வெள்ளை உடை உடுத்திய சில கருப்பு ஆடுகள், நம்மை பற்றி மற்றவர்களிடம் சில தவறான கருத்துகளை பரப்புவதாக தகவல் பெறப்பட்டது.
அந்த தவறான தகவல் என்னவேனில் நாம் தான் 2007 BATCH தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வராமல் தடுத்து கொண்டிருக்கிறோம், போட்டால் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் ஒரே நாளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை யாருக்கும் போட கூடாது என கூறி தடங்கல் செய்வதாக 2008 இல் பணியில் இணைந்த தொகுப்பூதிய செவிலியர்களிடம் பொய் பிரசாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
என்னுடைய சீனியர் சகோதரிகள் ஐந்து வருடங்களை கடந்து எவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே தங்கள் வாழ்கை நடத்தி கொண்டு இருக்கிறார்கள், எத்தனை சகோதரிகள் கண்ணீர் சிந்தி கொண்டு இந்த பணி நிரந்தரத்தை நோக்கி காத்து கொண்டிருகிறார்கள்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.
தமிழகத்தில் ஒரு மருத்துவமனையில் ஒரு நிரந்த செவிலியபணி இடம் காலி இருந்தால் கூட உடனே அந்த இடத்தில் உடனே ஒரு தொகுப்பூதிய செவிலியரை நிரந்த பணி இடத்தில் நிரந்த செவிலியராக நிரப்ப வேண்டும் என்பதே எங்கள் நிலை, அதற்காகதான் நாங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறோம்.
ஆதலால் செவிலிய சகோதரிகள் தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.
அப்புறம் அந்த கருப்பு ஆடுகளுக்கு ஒரு எச்சரிக்கை நாங்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கும் சிலரின் கருத்துக்கு இணங்க அமைதியாக அடக்கி வாசிக்கிறோம், அதற்காக பலரின் உண்மையான உழைப்பை அவமதிக்கும் விதமாக வால் பிடித்து வருமானம் இட்ட நினைக்கும் கருப்பு ஆடுகள் செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும்
No comments :
Post a Comment