Saturday, February 8, 2014

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு




NRHM SCHEME இன் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கபட்டு G.O 342  வெளியிடபட்டு உள்ளது.

இந்த முடிவு கடந்த வருடம் 08/10/2013 அன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டு கடந்த 26/12/2013 அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது.

அதன்படி ENTRY LEVEL செவிலியர்களுகு முதல் வருடம் 7700 என ஊதியம் நிர்ணயிக்க பட்டு உள்ளது.

வருடம் வருடம் 500 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கபடும்..


இதை தவிர்த்து RURAL ALLOWANCE 500 ரூபாய் வழக்கம் போல் வழங்க படும். வருடாவருடா வருடம் 50  ரூபாய் சேர்த்து வழங்க படும்.

இந்த ஊதிய உயர்வு 01/04/2013 அன்று முதல் கணக்கிடபட்டு அரியர்ஸ் வழங்கபடும்.

முதல் வருடம்      7700 ரூபாய்

இரண்டாம் வருடம்  8200 ரூபாய்

மூன்றாம் வருடம்   8700 ரூபாய்

நான்காம் வருடம்    -9200 ரூபாய்

ஐந்தாம் வருடம்     -9700 ரூபாய்










அரசு ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்

அரசு தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் இதுவரை அதிகபட்சம் 8000 தொகுப்பூதியம் பெறுகிறோம்.


இதன்படி உதாரணமாக ஒரு தொகுப்பூதிய செவிலியர் 01/04/2013 அன்றுபடி மூன்றாம் வருடம் நடக்கிறது என்றால் அவர் அப்பொழுது வாங்க வேண்டிய சம்பளம் 8700 என்றால் வாங்கி கொண்டிருப்பது 8000 என்றால் மீதி 700 ரூபாய் அரியர்ஸ்சாக வழங்கபடும்.

தற்பொழுது NRHM கீழ் பணி புரியும் செவிலியர்களுக்கு மட்டும் அரசானை வழங்கபட்டு உள்ளது. விரைவில் TNHSP யில் பணி புரிவோருக்கும் வழங்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தகவலை நாம் விரைவாக பெற உதவிய மானமதுரை செவிலியர் ரமேஸ் அவர்களுக்கு நன்றி.