Wednesday, December 11, 2013

DME இல் இருந்து REGULAR ORDER DD மற்றும் JD ஆபீஸ்கு அனுப்பபட்டு விட்டது சகோதரிகளே


மனநிறைவுடன் தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக DME பக்கம் பணி நிரந்தரம் செய்யபட்ட செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மனநிறைவு என்று குறிப்பிட்டதன் காரணம் இதுவரை நடந்த கவுன்சிலிங் போல் இல்லாமல் நேர்மையாக நடந்ததால் தான்.

இருக்கும் காலி பணி இடங்களை உடனே நிரப்பி உதவிய மரியாதையை குரிய HEALTH SECRETARY ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கும், மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களுக்கும், தொகுப்பூதிய செவிலியர்களின் நெஞ்சார்ந்தத நன்றி.


எல்லாவற்றிக்கும் மேலாக தமிழகத்தை மருத்துவ துறையில் முதல் மாநிலமாக திகழ பல்வேறு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களின் முக்கியதுவத்தை கருத்தில் கொண்டு அங்கு நிரந்தர பணி இடங்களை தோற்றுவித்து தொகுபூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தால் எங்கள் வாழ்நாள் முழுவதும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருப்போம்.

இன்று அனைத்து அலுவலங்களுக்கு DME SIDE பணியில் இணைய ஆணை DME அலுவலகத்தில் இருந்து JD மற்றும் DD ஆபீஸ்கு அனுப்ப பட்டு விட்டது.

கடந்த மாதம் பணி நிரந்தரம் செய்யபட்ட 250 மேற்பட்ட செவிலியர்களில்  174 மேற்பட்டோர் DME  SIDE காலியாக இருந்த பணி இடங்களை தேர்தெடுத்தனர்.

அவர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து பணி விடுவிப்பு ஆணை வந்த போதும் JOINING ORDER வராமல் இருந்து வந்தது.

அந்த JOINING ORDER இன்று அதிகாரபூர்வமாக DME அலுவலகத்தில் இருந்து அனைத்து JD மற்றும் DD ஆபீஸ்கு அனுப்ப பட்டு விட்டது.

இங்கு முதல் பக்கம் மட்டும் உள்ளது.

மேலும் அனுப்பபட்டதன் முழு நகலும் உங்களுக்கு வேண்டுமெனில் கீழ் கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்.

CLICK - REGULARIZATION ORDER FOR DME SIDE








வேண்டுகோள்

மேலும் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் அரசின் பெயரை கெடுக்கும் வகையிலும், அதிகாரிகள் பெயரை கெடுக்கும் வகையில் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்று கூறிக்கொண்டு சில விஷமிகள் தொகுப்பூதிய செவிலியர்களிடம் பணம் வசூலிப்பதாக தகவல் அரசுக்கும், நமக்கும் தெரிய வந்துள்ளது.


தயவு செய்து யாரும் பணி நிரந்தரதிர்காக யாருக்கும் பணம் தரவேண்டாம் என்று தங்களை வேண்டி தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக வேண்டி கேட்டு கொள்கிறாம்.