Thursday, February 20, 2014

உங்க போதைக்கு நாங்க ஊறுகா

பத்திரிகை செய்தி: 

திருவண்ணாமலை, பிப்.20
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகேவுள்ள ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டாய தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சென்னையைச சேர்ந்த பிரேமலதா.

இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் டாக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் இவர் மட்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்து உள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(17), சிவா(23) இரண்டு பேரும் குடிபோதையில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்ட நிலையில் அங்கு வந்துள்ளனர்.

குடிபோதையில் வந்த இருவரும் பணியிலிருந்த செவிலியர் பிரேமலதாவிடம் உடனடியாக மருத்துவம் பார்க்குமாறு கூறியுள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மாத்திரையை வழங்கி விட்டு ஊசியின் மூலம் மருந்தை செலுத்தி உள்ளார். இதில், விக்னேஷ்க்கு வலி ஏற்பட்டதால், செவிலியர் பிரேமாவிடம், விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பிரேமலதாவுக்கும் போதை ஆசாமிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் ஆத்திரமடைந்த குடிமகன்கள் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை எடுத்து செவிலியர்பிரேமலதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கை மற்றும் கழுத்து பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு சக செவிலியர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதைக் கண்ட போதை ஆசாமிகள் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
 

ஆபத்தான நிலையில் இருந்த செவிலியர் பிரேம லதாவை திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தானிப்பாடி போலிசார் தப்பியோடிய
 
இருவரில் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது கொலைமிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள சிவாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போதை ஆசாமிகளால் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செவிலியர் பிரேமலதாவை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

2 பேர் கைது: இந்நிலையில், செவிலியரை கத்தியால் குத்தியதாக விக்னேஷ், சிவா ஆகியோரை தானிப்பாடி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்விகள்:

தவறு செய்ய நபர்களுக்கு அதிக பட்சம் என்ன தண்டனை வழங்கபடும் ?????????????

முதலில் தண்டனை வழங்கபடுமா இல்லை வழக்கம் போல ????????????

அரசால் அனைவர்க்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது உண்மைதான் என்ற போதிலும் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மேல் எடுக்க படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டாமா ???????????????

இது போன்ற செயல்கள் அங்குகொன்றும் இங்கொன்றும் நடந்ததாலும் கூட இது போன்று குடிபோதையில் வரும் நபர்கள் செவிலியர் ஒரு பெண்தானே என்ற ஏளனம், இவளால் நம்மை என்ன செய்ய முடியும் என்ற ஏளனம்,
 

உண்மைதான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, அது தானே உண்மை,
 

இரவில் யாருடைய துணையும் இல்லாமல் கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, அம்மா அப்பா அனைவரும் பல நூறு மைல்களுக்கு அப்பால், என்ன செய்ய முடியும் என்னால் ?

அவர்கள் தவறாக நடந்தால் கூட என்ன செய்ய முடியும் என்னால்??????? காரணம்

தொடர்ந்து பல வருடம் அதே இடத்தில தொகுபூதியத்தில் பணி புரிய வேண்டும்,
 

அவர்கள் எழுதும் பொய் பெட்டிசன்களுக்கு DD முன்னர் கைகட்டி பதில் சொல்ல வேண்டும்,

தொகுபூதியத்தில் இருக்கிறாய் ஒழுங்கா இரு இல்லை என்றால் சஸ்பேன்ட் செய்து விடுவேன் என்று உயர் பதவியில் உள்ளோர் கூறுவதை அமைதியாக கேட்க நேரிடும்

பணிஸ்மென்ட் டுட்டி பார்க்க நேரிடும்

நாங்கள் மிகுந்த மரியாதையை வைத்திருக்கும் பெரியவர்களுக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான்
 

இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடும் நபர்கள் மீது எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு தெரிந்து அவர்களை விட்டால் பெண்களாகிய எங்களுக்கு யார் உள்ளார்கள் ?
 

இது போன்ற விசயங்களை அப்படியே பூசிமுழுகி விடாமல் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 

உயிரை காக்கும் துறைக்கே கத்திகுத்து என்றால் ?
 

ஒரு வேளை எனக்கு எதாவது நேர்ந்து இருந்தால் ?

என்னை நம்பி இருக்கும் என் குடும்பம், குழந்தைகள் ?

ஒரு நாள் ரெகுலர் ஆவேன் என்ற எனது கனவு ?No comments :

Post a Comment