Thursday, February 27, 2014

CEMONC-NCD ஊதிய உயர்வு - திட்ட இயக்குனர்


மரியாதைக்குரிய தமிழ்நாடு சுகாதாரதுறை திட்டஇயக்குனர் அவர்களை (26/02/2014) அன்று சந்தித்து ஊதிய உயர்வு NRHM செவிலியர்களுக்கு வழங்கபட்டது போல் CEMONC மற்றும் NCD பிரிவில் பணி புரிபவர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு வரவில்லை என தெரிவிக்கபட்டு கோரிக்கை மனு நமது சார்பாக அளிக்கபட்டது.


திட்ட இயக்குனர்  அவர்கள் விரைவில் வர ஏற்பாடு செய்வதாக கூறினார்

அர்த்தம் பின்னர் தெரிவிக்கபடும்Saturday, February 22, 2014

ரெகுலர் ஆன சகோதரிகள் - ஊதிய நிலுவையை (ARREARS) -விண்ணப்பித்து பெற்று கொள்ளவும்.
தற்பொழுது ரெகுலர் ஆன சகோதரிகளும் கடந்த ஏப்ரல் முதல் தற்பொழுது ரெகுலர் ஆன தேதி வரை வரவேண்டிய பழைய தொகுப்பூதிய ஊதிய நிலுவையை (ARREARS) தற்பொழுது வந்துள்ள அரசாணையின் படி வழங்குமாறு  தங்களுடைய பழைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளவும்.
 
 
 

Friday, February 21, 2014

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் பணி-காலியிடங்களின் எண்ணிக்கை: 1326-கடைசி தேதி: 15.03.2014


 
 
 
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் செவிலியர் கிரேடு II பணிக்கான 1326 காலியிடங்கள் பூர்த்தி செய்ய தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1326
பணி: Staff Nurse Grade II
வயது வரம்பு:  18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஜெனரல் நர்சிங் முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 9300 - 34,800 + கிரேடு சம்பளம் . 4600.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் தங்கள் செயல்திறனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
1 . பொது & ஓ.பி.சி. வேட்பாளர்களுக்கு ரூ.500.
2 . SC/ST வேட்பாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
 

Thursday, February 20, 2014

உங்க போதைக்கு நாங்க ஊறுகா

பத்திரிகை செய்தி: 

திருவண்ணாமலை, பிப்.20
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகேவுள்ள ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டாய தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சென்னையைச சேர்ந்த பிரேமலதா.

இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் டாக்டர் இல்லாததால் இரவு நேரத்தில் இவர் மட்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்து உள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(17), சிவா(23) இரண்டு பேரும் குடிபோதையில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து அடிப்பட்ட நிலையில் அங்கு வந்துள்ளனர்.

குடிபோதையில் வந்த இருவரும் பணியிலிருந்த செவிலியர் பிரேமலதாவிடம் உடனடியாக மருத்துவம் பார்க்குமாறு கூறியுள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மாத்திரையை வழங்கி விட்டு ஊசியின் மூலம் மருந்தை செலுத்தி உள்ளார். இதில், விக்னேஷ்க்கு வலி ஏற்பட்டதால், செவிலியர் பிரேமாவிடம், விக்னேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பிரேமலதாவுக்கும் போதை ஆசாமிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் ஆத்திரமடைந்த குடிமகன்கள் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை எடுத்து செவிலியர்பிரேமலதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கை மற்றும் கழுத்து பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு சக செவிலியர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதைக் கண்ட போதை ஆசாமிகள் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
 

ஆபத்தான நிலையில் இருந்த செவிலியர் பிரேம லதாவை திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தானிப்பாடி போலிசார் தப்பியோடிய
 
இருவரில் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீது கொலைமிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள சிவாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போதை ஆசாமிகளால் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செவிலியர் பிரேமலதாவை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

2 பேர் கைது: இந்நிலையில், செவிலியரை கத்தியால் குத்தியதாக விக்னேஷ், சிவா ஆகியோரை தானிப்பாடி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்விகள்:

தவறு செய்ய நபர்களுக்கு அதிக பட்சம் என்ன தண்டனை வழங்கபடும் ?????????????

முதலில் தண்டனை வழங்கபடுமா இல்லை வழக்கம் போல ????????????

அரசால் அனைவர்க்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது உண்மைதான் என்ற போதிலும் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மேல் எடுக்க படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டாமா ???????????????

