Monday, December 9, 2013

ஆரம்ப சுகாதார புதிய பணி இடங்கள் - இறுதிகட்டத்தில்



தொகுப்பூதிய நல சங்கத்தின் சார்பாக அதன் உறுபினர்கள், 09/12/2013 அன்று நல்வாழ்வு துறை மற்றும் நிதித்துறையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளையும், அலுவலர்களையும் சந்தித்தோம்.

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நிரந்தர செவிலியர் என்ற அடிப்படையில் தயாரிக்கபட்ட கோப்பு இறுதி கட்டத்தில் நிதி துறையின் பார்வையின் கீழ் உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் இது சமந்தமான முடிவு தெரிய வாய்ப்புள்ளது.

மேலும் DME சென்று DME இன் கீழ் உள்ள மருத்துவமனைகளில் தற்பொழுது உள்ள 100 கும் மேற்பட்ட காலி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கும் காலி பணி இடங்களை DMS அலுவலகத்திற்கு உடனே தெரிவித்தால் 250 மேற்பட்ட செவிலியர்களுக்கு உடனே கவுன்சிலிங் வைக்க வாய்ப்புள்ளதால் இதை காலம் தாழ்த்தாமல் DMS அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டோம். அவர்களும் இன்னும் ஓரிரு நாளில் இது சமந்தமான கோப்பு அங்கு அனுப்பபட்டு விடும் என்று தெரிவித்தனர்.

மேலும் DMS சென்று மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களை சந்தித்து அடுத்த கவூன்ல்சிங் பற்றி கேட்ட பொழுது DME அலுவலகத்தில் இருந்து காலி பணி இடங்கள் லிஸ்ட் வந்த உடனே கவூன்சிலிங் வைக்கபடும் என்றும் இது சமந்தமாக எந்த வித கால தாமதமும் DMS அலுவலகத்தால் ஏற்படாது என்றும், அது சமந்தமான பணிகளை விரைவு படுத்துவதாக தெரிவித்தார்.