Friday, April 25, 2014

உலக தொழிலாளர் தினம்




உலக தொழிலாளர் தினம்

விடுப்பு அற்ற தொடர்பணி

முறைஅற்ற பணி நேரம்

மூன்று மாதம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊதியம்

ஒரு தொழிலாளிக்கான சட்டவிதிமுறைகள் சரியாக அமலில் இல்லாதது

தொகுப்பூதியம் மதிப்புதியம் என்ற பெயரில் தொழிலாளர் உழைப்பு சுரண்டல்

உலகம் முழுவதும் மேற்கண்ட அனைத்தும் எப்போது ஒழிந்து முறையான ஊதியம், சரியானபணி நேரம், சமவேலைக்கு சமஊதியம் அளித்து நிரந்தர தொழிலாளி, காண்ட்ராக்ட் என்ற வேறுபாடு நீங்கி அனைவரும் சமஉரிமை பெரும் நாளே உண்மையான தொழிலாளர் தினம்.

அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் மே தின தொழிலாளர் தின கனத்தமனதுடன் சிரித்த முகமுடன் தெரிவித்து கொள்கிறேன்.

Wednesday, April 23, 2014

புதிய சுற்றறிக்கை- ஊதிய குழப்பத்திற்கு தீர்வு - RCH/MMU 5, மற்றும் 6 வருடங்களுக்கும் ஊதிய உயர்வு பொருந்தும்.


நாம் ஏற்கனவே நமது இணையத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் RCH செவிலியர்களுக்கு அரசு ஆணை 312 படி சரியான ஊதியம் வழங்காமல் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கிஉள்ளனர். மேலும் MMU செவிலியர்களுக்கு இந்த ஊதியஉயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கின்றனர். எனவே இந்த குழப்பத்தை தீர்த்து செவிலியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க ஆவனசெய்ய வேண்டும் என NRHM அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தோம். அவர்களும் விரைவில் சுற்றறிக்கை அனுப்புவதாக தெரிவித்தனர். அது தொடர்பான தகவல் நமது இணையத்தின் வலதுபுறம் ஏற்கனவே உள்ளது.

அதன் படி NRHM ADDITIONAL DIRECTOR அவர்களால் கீழ்க்கண்ட அனைத்து இயக்குனர் அலுவலகங்களுக்கும் தெளிவான விளக்கம் அதாவது 5, மற்றும் 6 ஆண்டுகளில்  RCH இல் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அந்த அந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு உண்டு மேலும் MMU செவிலியர்களுக்கும் இந்த ஆணை பொருந்தும் என்று அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைக்கபட்டு உள்ளது.

இந்த ஊதிய உயர்வு பிரச்சனையை நாம் தெரிவித்த உடன் கனிவுடன் பரிசிலித்து உடனே முயற்சி மேற்கொண்டு அதற்கு தீர்வு கண்டு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உதவி செய்த NRHM ADDITIONAL DIRECTOR சித்ரா மேடம் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றி.

அன்புடன் ரவி சீத்தாராமன்



Dear all,

As per the G.O.(Ms).No.312 , EAP -II(2) dated 26.12.2013,(copy attached to the email),  the entry level contractual salary of all the staff nurses have been enhanced to Rs.7700 per month with an annual increase of Rs.500 per month till they are regularised (in the case of staff nurses placed through DMS) or till they move out for better opportunities (in the case of staff nurses placed through outsourcing).

This G.O is applicable to all the contractual staff nurses (including MMU staff nurses) placed under NRHM.
Also it has been learnt from some districts that the annual increase has been provided only till 4 years after placement.  The annual increase shall be provided till they are regularised i.e for staff nurses in 5th year, 6th year etc also.


With regards,
Dr.N.Chitra,
Additional Director,
State Health Society.





