Monday, February 3, 2014

மாண்புமிகு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் M.L.A கோரிக்கை-அனைத்து அரசு பயிற்சி செவிலியர்களுக்கும் உதவி தொகை வழங்கபடும். மாண்புமிகு தமிழக முதல்வர் சட்டபேரவையில் அறிவிப்பு.














நன்றி நன்றி நன்றி

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பட்டயப் படிப்புபடிக்கும் மாணவிகள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்தார்.

அரசு செவிலியர் பள்ளிகளில் பட்டயப் படிப்பு படிக்கும் ஆயிரத்து 400 பேரில் 600 மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.குணசேகரன் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்று, பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசும் போது அதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அந்த அறிவிப்பின் விவரம்:

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவியர் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மாணவியர்களின் சேர்க்கை உயர்த்தப்பட்டதற்கு ஏற்ப கல்வி உதவித்தொகை வழங்கும் மாணவியரின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. தற்போது 23 அரசு செவிலியர் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 2000 மாணவியர் சேர்க்கப்பட்டு பட்டயப்படிப்பு பயின்று வருகின்றனர். வரும் கல்வியாண்டு முதல் அரசு செவிலியர் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 3.42 கோடி செலவு ஏற்படும்.

விளக்கம்: சில நபர்கள் நாங்கள் கட்சி சார்ந்து இயங்குவதாக இதற்கு முன்னர் தெரிவித்து வந்தனர். நாங்கள் அப்போதே தெரிவித்தோம் எங்களுக்கும் கட்சிக்கும் துளிகூட சம்மந்தம் கிடையாது. எங்களது நிலையை உணர்ந்து எங்களுக்கு உதவி செய்பவர்களை நாங்கள் எப்படி உதாசினபடுத்த முடியும். இதோ மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் செவிலியமாணவிகளுக்காக கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் நிறைவேற்ற பட்டு உள்ளது. அரசின் கவனத்துக்கு நியாமான கோரிக்கைகளை கொண்டு செல்ல சில நல்ல உள்ளம் கொண்டவர்களின் உதவி தேவைபடுகிறது.

சிலரோடு ஒப்பிடுகையில் செவிலியர்கள் நலனுக்காக போராட்டம் செய்ய, நமது இனமே பேரணி போக, காசு குடுத்தாதான் கடையை திரப்பேன் என்பவனை விட இவர்கள் எவ்வளோவோ மேல். எந்த பிரதிபலனும் எதிர்பக்காமல் தொடர்ந்து உதவுகின்றனர்.