இது போன்ற செயல்கள் அங்குகொன்றும் இங்கொன்றும் நடந்ததாலும் கூட இது போன்று குடிபோதையில் வரும் நபர்கள் செவிலியர் ஒரு பெண்தானே என்ற ஏளனம், இவளால் நம்மை என்ன செய்ய முடியும் என்ற ஏளனம்,
 

உண்மைதான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, அது தானே உண்மை,
 

இரவில் யாருடைய துணையும் இல்லாமல் கட்டிய கணவன், பெற்ற பிள்ளை, அம்மா அப்பா அனைவரும் பல நூறு மைல்களுக்கு அப்பால், என்ன செய்ய முடியும் என்னால் ?

அவர்கள் தவறாக நடந்தால் கூட என்ன செய்ய முடியும் என்னால்??????? காரணம்

தொடர்ந்து பல வருடம் அதே இடத்தில தொகுபூதியத்தில் பணி புரிய வேண்டும்,
 

அவர்கள் எழுதும் பொய் பெட்டிசன்களுக்கு DD முன்னர் கைகட்டி பதில் சொல்ல வேண்டும்,

தொகுபூதியத்தில் இருக்கிறாய் ஒழுங்கா இரு இல்லை என்றால் சஸ்பேன்ட் செய்து விடுவேன் என்று உயர் பதவியில் உள்ளோர் கூறுவதை அமைதியாக கேட்க நேரிடும்

பணிஸ்மென்ட் டுட்டி பார்க்க நேரிடும்

நாங்கள் மிகுந்த மரியாதையை வைத்திருக்கும் பெரியவர்களுக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான்
 

இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடும் நபர்கள் மீது எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களுக்கு தெரிந்து அவர்களை விட்டால் பெண்களாகிய எங்களுக்கு யார் உள்ளார்கள் ?
 

இது போன்ற விசயங்களை அப்படியே பூசிமுழுகி விடாமல் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
 

உயிரை காக்கும் துறைக்கே கத்திகுத்து என்றால் ?
 

ஒரு வேளை எனக்கு எதாவது நேர்ந்து இருந்தால் ?

என்னை நம்பி இருக்கும் என் குடும்பம், குழந்தைகள் ?

ஒரு நாள் ரெகுலர் ஆவேன் என்ற எனது கனவு ?Wednesday, February 19, 2014

செவிலிய சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்
 

தமிழகத்தில் உள்ள 1600 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு சேவை புரிவதற்காக 24 மணி நேரமும் செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

 

அவ்வாறு இரவு நேரங்களில் தனியாக செவிலியர்கள் பணி புரியும் போது பெண்ணாக பல்வேறு இன்னல்களை தனியாக சந்திக்க வேண்டியுள்ளது.

 

பெரும்பாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரவு நேரங்களில் பல்வேறு விதமான அவசர பிரச்சனைகளுக்கு பல்வேறு விதமான மனநிலை உள்ள, படித்த, படிக்காத பாமர மக்கள், மற்றும் குடிபோதையில் உள்ளோர், நோயாளிகளாக வருகின்றனர்.

 

 

அப்படி வருபவர்களுடைய அதிகபட்ச எதிர்பார்ப்பு வந்த உடன் கவனித்து, ஊசியும் மாத்திரையும் கொடுக்க வேண்டும்.

 

வில்லங்கம் பிடித்தவர்களும், குடிபோதையில் உள்ளோரும் சில நேரங்களில் வரத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் போலிஸ் நிலையத்திற்கோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களுகோ சென்று எதுவும்

பேசமாட்டார்கள் பேசவும் முடியாது.

 

ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனை என்பது யார் வேண்டுமானாலும் என்ன நிலையில் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அதில் செவிலியர்க்லாகிய நாம் சூழ்நிலை கைதிகளாக உள்ளோம். மருத்துவமனையை பொறுத்தவரை அவர்கள் நோயாளி, அவருக்கு வைத்தியம் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மளுடையது என்பது விதியாக உள்ளது.

 

எனவே இரவு பணியில் செவிலியர்கள் தனியாக உள்ளபோது வரும் மனிதர்களுடைய மனநிலை என்ற நாடித்துடிப்பை பார்த்து, அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல நிலையில் இருந்தால் அவர்களுடைய பிரச்சனையை தன்மையை எடுத்து கூறி மேல் சிகிச்சைக்கு அனுப்பவும்.

 

சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லாத(குடி போதையில்) போது அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து,  அனுப்பி விடுவது நலம்.

 

அதை விடுத்தது நீதி, நேர்மை, தர்மம், நியாயம் பேசி கொண்டு இருந்தால் பாதிக்க படுவது நாம் தான். பிரச்னை வரும் அந்த நொடி நம்மை காக்க யாரும் அங்கே இருக்க மாட்டார்கள். அதன் பின்னர் கொடி பிடிப்பது வேறு பிரச்னை. பலன்????????????????

