Wednesday, January 8, 2014

உயர்நீதி மன்றம் ஆணை-செவிலியபணிக்கு தேர்வு முறையை கடைபிடிக்க வேண்டும்



             
இனிமேல் தமிழக அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் செவிலியர் பணிக்கு தேர்தெடுக்கபடும் செவிலியர்கள் மெடிக்கல் ரீகொயர்மென்ட் போர்டு மூலம் நடத்தபடும் தேர்வு எழுதி மெரிட் அடிப்படையில் முன்னிலை பெறுவோர் மட்டுமே மட்டுமே பணிக்கு அமர்த்தபடுவர்.

இதுவரை அரசு பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறபோகிறது.

இந்த தேர்வு முறை ஏற்கனவே தொகுபூதியத்தில் உள்ள செவிலியர்களை பாதிக்காது. இது முழுக்க முழுக்க புதிதாக தேர்தெடுக்கபடும் செவிலியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

எனவே அரசு பள்ளியில் படிக்கும் செவிலியர்கள் கல்வியில் மிக அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே தேர்வில் தேர்ச்சி அடையமுடியும்.

இந்த தேர்வு முறை பற்றி அரசின் நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.