Friday, January 3, 2014

கிருஷ்ணகிரி தொகுப்பூதிய நலசங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் – அருமையான பணி




கிருஷ்ணகிரி மாவட்ட தொகுப்பூதிய சங்க  நிர்வாகி ஸ்ரீனிவாசன் மற்றும்  வெங்கட் மற்றும் ஈஸ்வரி, பூங்கொடி, நந்தினி, திவ்யா, காயத்திரி,   உஷாராணி, 30/12/2013 அன்று DD பிரேம்குமார்  அவர்களை நேரில் சந்தித்து தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.



மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணி புரியும் செவிலியர்களுக்கு எட்டு மணிநேர பணி போக கூடுதலாக பார்க்கப்படும் 4 மணி நேரத்திற்கு G.O. M.S NO 342 அரசு ஆணை படி தரப்பட வேண்டிய 1000 மற்றும் NRHM Rural allowance 500 தரப்பட வில்லை என்பதை DD கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து DD அவர்களின் கனிவான பார்வைக்கு சமர்பித்தார்.

மேலும் காவேரிபட்டினம் உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மேற்கண்ட எந்த குறையும் இல்லாமல் ஊதியத்தையும், அலவன்சு தரபடுவதற்கு  மரியாதைக்குரிய வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம்மற்றும் உதவி மருத்துவ அலுவலர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.




மரியாதைக்குரிய DD பிரேம்குமார் அவர்கள் கோரிக்கைகளை பரிசிலித்து உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

 மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மற்ற மாவட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் ஒரு வேண்டுகோள், தங்களுடைய நலனுக்காக எடுக்கபடும் நடவடிக்கைகளுக்கு தங்களுடைய ஒத்துழைப்பு அவசியம்.

மேலும் தற்பொழுது பணி நிரந்தம் செய்யப்பட்டு நமது தொகுப்பூதிய செவிலியர்களின் நலன் சமந்தப்பட்ட விசயங்களில் தொடர்ந்து உதவிவரும் செவிலியர்கள் முனியராஜ், அருள்மணி, இளவரசன், வெங்கட்ராகவன், ஆகியோருக்கும் நன்றி

இதே போன்று வழிமுறைகளை பின்பற்றி அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தங்களுடைய மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை ஒற்றுமையாக சேர்ந்து சென்று DD மற்றும் JD அவர்களிடம் தெரிவியுங்கள்.

தீர்க்கபட வில்லை எனில் சங்கநிர்வாகிகளுக்கு MAIL அல்லது போன் மூலம் தெரிவியுங்கள்.

cell: 9789 3435 91