Friday, January 31, 2014

பணி நிரந்த கவுன்சிலிங்-132 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு-03/02/2014

தொகுபூதியத்தில் பணி புரியும்  132 செவிலியர்களுக்கு வரும் திங்ககிழமை (03/02/2014) அன்று DMS வளாகத்தில் வைத்து பணி நிரந்தர கவூன்சிலிங் நடைபெற உள்ளது என்பதை தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இதை தவிர்த்து மேலும் 2008 பணியில் இணைந்த செவிலியர்கள் மீதம் 708 பேர் (2007 BATCH)  உள்ளனர்.


கீழே குறிப்பிட்ட அனைவரும் ஓமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணி அமர்த்தபடலாம் என்பதை கீழ் கண்ட வரிகள் தெரிவிக்கின்றது. 

Posting Counselling will be conducted on 3.2.2014 at the office of the Director of Medical and Rural Health Services, Chennai-6 to fill up the vacancies at Tamil Nadu Government Super Speciality Hospital, Omandurar Government Estate, Chennai.


132 நபர்களின் பெயர் பட்டியல் கீழே தரபட்டு உள்ளது.


Thursday, January 30, 2014

பணி நிரந்தரம் சமந்தமாக சென்னையில் - 30/01/2014


தொகுப்பூதிய செவிலியிய சங்கத்தின் உறுப்பினர்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் சமந்தமாக நேற்று சென்னை சென்று அங்கு பணி நிரந்தரம் செய்யபடுவதற்கு அடுத்து செய்ய வேண்டிய செயல்கள் நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது.

அதன் படி
Ø  வரும் 10 தேதி முதல் 17 வரை பல்வேறு மருத்துவமனைகளில் புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் ஏற்படுதியமைகாக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் அட்டை(badge) அணிந்து பணி புரிவது என முடிவு செய்யபட்டது. (BADGE வடிவமைக்கபட்டு விரைவில் தளத்தில் வெளியிடபடும்)

Ø 17 ஆம் தேதி அன்று சென்னையில் மருத்துவதுறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சாதனைகளை விளக்கும் வண்ணம் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்யபட்டது. காவல்துறையின் அனுமதி பெற்ற உடன் இறுதி தேதி அறிவிக்க படும்.


இதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்களை சந்தித்து தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பில் சால்வை அணிவிக்கபட்டது.
 
மதியம் ஒரு மணி அளவில் DME அலுவலகம் சென்று அங்கு கடந்த இரண்டு வருடமாக வெறும் 5000 சம்பளத்தில் DME மற்றும் TNMSC யில் நிர்வாக ரீதியான பணி தொய்வால் 76 மேற்பட்ட செவிலியர்கள் ஊதிய உயர்வு பெறாமல் பணி ஆற்றுவதை தெரிவித்தோம். DME அலுவலகத்தில் இருந்து ஊதிய உயர்வு சமந்தமான கோப்பு அன்று தான் தலைமைசெயலகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவித்தார்கள்.
மதியம் மூன்று மணி அளவில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் மற்றும் மற்ற சில உயர்அதிகாரிகளை சந்தித்து தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் குறித்து பேசப்பட்டது.

அதில் நமக்கு கீழ்கண்ட பதில்கள் கிடைத்தன.

MRB சமந்தமான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

v 1600 புதிய கிராமப்புற நிரந்தர பணி இடங்கள் குறித்து சில முக்கியமான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நிதிதுறையுடன் நடந்து கொண்டு இருக்கிறது. (இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெரும் என்ற நம்பிக்கை மட்டும் நமக்கு இருக்கிறது.)


v  ஒரு வாரம் முன்பு அறிவிக்கபட்ட 940 பணி இடங்கள் குறித்த அரசு ஆணை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அறிவிக்கபட்ட அனைத்து இடங்களும் நிரந்தரபணி இடங்களாக இருக்க வேண்டும் என்று செயலரிடம் கேட்டு கொண்டும். அவரும் முடிந்த வரை செய்வதாக கூறினார்.