From: additional nrhm


Subject: Salary of contractual staff nurses

To: ddh.tnari@nic.in, dphngp@tn.nic.in, ",DDHS-COIMBATORE" , dphvpm@tn.nic.in, ",DDHS-ERODE" , dphpkd@tn.nic.in, dphvnr@tn.nic.in, dphmdu@tn.nic.in, ",DDHS-TRICHY" , dphcud@tn.nic.in, dphkpt@tn.nic.in, dphcyr@tn.nic.in, dphsvg@nic.in, dphtnj@tn.nic.in, dphnmk@tn.nic.in, dphsad@tn.nic.in, dphpme@tn.nic.in, dphtut@tn.nic.in, dphkar@tn.nic.in, dphatg@tn.nic.in,dphrmd@tn.nic.in, dphkpm@tn.nic.in, ",DDHS-PALANI" , dphskk@tn.nic.in, dphtvm@tn.nic.in, dphthn@tn.nic.in, ",DDHS-SALEM" , dphtvr@tn.nic.in, dphtpr@tn.nic.in, dphski@tn.nic.in,dphpmb@tn.nic.in, dphkkm@tn.nic.in, ",DDHS-KRISHNAGIRI" , dphdgl@tn.nic.in, dphtlr@tn.nic.in, dphtpt@tn.nic.in, dphpdk@tn.nic.in, dphtnv@tn.nic.in, dphdpm@tn.nic.in, dphvel@tn.nic.in, ",DDHS-KALLAKURICHI" , dphnlg@tn.nic.in, ",DDHS-DHARMAPURI" , Sivaksi UPHC , ddh.tn.ari@nic.in
Cc: apmdhscbe@gmail.com, apmdhscud@gmail.com, apmdhsdpi@gmail.com, apmdhsdgl@gmail.com, apmdhserd@gmail.com, apmdhskpm@gmail.com, apmdhskar@gmail.com, apmdhskgi@gmail.com, apmdhsmdu@gmail.com,apmdhsngp@gmail.com, apmdhskkm@gmail.com, apmdhsnmk@gmail.com, apmdhspmb@gmail.com, apmdhspdk@gmail.com, apmdhsrmd@gmail.com, arun moorthy , apmdhssvg@gmail.com,apmdhstnj@gmail.com, Assistant Programme Manager Theni , apmdhstnv@gmail.com, apmdhstpr@gmail.com, apmdhstlr@gmail.com, apmdhstvm@gmail.com, apmdhstvr@gmail.com, apmdhstry@gmail.com,apmdhstut@gmail.com, apmdhsnlg@gmail.com, apmdhsvel@gmail.com, apmdhsvpm@gmail.com, apmdhsvnr@gmail.com





Tuesday, April 8, 2014

தோற்றுவிக்கபடுமா அல்லது தோற்கடிக்கபடுமா 1600 ஆரம்ப சுகாதார புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் ???????????????????????




கடந்த 07/04/2014 அன்று நமது தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் மற்றும் TNHSP, TNMSC, MMU செவிலியர்கள் ஊதிய உயர்வு  சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.






நாம் ஏற்கனவே தெரிவித்து இருந்த 1600 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கும் கோப்பு மிகவும் சிக்கலான நிலையில் தோல்வியின் விளிம்பில் உள்ளது. இருப்பினும் இறுதி கட்ட முயற்சிகள் மேற்கொள்ள பட்டு உள்ளன.

மேலும் செவிலியர்கள் எப்போதும் எந்த சூழலிலும் அரசுக்கோ அதிகாரிகளுக்கோ அவப்பெயர் பெற்று தரும் எந்த வித செயலிலும் எப்போதும் ஈடுபடுபட மாட்டோம் என்றும் அது எங்கள் நோக்கமும் அல்ல என்றும் ஆனால் எங்கள் கோரிக்கைகளை, பிரச்சனைகளை தெரிவிக்க வாய்ப்பு கொடுங்கள், அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தோம்.

நமது சுகாதாரதுறையை சேர்ந்த அனைத்து உயர்அதிகாரிகளும் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும், நமது பணியின் முக்கியதுவத்தையும், நமது சிரமங்களையும் நிதிதுறையிடம் நாம் எடுத்து சொல்வதை விட பலமடங்கு சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தபோதும் கூட கிராமப்புற நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கதிற்கும், புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கதிற்கும் நிதித்துறை அனுமதி அளிக்க யோசிகின்றது என்று சொல்வதை விட மறுத்து வருகிறது என்பதே பொருத்தமான வார்த்தை மட்டுமல்ல அது தான் கசப்பான உண்மையும் கூட.

நிதிதுறை அதிகாரிகளை சந்தித்து அடுத்தகட்டமாக நமது வேதனைகளையும், சோதனைகளையும் , நியாமான கோரிக்கைளை தெரிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.


CEMONC மற்றும் NCD செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை நிதிதுறையின் பரிசிலனையில் உள்ளது. அது சமந்தமான ஆணை வர வாய்ப்பு உள்ளது.

