Saturday, February 1, 2014

அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர்கள் இருகிறார்களா ?







ஒரு சந்தேகம்

PRIVATE STUDENT
= GOVERNMENT STUDENT ஒன்னுதானே.

இவர்கள் போராட்டத்தால் சிகிச்சை ஏன் பாதிக்கபடுகிறது.

கல்வி மட்டுமே தானே பாதிக்கபட வேண்டும்.

சென்னை: நர்சிங் மாணவிகள் தொடர் போராட்டம் காரணமாக, உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் 800க்கும் மேற்பட்ட மாணவிகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் அதே எண்ணிக்கையில் மாணவிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை: இங்கு 120க்கும் மேற்பட்ட வார்டுகளில் ஸ்டாப் நர்சுகள் தவிர, ஒவ்வொரு வார்டுக்கும் 4 நர்சிங் மாணவிகள் பணியாற்றுகின்றனர். நோயாளிகளுக்கு மாத்திரை தருவது, ஊசி போடு வது, உணவு வழங்குவது, காயத்துக்கு சிகிச்சை என அனைத்து வேலைகளையும் நர்சிங் மாணவிகள் தான் செய்து வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1200 உள்நோயாளிகள் மற்றும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கார்டியாலஜி, நியுராலஜி, ஆர்த்தோ, அவசர சிகிச்சை உட்பட பல வார்டுகளில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை: இங்கு 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் பணியில் உள்ளனர். தீக்காய சிகிச்சை பிரிவு, குழந்தைகள் தீக்காய சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என பல வார்டுகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பராமரிப்பது, சிகிச்சை அளிப்பது என வார்டுகளில் உள் நோயாளிகளை கவனிப்பது நர்சிங் மாணவிகள்தான். அவர் களது போராட்டத்தால் இங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.ஸ்டான்லி மருத்துவமனை: இங்கு 40 வார்டுகள் உள்ளன. உள் மற்றும் புறநோயாளிகளாக சுமார் 2000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெட்டுகாயங்கள், அவசர சிகிச்சை அளிப்பதில் ஸ்டான்லி மருத்துவமனை, முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நர்சிங் மாணவிகள் போராட்டத்தால், ஊசிபோடுவது, ரத்த அழுத்தம் பார்ப்பது போன்ற பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை: சென்னையின் பிரதான மகப்பேறு மருத்துவமனையான இங்கு 220 நர்சிங் மாணவிகள் பயிலுகின்றனர். பிரசவம் மற்றும் பிரசவம் சார்ந்த சிகிச்சைகள், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை வார்டு என பல பிரிவு உண்டு. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சை, பரிசோதனைக்காக வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டவும், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பார்த்து குறிப்பு எழுதும் பணிகள் தேங்கி உள்ளன.

இப்போதாவது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவில் செவிலியர்கள் பணியில் இல்லை என்பதைஇது வரை அரசு மருத்துவமனைகள் எப்படி நடந்தது என்பதை