இதன் பின்பு மாலை அடுத்த கட்டமாக அரசின் கவனைத்தை ஈர்த்து பணி நிரந்தரம் பெற செய்ய வேண்டிய பணிகளை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது பற்றி கலந்து ஆலோசிக்க பட்டது.
Wednesday, January 29, 2014

DMS அலுவலகத்தால் காலி பணி இடங்கள் குறித்த விவரம் JD மற்றும் DD அலுவலகத்தில் கோரப்பட்டு உள்ளது.

இன்று DMS அலுவலகத்தால் அனைத்து JD மற்றும் DD அலுவலங்களுக்கு தங்கள் கட்டுப்பாட்டில் தற்பொழுது உள்ள மருத்துவமனைகளில் பல்வேறு காரணகளினால் காலியாகி உள்ள செவிலிய பணி இடங்கள் குறித்து DMS அலுவலகத்திற்கு 30/01/2014 முன் தெரிவிக்குமாறு கோரப்பட்டு உள்ளது.

மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களின் முயற்சியால் DMS அலுவலகத்தால் முடிந்த வரை காலி பணி இடங்களின் (EXISTING VACANTS) கணக்கெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

பிப்ரவரி மாதத்தில் விரைவில் ரெகுலர் கவூன்சிலிங் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கவுன்சிலிங் பற்றிய அதிகாரபூர்வ தகவல் DMS அலுவலகத்தால் வெளியிடபட்ட உடன் எத்தனை பேருக்கு, எப்போது என்ற தகவல் நமது இணைய தளம் மூலம் அனைவருக்கும் தெரிவிக்க படும்.

www.tnfwebsite.com


www.cbnurse.com


www.tnnurse.org

Tuesday, January 28, 2014

பயிற்சி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்- சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரிகளில்-28/01/2014சென்னை,
சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவகல்லூரிகளில் பயிற்சி செவிலியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகள் பாதிப்படைந்தன.
உள்ளிருப்பு போராட்டம்
அரசு மருத்துவமனைகளில் தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படித்த செவிலியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை மருத்துவக்கல்லூரியில் செவிலியர்கள் (பயிற்சி) நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காலை 7 மணி முதல் அவர்கள் வேலைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காலை 10 மணிக்கு மருத்துவக்கல்லூரி டீன்வே.கனகசபை செவிலியர்களை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக அரசிடம் செவிலியர்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
சுகாதார பணிகள்
இதனையடுத்து செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு, மதியத்திற்கு பின்னர் பணிக்கு திரும்பினர். இந்த போராட்டத்தில் சென்னை மருத்துவக்கல்லூரியில் வருடம் பட்டயபடிப்பு படிக்கும் 800 செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் 300 பயிற்சி செவிலியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்துதல், டாக்டர் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகள் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகள் பாதிப்படைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவிலியர்கள் விளக்கம்
இது குறித்து பயிற்சி செவிலியர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களை தேர்வு மூலம் அரசு மருத்துவமனையில் பணி நியமனம் செய்வதன் மூலம் எங்களுக்குரிய வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடும். அரசு செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்கள் பெரும்பாலானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகள்.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களோடு ஒப்பிடும்போது நாங்கள் அதிக பாடம் கவனிப்பதை விடவும், அதிக மணி நேரம் நாங்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றோம். ஆகவே தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் செவிலியர்களை தேர்வு மூலம் எடுப்பதற்கான ஆணையை அரசு ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Saturday, January 25, 2014

மக்கள் நலனுக்காக 940 புதிய செவிலியர் பணி இடங்கள்-மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு செவிலியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி
கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், தாய் - சேய் நல மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், 55 மருத்துவமனைகளில் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கவும், செவிலியர் பயிற்சி மாணவியருக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளார். 


