Tuesday, December 24, 2013

சூரியன் மறைந்தது-மரியாதைக்குரிய PD பங்கஜ் சார் அவர்கள் பணி இடமாற்றம்

மரியாதைக்குரிய PD பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் இன்று 
TNHSP யில் இருந்து 
மெட்ரோ ரயில் திட்ட இயக்குனராக பணி இட மாற்றம் செய்ய பட்டார்.






தமிழகத்தை சுகாதார துறையில் முன்னேற்றம் அடைய செய்ய பல்வேறு சிறப்பு வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு இதுவரை அறியபடாமல் இருந்த PD என்ற ஒரு வார்த்தையை தமிழகம் முழுவதும் செய்தவர்.  மிக சிறந்த திட்ட அலுவலர்.

400 மேற்பட்ட புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக பங்கஜ் குமார் சார் அவர்களின் பங்கு முக்கியமானது. இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவுக்கு மிக சிறந்த மனிதர்.


ஒரு சில குறைகள் PD அவர்கள் இருந்தாலும் அவரது பணி மகத்தானது. ஏசி அறையில் உக்கார்ந்துகொண்டு ஜாலியாக சம்பளம் வாங்காமல் தமிழகம் முழுதுவம் சுற்றி பல மக்கள் நல பணிகளை மேற்கொண்டு உள்ளார். 

ஒரு சில குறைகள் என்று கருதபட்டது என்னவெனில் மக்கள் நலனுக்காக மருத்துவதுறை ஊழியர்கள் மேல் மிக அதிகமான பணி சுமை ஏற்ற பட்டது. இதனால் மருத்துவ துறை ஊழியர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானர்கள். இதன் எதிரொலியாக கடந்த 19 தேதி அன்று மரியாதைக்குரிய PD அவர்கள் ஊழியர் விரோத போக்கை கடைபிடிகிறார் என்றும் மேலும்  சில கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை சங்ககளின் கூட்டமைப்பு போராட்டம் நடந்த இருந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த போராட்டம் ஒத்தி வைக்க பட்டது.

இன்று  PD பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் TNHSP யில் இருந்து மெட்ரோ ரயில் திட்ட இயக்குனராக பணி இட மாற்றம் செய்ய பட்டார்.

இவரை போன்ற அதிகாரிகள் ஒரு துறையில் பணி புரிய அந்த துறை புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.விரையில் சென்னையில் மெட்ரோ ரயில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.