இதை நாம் இங்கு
வெளியிடுவதற்கு காரணம் எப்படிஎல்லாம் நமது செவிலியர்களுக்கு பிரச்னை வருகிறது, நமது செவிலியசகோதரிகள்
இதை வராமல் நாம் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ளவும் இதில்
இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவும் தான்.
ஒரு அரசு
மருத்துவமனையில் ஒரு குழந்தை 25 தேதி காலை பிறந்து இருக்கிறது.
பிரசவத்திற்கு வந்த அந்த
பெண்ணுடன் ஒரு ஒரே ஒரு பாட்டி மட்டுமே வந்துள்ளார். கணவர் விட்டு சென்று
விட்டதாகவும் தந்தையும் தம்பியும் இனிமேல் வருவார்கள் என்றும் தெரிவித்து
உள்ளார்.(கடைசி வரை வரவே இல்லை)
பிறந்த குழந்தை உடல் எடை
குறைவாக இருந்த காரணத்தால உடல் நிலை மோசமா இருந்த காரணத்தால MATERNITY வார்ட்டில் காலை பணியில்
இருந்த செவிலியர் 1 அந்த குழந்தையை ஏகம் பவுண்ட்டேசன் மூலம் பணியில்
அமர்த்தபட்ட செவிலியர்கள் உள்ள NICU வார்டிற்கு அன்றே குழந்தையை ட்ரான்ஸ்பர் செய்து
விட்டனர்.
அடுத்த நாள் 26 ஆம் தேதி நடுஇரவில்
குழந்தை உடல் நிலை மோசமாகி குழந்தை இறந்து விட்டது.
இறந்த குழந்தையின் உடலை 26 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு அந்த குழந்தையை
அந்த குழந்தையின் பாட்டியிடம் NICU வார்டில் இருந்த ஏகம் செவிலியர்கள் கையொப்பம் பெற்று
கொண்டு ஒப்படைத்து உள்ளனர்.
28 ஆம் தேதி காலை 11 மணிக்கு PN வார்டில் இருந்த அந்த பெண்ணும் வார்டில் இருந்து
டிஸ்சார்ஜ் செய்யபட்டு அந்த பாட்டியுடன் கிளம்பி சென்று விட்டார்.
அந்த பாட்டி அந்த இறந்த
குழந்தையின் உடலை புதைக்காமல் அந்த மருத்துவமனை வாளாகத்தில் உள்ள புதருக்குள்
எறிந்து விட்டு அந்த பெண்ணுடன் சென்று விட்டார்.
28 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் அந்த குழந்தையின்
உடல் கண்டுபிடிக்கபட்டு போலீசில் புகார் செய்யபட்டு உள்ளது.
விசாரித்ததில் அவர்கள்
அளித்த விலாசம் போலியானது என்று தெரியவந்தது.
நீதிபதியின் முடிவு(JD)
இதனை பற்றி விசாரித்த
இணைஇயக்குனர் அவர்கள் 26 ஆம் தேதி MATERNITY
வார்டில் இரவு பணியில் இருந்த
செவிலியர் X பணியில் இருந்த செவிலியரையும் SUPERVISE செய்த செவிலியரையும்
பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். காரணம் வந்து பணியில் இருந்த
செவிலியர்கள் ஒழுங்கா FOLLOWUP & MONITOR பண்ணவில்லை என்று காரணம் தெரிவிக்கபட்டுள்ளது.
கேள்வி 1: இறந்த குழந்தையை HANDOVER செய்துதது NICU வார்டில் பணியில் உள்ள
ஏகம் செவிலியர்கள். அதற்கு MATERNITY வார்டில் பணியில் இருந்த செவிலியரை ஏன் பணியிடை
நீக்கம் செய்ய வேண்டும் ?
அதையும் தாண்டி 87 சென்சஸ் உள்ள ஒரு MATERNITY வார்டிற்கு ஒரே செவிலியரை பணியில் இரவில் அமர்த்தலாமா ?
கேள்வி 2: பணியில் உள்ள செவிலியர்
அந்த வார்டில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் இன்சார்ஜ்ஜா இல்லை அந்த மருத்துவமனை
வளாகத்தில் உள்ள புற்றுபுதருக்கும் எல்லாம் இன்சார்ஜ்ஜா ?
கேள்வி 3: கையெழுத்து பெற்று
கொண்டு பாடியை ஒப்படைத்த பிறகு அந்த பாடியை எரிகிரர்களா, இல்லை புதைக்கிறார்களா
என்று உடன் சென்று பணியில் இருக்கும் செவிலியர்கள் பார்க்க வேண்டுமா ? விளக்கம் இருக்கிறதா ?
கேள்வி 4: இறந்த குழந்தையை முறையான
சடங்குகள் செய்யாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதருக்குள் எறிந்து விட்டு
சென்ற அவர்கள் குற்றவாளிகளா இல்லை செவிலியர்கள் குற்றவாளிகளா ?
எதையும் மனசாட்சியோடு
சிந்தித்து நமது மருத்துவதுறை ஊழியர்கள் என்ற கனிவோடு முடிவுகளை எடுக்க வேண்டும்.
யாரோ செய்த தவறுக்கு
எங்களுக்கு தண்டனை கொடுத்தால் நியாமா?
போதுமான அளவில் கண்காணிப்பு பணியில் பணியாளர்களை அமர்த்தாமல் வார்டில் இருக்கும் செவிலியரை குற்றம் சொன்னால் அது எவ்வாறு நியாமாகும் ?
104 செவிலியர்கள் பணி புரியவேண்டிய இடத்தில வெறும் 35 செவிலியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.
ஏன் மருத்துவர் யாரையும்
பணியிடை நீக்கம் செய்யவில்லை ?
மருத்துவரையும் பணியிடை
நீக்கம் செய்யுங்கள் என்பது எங்கள் கோரிக்கை அல்ல ?
உங்களுக்கு வந்தா ரத்தம்
!!!!!!! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!!!!!!!!!!!!!!
Right
ReplyDelete