ஒரு நாட்டினுடைய மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியினை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்பதன் அடிப்படையில், உடலை உறுதியாக்கி, நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை அனைத்து மக்களும் பெற வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், சுகாதார பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருவதாக இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில், தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உயர் சிகிச்சை மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன - சில நேரங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் உள்ள நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ள மாவட்டங்களுக்கு, மேல்சிகிச்சைக்காக செல்ல வேண்டியுள்ளது - எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லாத கடலூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் -
 
இதனை செயல்படுத்தும் விதமாக, 15 மாவட்ட மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 105 சிறப்பு மேல்சிகிச்சை மருத்துவர்கள், 183 சிறப்பு மருத்துவர்கள், 60 மருத்துவர்கள், 3 பல் மருத்துவர்கள் மற்றும் 443 செவிலியர்கள், 14 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 18 நுண்கதிர்வீச்சாளர் பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் - நுண்கதிர்வீச்சாளர் இல்லாத 98 அரசு மருத்துவமனைகளில் நுண்கதிர்வீச்சாளர்களை நியமனம் செய்வதற்கும், ஆய்வக நுட்பனர்கள் இல்லாத 13 அரசு மருத்துவமனைகளில் தலா ஒரு ஆய்வக வல்லுநர் வீதம் 13 ஆய்வக நுட்பனர்களை நியமனம் செய்வதற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு, மகப்பேறு மற்றும் சிசு நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது - தமிழகத்தில் உள்ள ஒருங்கிணைந்த அவசர தாய்-சேய் நல மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, தாய்மார்கள் மரண விகிதம் மற்றும் சிசு மரண விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது - தற்போது, 105 அரசு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த அவசர கால தாய்-சேய் நல மையங்களாக செயல்பட்டு வருகின்றன -
 
அவற்றுள் கர்ப்பிணித் தாய்மார்கள் அதிகமாக பயன்படுத்தும் 55 மருத்துவமனைகளில் 'மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு' ஒன்றை தொடங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் - இதற்காக, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 4 செவிலியர்கள் வீதம் 220 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் -
 
மேலும் தாய்-சேய் நலனைக் காக்கும் வகையில், சேலம் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தாய்-சேய் நலப் பிரிவுகளையும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையையும், தாய்-சேய் நல மேலாண்மை சிகிச்சை மையங்களாக தரம் உயர்த்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார் - இம்மையங்கள் சிறப்பாக செயல்படும் பொருட்டு, கூடுதலாக 49 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 110 செவிலியர்களை நியமனம் செய்யவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் -
 
 மகப்பேறு காலத்தில் உயர் கவனிப்பு தேவைப்படும் கர்ப்பிணித் தாய்மார்களை கவனித்து உடனடியாக தகுந்த சிகிச்சை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு பிரிவுகளில் தலா 4 மருத்துவர்கள் வீதம் 36 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் - இதனை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 84 மருத்துவர்களை கூடுதலாக நியமனம் செய்வதற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார் -
இந்த நடவடிக்கைகள் மூலம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 56 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன - இந்த நடவடிக்கைகள் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புற மற்றும் உள் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது - இதனைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் பொருட்டு, கூடுதலாக 167 செவிலியர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும் 645 பேர் அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர் - இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு பயிலும் அரசிடமிருந்து உதவித் தொகை பெறும் செவிலியர் பயிற்சி மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் முதலாம் ஆண்டு கல்வி உதவித் தொகை, 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் ஆகவும், இரண்டாம் ஆண்டு உதவித் தொகை 440 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு உதவித் தொகை 480 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் - இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக 60 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் செலவினம் ஏற்படும் - மொத்தம் ஆயிரத்து 935 மாணவியர் ஆண்டுதோறும் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத் திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விரிவுப்படுத்தியுள்ளார் - அதன்படி, அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத் தமிழர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது - அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது - தமிழகத்தில் வாழும் அனைத்து இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை, முகாம்களில் வசிக்காமல், உள்ளூர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்திட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் - இதன் மூலம் 13 ஆயிரத்து 289 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.