Monday, March 24, 2014

கூட ரெண்டு கட்டம் கட்டல அதனால உனக்கு சம்பளம் கட்டுல



Existing rates
Enhanced rates

Contractual Salary
NRHM  Rural allowance
Contractual Salary
NRHM  Rural allowance
Entry level salary   or first year
7000
500
7700
500
2nd  year
7500
500
8200
550
3rd  year
8000
500
8700
600
4th  year
8000
500
9200
650

கடைசியாக வந்த அரசு ஆணை 312 படி RCH பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அடிப்படை சம்பளம் 7770 எனவும் அதன் பின் வருடாவருடம் பணி நிரந்தரம் பெரும் வரை ரூபாய் 500 ஏற்றி ஊதிய உயர்வு அளிக்கபடும் என்று தெரிவிக்க பட்டுஉள்ளது.


அதன் பின்னர் MISSION DIRECTOR அவர்களால் அனுப்பபட்ட கீழ் கண்ட தபாலில் எடுத்துகாட்டு தெரிவிப்பதற்காக கட்டபட்ட கட்டத்தில் 5th  year, 6th  year சம்பள கட்டம்  போடபடவில்லை உடனே  பல்வேறு இடங்களில் நீங்கள் எத்தனையாவது வருடம் வேலை பார்த்தாலும் உங்களுக்கு அதிகபட்சம் 9200 என்று கூறி கீழ்க்கண்ட இந்த முக்கியமான வரியை கண்டுகொள்ளாமல் (contractual pay of Rs.7700 per month from the existing pay of Rs.7000 per month with an annual increase of Rs.500 per month every year till they are regularized) 2008 பணியில் இணைந்த சகோதரிக்கும் 9200 மட்டும் அளிகின்றனராம் .



இது முற்றிலும் தவறான வாதம், மேலும் 5 YEAR பார்த்தல் 9700 ரூபாயும், 6 TH YEAR வேலை பார்த்தால் 10200 ரூபாயும் சம்பளம் கண்டிப்பான முறையில் அரசு ஆணை எண் தரபடவேண்டும்.

மேலும் ரெகுலர் ஆன சகோதரிகளும் தயவு செய்து 2013 ஏப்ரல் முதல் விண்ணப்பித்து அரியர் தொகையை பெற்று கொள்ளவும். அதற்கான தொகை அரசால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு தாங்கள் எங்கேனும் ஏமாற்றபட்டாள் தங்களுடைய செக்கை கீழ்க்கண்ட அரசின் ஆணைகளை பிரிண்ட் செய்து தங்கள் DD அவர்களிடம் எழுத்துபூர்வமாக முறையிடவும்.

ஒரு வேளை அங்கும் பிரச்னை தீரவில்லை எனில் தங்களுடைய செக்கை ஸ்கேன் செய்து கீழ்க்கண்ட EMAIL முகவரிக்கு அனுப்பி விடவும்.

tnnurses@gmail.com

     
மேலும் ஒவ்வொரு HUD க்கும் இத்தனை செவிலியர்களுக்கு இவ்வளவு தொகை என்று விடுவிக்கபட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை அரியர் தொகையும், பிப்ரவரி  முதல் மார்ச் வரை உயர்த்தபட்ட ஊதியமும் அதில் அடங்கும். அந்த ஆணையும் இங்கு இணைக்கபட்டு உள்ளது.அந்த HUD யில் பணிபுரியும் அனைத்து RCH செவிலியர்களின் பணியில் இணைந்த ஆண்டு தெரிந்தால் DD அவர்களிடம் முதல் கட்டமாக முறையிடுவதற்கு ஏதுவாக இருக்கும்.











கீழே உள்ள PROCEEDINGS யை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.



உயர்த்தபட்ட அரசு ஆணையை 312 யை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்.












































No comments :

Post a Comment