Tuesday, April 8, 2014

தோற்றுவிக்கபடுமா அல்லது தோற்கடிக்கபடுமா 1600 ஆரம்ப சுகாதார புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் ???????????????????????




கடந்த 07/04/2014 அன்று நமது தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் மற்றும் TNHSP, TNMSC, MMU செவிலியர்கள் ஊதிய உயர்வு  சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.






நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்த 1600 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கும் கோப்பு மிகவும் சிக்கலான நிலையில் தோல்வியின் விளிம்பில் உள்ளது. இருப்பினும் இறுதி கட்ட முயற்சிகள் மேற்கொள்ள பட்டு உள்ளன.

மேலும் செவிலியர்கள் எப்போதும் எந்த சூழலிலும் அரசுக்கோ அதிகாரிகளுக்கோ அவப்பெயர் பெற்று தரும் எந்த வித செயலிலும் எப்போதும் ஈடுபடுபட மாட்டோம் என்றும் அது எங்கள் நோக்கமும் அல்ல என்றும் ஆனால் எங்கள் கோரிக்கைகளை, பிரச்சனைகளை தெரிவிக்க வாய்ப்பு கொடுங்கள், அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தோம்.

நமது சுகாதாரதுறையை சேர்ந்த அனைத்து உயர்அதிகாரிகளும் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும், நமது பணியின் முக்கியதுவத்தையும், நமது சிரமங்களையும் நிதிதுறையிடம் நாம் எடுத்து சொல்வதை விட பலமடங்கு சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தபோதும் கூட கிராமப்புற நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கதிற்கும், புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கதிற்கும் நிதித்துறை அனுமதி அளிக்க யோசிகின்றது என்று சொல்வதை விட மறுத்து வருகிறது என்பதே பொருத்தமான வார்த்தை மட்டுமல்ல அது தான் கசப்பான உண்மையும் கூட.

நிதிதுறை அதிகாரிகளை சந்தித்து அடுத்தகட்டமாக நமது வேதனைகளையும், சோதனைகளையும் , நியாமான கோரிக்கைளை தெரிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.


CEMONC மற்றும் NCD செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை நிதிதுறையின் பரிசிலனையில் உள்ளது. அது சமந்தமான ஆணை வர வாய்ப்பு உள்ளது.

MMU செவிலியர்களுக்கு அரசு ஆணை எண் 312 ஆணை பொருந்தும் என்ற விவரத்தை அனைத்து அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.

மேலும் TNHSP அலுவலகத்தால் அனுப்பபட்ட ஊதிய உயர்வு சுற்றறீகையில் எடுத்துக்காட்டுகாக கட்டப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வுவை பெரும்பாலான அலுவலங்களில் உள்ள அலுவலர்கள் தவறாக புரிந்து கொண்டு ஐந்தாம் ஆண்டுக்கான, ஆறாம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை  தராமல் இழுத்தடிப்பதால் அதற்கான தெளிவான சுற்றறிக்கையை அனுப்புமாறு கேட்டு கொண்டோம்.

மேலும் அறிவிக்கபட்ட 1160 தொகுப்பூதிய செவிலியர்பணி இடங்களை நிரந்தர செவிலியர் பணி இடங்களாக மாற்றி தரவேண்டும் என்ற கேட்டு கொள்ள பட்டது.

மேலும் DME அலுவலகம் சென்று ஊதிய உயர்வு வந்தும் கூட இரண்டு வருடமாக 5500 சம்பளம் வாங்கிகொண்டு செவிலியர்கள் DME கட்டுபாட்டில் பணி புரிந்து வருகின்றனர். மேலும் அடுத்த அரசு ஆணை 312  வந்ததை தெரிவித்து விரைவில் இந்த பழைய ஆணை 342 படி  அரியர்ஸ் வழங்கவும் புதிய ஆணை படி ஊதிய நிர்ணயம் செய்யவும் கேட்டு கொண்டோம்.

மேலும் மரியாதையைகுரிய DME அவர்களை சந்தித்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியபற்றாகுறை பற்றியும், மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தம் பெறாமல் இருக்க மருத்துவகல்லுரி நிர்வாகம் எவ்வாறு காரணமாக உள்ளது போன்ற சில முக்கியமான விவரங்களை அவர்களிடம் தெரிவித்தோம். நமது கோரிக்கைகளை கேட்ட DME மேடம் அவர்களும் அது சமந்தமான குறைகளை களைய தனது துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.



ஆனால் உண்மை என்னவெனில் தோரயமாக சொல்வதானால் 100 நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தேவை என்று நமது சுகாதார துறையால் ஒரு கோப்பு நிதிதுறைக்கு அனுப்பபட்டால் வெறும் 5 இடங்களுக்கோ 8 இடங்களுக்கோ தான் அனுமதி அளிக்கபடுகிறது. 

சுகாதார துறை அதிகாரிகளை குற்றம் சொல்வதற்கான எந்த முகாந்திரமும் இங்கு இல்லை, ஏனெனில் நமது நலனில் அக்கைறை உள்ள அதிகாரிகளே நமது துறை சமந்தமான அனைத்து உயர்பதிவிகளிலும் தற்பொழுது உள்ளனர்.

இதுவரை மிக நேர்மையான வழியில் அமைதியான முறையில் இரண்டு வருடமாக அலைந்து அலைந்து ஒரு குறிப்பிடதக்க வெற்றியை நாம் பெற வில்லை, ஆனால் அலைந்ததின் பயனாக அதற்கான முயற்சிகள்  சுகாதார துறையால் மேற்கொள்ளபட்டு உள்ளன.

செவிலிய சகோதரசகோதரிகள் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள் நாம் சேகரித்த அனைத்து தகவல்களையும் பேசிய அனைத்து வார்த்தைகளையும் அனைவரும் பார்க்ககூடிய சமூக தளம் என்பதால் இங்கு வெளியிட இயலாது. ஒரு சில குறிப்புகளை மட்டுமே வெளியிட இயலும்.

எடுத்த முயற்சியில் வெற்றி பெற தொகுப்பூதிய செவிலியியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற, அடுத்த கட்ட வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்கான வழிமுறைகள் பெறபட்டு உள்ளது. சில நேரங்களில் சத்திரிய வழிகளையும் சில நேரங்களில் சாதுரன்யமான சாணக்கிய வழிகளையும் வெற்றி பெற கையாளவேண்டிய தேவை உள்ளது. பெற்றோர்கள் சேமித்து வைத்தால் பிள்ளைகள் சிரமபட தேவை இல்லை, நாம் துறையின் பெற்றோர் பொறுப்பில் இருப்வர்கள் நமக்காக சேமிக்க தவறியதால் மிகவும் சிரமபட வேண்டியுள்ளது.

ஒற்றுமையாக அமைதியாக போராடியதால் வெள்ளையனே இந்தியாவிற்கு சுகந்திரம் கொடுத்து விட்டு சென்று விட்டான், பணி நிரந்தரம் கொடுக்க மாட்டார்களா என்ன ?


ஆனால் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு எடுத்துகாட்டு செவிலிய சமுகம் என்ற நிலை வரவேண்டும். அனைத்து சகோதரசகோதரிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் சாத்தியம். அதை மட்டுமே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

நன்றி.




1 comment :