Thursday, March 6, 2014

ஜாதி வெறி - காதல்






ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த நமது செவிலிய சகோதரன் சங்கர் கணேஷ் இன்று இந்த உலகில் உயிரோடு இல்லை. கொலை செய்யபட்டு விட்டார்.

காரணம், ஜாதி வெறி - காதல்


2010 ஆம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செவிலிய பயிற்சி முடித்து நமது செவிலிய சகோதரியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இன்று நமது சகோதரன் உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கபட்டு உள்ளது.

தீவிரவாதிகளுக்கு கூட ஆயுள் தண்டனை கொடுத்து நன்னடத்தை காரணமாக அவர்கள் வெளியே அனுப்பும் பரிவுமிக்க சட்டம் உள்ள நமது நாட்டில் காதல் செய்து திருமணம் செய்து கொண்ட ஒரு காரணத்திற்காக கொலையே செய்யவும் மிருகங்கள் இந்த உலகில் இன்னும் உலாவி கொண்டுதான் இருக்கின்றன.

மிகுந்த மனவருத்தமாக உள்ளது.

இனிமேல் அந்த சகோதரனின் குடும்பம்பத்தின் கதி ?
 

ஜாதி-மதம் இந்த இரண்டிம் இந்த உலகை விட்டு மறைந்தால் தான் அனைவரும் நிம்மதியாக இருக்க முடியும்.
 
 

No comments :

Post a Comment