 

அப்படியே பாதிக்க பட்டாலும் குற்றம் புரிந்தவர்களுக்கு பெரிதாக தண்டனை ஒன்றும் கிடைத்து விட போவதில்லை. ஒரு பெண்ணாக இருக்கிற காரணத்தால் இருக்கின்ற பிரச்சனைகளை விடுத்தது, இருக்கிற பணியை விடுத்தது, பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில்  கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டு இருக்க முடியாது.

 

 

 

எனவே தயவு செய்து சகோதரிகளே பிரச்னைகுரிய நொடிகளை நேர்த்தியாக கவனமாக கையாளுங்கள்.

 

 

இந்த விளக்கத்திற்கான காரணம் திருவண்ணாமலை மாவட்டம் ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் இருந்த பிரேமலதா என்ற செவிலியரை அங்கு இரவு குடிபோதையில் வந்த இருவர் ஊசி போடவில்லை என்ற காரணத்திற்காக அங்கு இருந்த சிசர்ரால் வயிற்றிலும் நெஞ்சிலும் குத்தியதாக கூற படுகிறது.

 

குடிகாரனை சொல்லி அவன் திருந்த போவதில்லை. எனவே நாம் கொஞ்சம் சூழ்நிலைக்கு தகுந்தவாரு கொஞ்சம் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

 

பத்திரமாக இருங்கள் சகோதரிகளே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

Monday, February 17, 2014

DMS SENT APPOINTMENT & RELIEVING ORDER FOR 10/02/2014-CONDUCTED COUNCELING --81 POSTINGS

கடந்த 10/02/2014 அன்று நடந்த நிரந்தர கலந்தாய்வில் கலந்து கொண்ட 81 செவிலியர்களுக்கும் முதல் கட்டமாக பணியில் இணைவதற்கான பணி நியமன ஆணை மற்றும் பணி விடுவிப்பு ஆணை DMS யில் இருந்து அனுப்பபட்டு விட்டது.


DMS ஆணையை பதிவிறக்கம் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்

 
 
 
 
 
 
 

பல்வேறு நேரங்களில் சில அவசர உதவிகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் நமது சகோதரசகோதரிகளின் தொடர்பு தேவை படுகிறது. அவ்வாறான அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள தேவையான விவரங்கள்  உடனே பெற முடியாத சூழல் உள்ளத்தால் சகோதரசகோதரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க  முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆண் செவிலியர்களின் விவரங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

 

இங்கே வெளியிடபட்டு உள்ள விவரம் அதன் முதல் படி ஆகும். மேலும் சகோதர்கள் இங்கு தங்கள் விவரம் இல்லாவிட்டால் அவர்களுடைய புகைபடம் மற்றும் பணி புரியும் இடம், மற்றும் அலைபேசி எண்ணை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

 

சகோதரிகளின் விவரங்கள் அடுத்தகட்டமாக சேகரிக்கபடும்.

 


 
 


இந்த தகவல்கள் நமது இணைய தளத்தில் MALE NURSES DETAILS என்ற பக்கத்தில் நிரந்தரமாக இருக்கும், தொடர்ந்து மேம்படுத்தபடும்.

www.tnfwebsite.com

or 

www.cbnurse.com

By 
Ravi Seetharaman

Cell: 9789 3435 91

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Saturday, February 15, 2014


தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தம், மற்றும் கவுன்சிலிங் பற்றி பல்வேறு விதமான வதந்திகளையும், சிலர் தங்களுக்கு தெரிந்ததையும், மற்றவர்கள் கூறுவதையும் கேட்டு தெரிந்தும், தெரியாமலும் சிலர் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.

 

இதனால் தேவையற்ற குழப்பம் நேருகிறது.

 

மேலும் தொகுப்பூதிய சங்கத்தின் மூலமாக முடிந்தவரை நடக்க இருக்கும், நடந்து கொண்டிருக்கும் உண்மையான விசயங்களை தெரிவிக்க முயற்சிக்கிறோம், தெரிவித்து கொண்டும் இருக்கிறோம்.

 

சில நேரங்களில் சில விசயங்களை வெளியே தெரிவிக்காமல் தவிர்க்கிறோம்.  அதற்கு காரணம் தேவையற்ற குழப்பம் நேரும் என்பதால் தான்.

 

பணி நிரந்தரம் சமந்தமாக தொடர்ந்து நமது சங்கத்தின் சார்பாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வெற்றி பெரும் வரை நமது சங்கத்தின் முயற்சிகள் தொடரும். அது சமந்தமாக உறுதியான தகவல் வரும் பட்சத்தில் அனைவர்க்கும் தெரிவிக்கபடும். தகவல் எதுவும் வெளிடபடவில்லை என்பதற்காக முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்று அர்த்தம் இல்லை.