MMU செவிலியர்களுக்கு அரசு ஆணை எண் 312 ஆணை பொருந்தும் என்ற விவரத்தை அனைத்து அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.

மேலும் TNHSP அலுவலகத்தால் அனுப்பபட்ட ஊதிய உயர்வு சுற்றறீகையில் எடுத்துக்காட்டுகாக கட்டப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வுவை பெரும்பாலான அலுவலங்களில் உள்ள அலுவலர்கள் தவறாக புரிந்து கொண்டு ஐந்தாம் ஆண்டுக்கான, ஆறாம் ஆண்டுக்கான ஊதிய உயர்வை  தராமல் இழுத்தடிப்பதால் அதற்கான தெளிவான சுற்றறிக்கையை அனுப்புமாறு கேட்டு கொண்டோம்.

மேலும் அறிவிக்கபட்ட 1160 தொகுப்பூதிய செவிலியர்பணி இடங்களை நிரந்தர செவிலியர் பணி இடங்களாக மாற்றி தரவேண்டும் என்ற கேட்டு கொள்ள பட்டது.

மேலும் DME அலுவலகம் சென்று ஊதிய உயர்வு வந்தும் கூட இரண்டு வருடமாக 5500 சம்பளம் வாங்கிகொண்டு செவிலியர்கள் DME கட்டுபாட்டில் பணி புரிந்து வருகின்றனர். மேலும் அடுத்த அரசு ஆணை 312  வந்ததை தெரிவித்து விரைவில் இந்த பழைய ஆணை 342 படி  அரியர்ஸ் வழங்கவும் புதிய ஆணை படி ஊதிய நிர்ணயம் செய்யவும் கேட்டு கொண்டோம்.

மேலும் மரியாதையைகுரிய DME அவர்களை சந்தித்து மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியபற்றாகுறை பற்றியும், மேலும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தம் பெறாமல் இருக்க மருத்துவகல்லுரி நிர்வாகம் எவ்வாறு காரணமாக உள்ளது போன்ற சில முக்கியமான விவரங்களை அவர்களிடம் தெரிவித்தோம். நமது கோரிக்கைகளை கேட்ட DME மேடம் அவர்களும் அது சமந்தமான குறைகளை களைய தனது துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.



ஆனால் உண்மை என்னவெனில் தோரயமாக சொல்வதானால் 100 நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தேவை என்று நமது சுகாதார துறையால் ஒரு கோப்பு நிதிதுறைக்கு அனுப்பபட்டால் வெறும் 5 இடங்களுக்கோ 8 இடங்களுக்கோ தான் அனுமதி அளிக்கபடுகிறது. 

சுகாதார துறை அதிகாரிகளை குற்றம் சொல்வதற்கான எந்த முகாந்திரமும் இங்கு இல்லை, ஏனெனில் நமது நலனில் அக்கைறை உள்ள அதிகாரிகளே நமது துறை சமந்தமான அனைத்து உயர்பதிவிகளிலும் தற்பொழுது உள்ளனர்.

இதுவரை மிக நேர்மையான வழியில் அமைதியான முறையில் இரண்டு வருடமாக அலைந்து அலைந்து ஒரு குறிப்பிடதக்க வெற்றியை நாம் பெற வில்லை, ஆனால் அலைந்ததின் பயனாக அதற்கான முயற்சிகள்  சுகாதார துறையால் மேற்கொள்ளபட்டு உள்ளன.

செவிலிய சகோதரசகோதரிகள் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள் நாம் சேகரித்த அனைத்து தகவல்களையும் பேசிய அனைத்து வார்த்தைகளையும் அனைவரும் பார்க்ககூடிய சமூக தளம் என்பதால் இங்கு வெளியிட இயலாது. ஒரு சில குறிப்புகளை மட்டுமே வெளியிட இயலும்.

எடுத்த முயற்சியில் வெற்றி பெற தொகுப்பூதிய செவிலியியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற, அடுத்த கட்ட வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்கான வழிமுறைகள் பெறபட்டு உள்ளது. சில நேரங்களில் சத்திரிய வழிகளையும் சில நேரங்களில் சாதுரன்யமான சாணக்கிய வழிகளையும் வெற்றி பெற கையாளவேண்டிய தேவை உள்ளது. பெற்றோர்கள் சேமித்து வைத்தால் பிள்ளைகள் சிரமபட தேவை இல்லை, நாம் துறையின் பெற்றோர் பொறுப்பில் இருப்வர்கள் நமக்காக சேமிக்க தவறியதால் மிகவும் சிரமபட வேண்டியுள்ளது.

