தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்த மரியாதைக்குரிய PD மற்றும் DMS சார் அவர்களுக்கு எங்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி
இரண்டு வாரம் முன்பு பல மாதங்களாக கேட்டும் எங்களுக்கு ஊதியம் தரப்படவில்லை என மரியாதைகுரிய PD அவர்களிடம் தெரிவித்து இருந்தோம் என்ற தகவல் உங்கள் அனைவர்க்கும் தெரியும்.
அடிகின்ற கைதான் அணைக்கும் என்பது போல மரியாதைக்குரிய PD அவர்கள் மக்கள் நலனுக்காக சில தவிர்க்க முடியாத சில பணி சுமைகளை நம் மேல் ஏற்றினாலும் கூட நமக்கு ஊதியம் வரவில்லை என்ற தகவலை தெரிவித்த உடன் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதற்கு ஒரு சிறு எடுத்துகாட்டு கன்னியாகுமரி, கரூர் MMU, சிதம்பரம் GH பணி புரியும் செவிலியர்கள் பல மாதங்கள் கேட்டும் கெடைக்காத ஊதியம், PD சார் எடுத்த நடவடிக்கை காரணமாக அலுவலகத்தில் உடனே செவிலியர்களை உடனே அழைத்து கையில் கொடுக்க பட்டுள்ளது.
இதற்காக சில மாவட்டங்களில் சில அதிகாரிகள், அலுவலர்கள் செவிலியர்களை கடிந்து கொண்டு உள்ளார்கள்.
கடிந்து கொண்ட அதிகாரிகளிடம் எங்கள் தாழ்மையான வேண்டுகோள், எங்களுக்கு, புரியவில்லை ஆறு மாதமாக சம்பளம் வரவில்லை என்றால் நாங்கள் வீட்டு வாடகை, பயண செலவு, உண்ண உணவு, குடும்ப செலவு, பெற்றோருக்கு கொடுக்க பணத்திற்கு என்ன செய்வது, கடன் என்ற பெயரில் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது என்பதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
இன்று (23/12/2013) அனைத்து JD அலுவலகத்திற்கும் மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களால் தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக சுற்றிக்கை அனுப்பபட்டுள்ளது.
அந்த சுற்றிகையில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக மாதம் மாதம் தரப்பட வேண்டும் என்று DMS அலுவலகத்தால் பல முறை JD அலுவலங்களுக்கு தெரிவிக்கபட்ட போதிலும், இது சமந்தமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பட்ட போதிலும் பல்வேறு மாவட்டங்களில் தொகுப்பூதிய செவிலியர்கள் பலர் பல மாதங்களாக ஊதியம் பெறாமல் பணியாற்றி வருவதாக TNHSP, CHIFE MINISTER CELL அலுவலங்களுக்கு மனுக்கள், மற்றும் MAIL அனுப்ப பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு மாவட்டங்களில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக வழங்க படாதது மட்டுமல்லாமல், இது சமந்தமாக சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்தள்ளது தெரியவந்துள்ளது.
இது சமந்தமாக அனைத்து JD அலுவலகங்ககளும் தங்கள் கட்டுபாட்டில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் கடந்த மாதம் வரை ஊதியம் பெற்று விட்டனரா, பெறவில்லை எனில் எத்தனை மாதம் பெறவில்லை, எந்த எந்த மாதம் இடையில் பெறாமல் உள்ளனர் என்பதை உடனடியாக DMS அலுவலகத்திற்கு வரும் 26/12/2013 அன்றுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இது மிகவும் அவசரம். இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள். நடவடிக்கை எடுக்க பட வில்லை எனில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மேல் மேல்நடவடிக்கை எடுக்க படும்.
எனவே தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியம் பெறவில்லை எனில் தங்களது JD ஆபீஸ் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
No comments :
Post a Comment