Sunday, December 15, 2013

24 மணி நேரமும் பணியில் இருப்பவர்கள் செவிலியர்கள் மட்டுமே ஆனால் 5 வருடங்களுக்கு மேலாக தொகுபூதியத்தில் இருப்பதும் ?????????????????????????










தினமலர்        பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013,07:07 IST


ஷிப்ட்' முறையில், நர்ஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.


வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெரும்பாலான நாட்களில், டாக்டர்கள் இல்லாததால், வெறிச்சோடி கிடக்கிறது. அதனால், உரிய நேரத்தில் அவசர மற்றும் முதலுதவி சிகிச்சைக்கு வழியின்றி, அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பேளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு, அவசர மற்றும் முதலுதவி சிகிச்சை அளித்தல், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கொண்டு வருகிறது.


வாழப்பாடி, திருமனூர், ஆரம்ப சுகாதார நிலையங்களை வழிநடத்தும், வட்டார சுகாதார நிலையமாகவும் 
விளங்கி வரும், பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கி பணிபுரிவதற்கு வசதியாக, பணியாளர் குடியிருப்புகள் உள்ளன.
பேளூர், பேரூராட்சி என்பதால், 24 மணி நேரமும், பிரசவம் பார்ப்பதற்கு வசதியாக, படுக்கை வசதியுடன் கூடிய உள்நோயாளி பிரிவும், ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனை பிரிவுகளும், ஹெச்.ஐ.வி., தொற்றுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் நம்பிக்கை மையமும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கி வருகிறது.


இந்நிலையில், டாக்டர் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள் தங்காததால், ஓரிரு குடியிருப்புகளை தவிர, மற்ற குடியிருப்புகள், பயன்பாடின்றி மூடிக்கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, காலை, 9 மணியில் இருந்து, 11 மணி வரை மட்டுமே, டாக்டர்கள் வந்து செல்கின்றனர்.


அலுவலகப்பணி, வாராந்திர விடுமுறை எனக்கூறி, டாக்டர்கள் வராததால், பெரும்பாலான நாட்களில், பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெறிச்சோடியே கிடக்கிறது. குறிப்பாக, வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை, அறிவிக்கப்படாத விடுமுறையாகவே மாறிவிட்டது. "ஷிப்ட்' முறையில், நர்ஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றனர்.
அதனால், உரிய நேரத்தில், அவசர முதலுதவி சிகிச்சைக்கு கூட, டாக்டர்களின் ஆலோசனையை பெற வழியின்றி, பேளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்களும், சுகாதார நிலைய குடியிருப்புகளில் தங்கி, தினந்தோறும் சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.