ஒற்றுமையாக அமைதியாக போராடியதால் வெள்ளையனே இந்தியாவிற்கு சுகந்திரம் கொடுத்து விட்டு சென்று விட்டான், பணி நிரந்தரம் கொடுக்க மாட்டார்களா என்ன ?


ஆனால் ஒற்றுமை என்ற வார்த்தைக்கு எடுத்துகாட்டு செவிலிய சமுகம் என்ற நிலை வரவேண்டும். அனைத்து சகோதரசகோதரிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் சாத்தியம். அதை மட்டுமே உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

நன்றி.




Friday, April 4, 2014

ஐயா............................. சாமி பார்த்து எதாவது தர்மம் பண்ணுங்க-இப்படிக்கு தங்கள் கீழ்படிந்த உண்மையுள்ள அடிமை தொகுப்பூதிய செவிலியர்கள்

10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும்.





தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அரசுத் துறைகளில் கடைநிலை ஊழியர் முதல் உயரதிகாரி வரையில் உள்ளவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் ரூ.6 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், இந்த உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 16 லட்சம் பேர் பயன் அடைவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பெற்று இப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
முன்தேதியிட்டு கிடைக்கும்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு அதாவது ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என தனது உத்தரவில் சண்முகம் கூறியுள்ளார்.
ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுத் தொகை ரொக்கப் பணமாக உடனடியாக வழங்கப்படும். அரசுத் துறைகளில் முழு நேரமாகப் பணியாற்றி, அகவிலைப்படி உயர்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
யார் யாருக்கு பொருந்தும்? உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது, ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், வருவாய்த் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல
அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை எழுத்தர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சதம் அடித்த அகவிலைப்படி

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியானது 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி சதம் அடித்துள்ள நிலையில், இதற்கடுத்து எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது:
அகவிலைப்படி உயர்வானது நூறு சதவீதத்தை எட்டும்போது, அதில் 50 சதவீத அகவிலைப்படியானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படுவது வழக்கம். அவ்வாறு சேர்க்கப்பட்ட பிறகு அகவிலைப்படியானது 50 சதவீதமாகக் குறையும். இதன்பின்னர், அந்த 50 சதவீதத்தில் இருந்து சிறிது சிறிதாக அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இப்போது அகவிலைப்படி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்ப்பதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் எதையும் வழங்கவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு இதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் முடிவை ஒட்டியே, தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, April 2, 2014

நமது இணையதளத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இதை டவுன்லோட் செய்து தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

மரியாதையைகுரிய DMS ஐயா அவர்களுக்கு நன்றி









பணியிடை நீக்கம் செய்யபட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஆணையிட்ட நமது மரியாதைக்குரிய DMS சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

Tuesday, April 1, 2014

செய்யாத தவறுக்கு தண்டனை பெற்ற நமது சகோதரிகள்







இதை நாம் இங்கு வெளியிடுவதற்கு காரணம் எப்படிஎல்லாம் நமது செவிலியர்களுக்கு பிரச்னை வருகிறது, நமது செவிலியசகோதரிகள் இதை வராமல் நாம் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ளவும் இதில் இருந்து நாம் பாடம் கற்று கொள்ளவும் தான்.

ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை 25 தேதி காலை பிறந்து இருக்கிறது.

பிரசவத்திற்கு வந்த அந்த பெண்ணுடன் ஒரு ஒரே ஒரு பாட்டி மட்டுமே வந்துள்ளார். கணவர் விட்டு சென்று விட்டதாகவும் தந்தையும் தம்பியும் இனிமேல் வருவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.(கடைசி வரை வரவே இல்லை)

பிறந்த குழந்தை உடல் எடை குறைவாக இருந்த காரணத்தால உடல் நிலை மோசமா இருந்த காரணத்தால MATERNITY வார்ட்டில் காலை பணியில் இருந்த செவிலியர் 1 அந்த குழந்தையை ஏகம் பவுண்ட்டேசன் மூலம் பணியில் அமர்த்தபட்ட செவிலியர்கள் உள்ள NICU வார்டிற்கு அன்றே குழந்தையை ட்ரான்ஸ்பர் செய்து விட்டனர்.