 

நன்றி

 

Thursday, February 13, 2014

CEMONC & NCD ஊதிய உயர்வு எப்போது?


 

 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி RCH, MMU, NICU பிரிவில் பணி புரியும் செவிலியர்களுக்கு வழங்கபட்டது போல் அரசு மருத்துவமனை CEMONC மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் NCD பிரிவின் கீழ் பணி புரியும் செவிலியர்களுக்கு எப்போது ஊதிய உயர்வு அரசானை வரும் என்று அனைவரும் எதிர்பார்கின்றனர்.
தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக விரைவில் இதை பற்றி உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து, அரசானை வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

அதை பற்றிய முழுவிவரமும் வரும் வாரங்களில் தெரிவிக்கபடும்.
 
 

Monday, February 10, 2014

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு

NRHM SCHEME இன் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கபட்டு G.O 342  வெளியிடபட்டு உள்ளது.

இந்த முடிவு கடந்த வருடம் 08/10/2013 அன்று நடைபெற்ற உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டு கடந்த 26/12/2013 அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது.

அதன்படி ENTRY LEVEL செவிலியர்களுகு முதல் வருடம் 7700 என ஊதியம் நிர்ணயிக்க பட்டு உள்ளது. அதற்கடுத்து வருடம் வருடம் 500 ரூபாய் பணி நிரந்தரம் செய்ய படும்வரை  ஊதிய உயர்வு அளிக்கபடும்..(Please read point 3, I, a)

முதல் வருடம்      7700 ரூபாய்

இரண்டாம் வருடம்  8200 ரூபாய்

மூன்றாம் வருடம்   8700 ரூபாய்

நான்காம் வருடம்    -9200 ரூபாய்

ஐந்தாம் வருடம்     -9700 ரூபாய்

இதை தவிர்த்து RURAL ALLOWANCE 500 ரூபாய் வழக்கம் போல் வழங்க படும். வருடாவருடா வருடம் 50  ரூபாய் சேர்த்து வழங்க படும்.

இந்த ஊதிய உயர்வு 01/04/2013 அன்று முதல் கணக்கிடபட்டு அரியர்ஸ் வழங்கபடும்.

அரசு தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் இதுவரை அதிகபட்சம் 8000 தொகுப்பூதியம் பெறுகிறோம்.


இதன்படி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான செவிலியர்கள் 2009 ஜூன் மாதமும் மற்ற செவிலியர்கள் மார்ச் 2011 பணியில் இணைந்து உள்ளனர்.

அரியர் கால்குலேசன்

சீனியர் BATCH-(THIS CALCULATION FOR 2009 BATCH)
GO EFFECT FROM: 01/04/2013
எனவே ஜூன் மாதம் 2009 பணியில் இணைந்தால்
ஏப்ரல் TO மே/2013 வரை நான்காவது வருடம் நடந்து கொண்டிருப்பதால்

நான்காம் ஆண்டு ஊதியம்                    = 9700
ஒரு மாத அரியர்                                       = 9200-8000=1200
எனவே இரண்டு மாத அரியர்             =2400

 ஜூன்/2013 TO ஜனவரி/2014 வரை ஐந்தாம் வருடம் நடந்து கொண்டிருப்பதால்

ஐந்தாம் ஆண்டு ஊதியம்                  = 9700
ஒரு மாத அரியர்                         = 9700-8000= 1700
எனவே எட்டு மாத அரியர்                =8x1700=13600


மொத்த அரியர் தொகை = 13600+2400=16000 ரூபாய்

ஊதியம்                                                     = 9700


ஜூனியர் BATCH-(THIS CALCULATION FOR 2011 BATCH)
ஏப்ரல்/2013 TO ஜனவரி /2014 வரை மூன்றாம் வருடம் நடந்து கொண்டிருப்பதால்

மூன்றாம் ஆண்டு ஊதியம்                   =8700
ஒரு மாத அரியர்                            =8700-8000= 700
எனவே பத்து மாத அரியர்                   =10x700=7000

ஆக மொத்தம் அரியர் தொகை = 7000 ரூபாய்

ஊதியம்                                    = 8700

தற்பொழுது NRHM கீழ் பணி புரியும் செவிலியர்களுக்கு மட்டும் அரசானை வழங்கபட்டு உள்ளது. விரைவில் TNHSP யில் பணி புரிவோருக்கும் வழங்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

அரசு ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்இந்த தகவலை நாம் விரைவாக பெற உதவிய மானமதுரை செவிலியர் ரமேஸ் அவர்களுக்கு நன்றி.