

மேலே உள்ள தொகுப்பூதிய செவிளியர்களில் சிலர்க்கு அன்று இரவே DD அலுவலத்தில் இருந்து அழைப்பு வந்து உள்ளது. நாளை காலை உங்களுக்கு செக் வழங்கபடும் என்று தெரிவிக்க பட்டு உள்ளது. 

ஒரு மாவட்டத்தில் உள்ள DD ஆபிஸ் அலுவலரை தொடர்பு கொண்ட போது இந்த பிரச்னை இத்தனை நாள் எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் அலுவலத்திற்கு சென்று கொண்டு இருப்பதாகவும் நாளை அனைவரும் சரியாக செக் வழங்கபட்டு விடும் என்று தெரிவித்தார். அவருக்கு நாம் நன்றி தெரிவித்து கொண்டோம்.

                                                                                                       

                                                                                                           ரவி சீத்தாராமன்


No comments :

Post a Comment