அடுத்த நாள் 26 ஆம் தேதி நடுஇரவில் குழந்தை உடல் நிலை மோசமாகி குழந்தை இறந்து விட்டது.

இறந்த குழந்தையின் உடலை 26 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு அந்த குழந்தையை அந்த குழந்தையின் பாட்டியிடம் NICU வார்டில் இருந்த ஏகம் செவிலியர்கள் கையொப்பம் பெற்று கொண்டு ஒப்படைத்து உள்ளனர்.

28 ஆம் தேதி காலை 11 மணிக்கு PN வார்டில் இருந்த அந்த பெண்ணும் வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டு அந்த பாட்டியுடன் கிளம்பி சென்று விட்டார்.

அந்த பாட்டி அந்த இறந்த குழந்தையின் உடலை புதைக்காமல் அந்த மருத்துவமனை வாளாகத்தில் உள்ள புதருக்குள் எறிந்து விட்டு அந்த பெண்ணுடன் சென்று விட்டார்.

28 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் அந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கபட்டு போலீசில் புகார் செய்யபட்டு உள்ளது.

விசாரித்ததில் அவர்கள் அளித்த விலாசம் போலியானது என்று தெரியவந்தது.

நீதிபதியின் முடிவு(JD)

இதனை பற்றி விசாரித்த இணைஇயக்குனர் அவர்கள் 26 ஆம் தேதி MATERNITY வார்டில் இரவு பணியில் இருந்த செவிலியர் X பணியில் இருந்த செவிலியரையும் SUPERVISE செய்த செவிலியரையும் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். காரணம் வந்து பணியில் இருந்த செவிலியர்கள் ஒழுங்கா FOLLOWUP & MONITOR பண்ணவில்லை என்று காரணம் தெரிவிக்கபட்டுள்ளது.


கேள்வி 1: இறந்த குழந்தையை HANDOVER செய்துதது NICU வார்டில் பணியில் உள்ள ஏகம் செவிலியர்கள். அதற்கு MATERNITY வார்டில் பணியில் இருந்த செவிலியரை ஏன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் ?

அதையும் தாண்டி 87 சென்சஸ் உள்ள ஒரு MATERNITY வார்டிற்கு ஒரே செவிலியரை பணியில் இரவில் அமர்த்தலாமா ?  

கேள்வி 2: பணியில் உள்ள செவிலியர் அந்த வார்டில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் இன்சார்ஜ்ஜா இல்லை அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்றுபுதருக்கும் எல்லாம் இன்சார்ஜ்ஜா ?

கேள்வி 3: கையெழுத்து பெற்று கொண்டு பாடியை ஒப்படைத்த பிறகு அந்த பாடியை எரிகிரர்களா, இல்லை புதைக்கிறார்களா என்று உடன் சென்று பணியில் இருக்கும் செவிலியர்கள் பார்க்க வேண்டுமா ? விளக்கம் இருக்கிறதா ?

கேள்வி 4: இறந்த குழந்தையை முறையான சடங்குகள் செய்யாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதருக்குள் எறிந்து விட்டு சென்ற அவர்கள் குற்றவாளிகளா இல்லை செவிலியர்கள் குற்றவாளிகளா ?


எதையும் மனசாட்சியோடு சிந்தித்து நமது மருத்துவதுறை ஊழியர்கள் என்ற கனிவோடு முடிவுகளை எடுக்க வேண்டும்.

யாரோ செய்த தவறுக்கு எங்களுக்கு தண்டனை கொடுத்தால் நியாமா?

போதுமான அளவில் கண்காணிப்பு பணியில் பணியாளர்களை அமர்த்தாமல் வார்டில் இருக்கும் செவிலியரை குற்றம் சொன்னால் அது எவ்வாறு நியாமாகும் ?

104 செவிலியர்கள் பணி புரியவேண்டிய இடத்தில வெறும் 35 செவிலியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.

ஏன் மருத்துவர் யாரையும் பணியிடை நீக்கம் செய்யவில்லை ?

மருத்துவரையும் பணியிடை நீக்கம் செய்யுங்கள் என்பது எங்கள் கோரிக்கை அல்ல ?


உங்களுக்கு வந்தா ரத்தம் !!!!!!! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!!!!!!!!!!!!!!