Friday, December 27, 2013

சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் 150 புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் - அரசு ஆணை வெளியிடு-கவுன்சிலிங்-30/12/2013






மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆசியால் சென்னையில் டெல்லி AIIMS மருத்துவமனைக்கு இணையாக ஓமந்தூர் மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைய உள்ளன. அதை முன்னிட்டு அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க அங்கு 26 வகை பிரிவுகளிலும் 216 நிரந்த பணி இடங்கள் தோற்றுவிக்க பட்டுள்ளன.

அதில் 150 நிரந்தர பணி இடங்கள் செவிலியர்களுக்காக ஒதுக்க பட்டுள்ளன.

இந்த 150 பணி இடங்களுக்கு மீதி உள்ள பிரிவுகளில் பணி இடங்களுக்கும் வரும் 30/12/2013 பொது மாறுதல் கலந்தாய்வு DME  வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்க பட்டுள்ள சர்வீஸ் பர்டிகுலர்ஸ் பூர்த்தி செய்து கவுன்சிலிங் வரும்பொழுது கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். சீனியாரிட்டி முறை பின்பற்றப்படும்.

இந்த கவுன்சிலிங் மூலம் ஏற்படும் காலி பணி இடங்கள் பின்னர் 2007 BATCH சேர்ந்த தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தர கவுன்சிலிங் மூலம் நிரப்பபடும்.

ஏற்கனவே ஒரு 14 மருத்துவமனைகளில் ஒரு  மருத்துவமனைக்கு 8 செவிலியர்கள் வீதம் 112 நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கபட்டுள்ளது.

ஏற்கனவே DMS மற்றும் DME 250 கும் மேற்பட்ட நிரந்தர செவிலியர் காலி பணி இடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிகின்றன.

எப்படியும் 500 மேற்பட்ட 2007 BATCH சேர்ந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் இன்னும் ஒரிரு மாதங்களில் செய்யபட வாய்ப்புள்ளது.





செவிலியர் பணி இடங்கள் அவுட்சோஸ் முறையில் ஓமந்தூர் மருத்துவமனையில் போடப்பட இருப்பதாக இதற்கு முன்னர் ஒரு தகவல் இருந்தது. அதன் பின்னர் தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களை சந்தித்து இது பற்றி தெரிவித்து, அப்படி ஒரு சூழ்நிலை நிலவினால் எங்கள் நிலையை அரசுக்கு தெரிவித்து தயவு செய்து நிரந்தர பணி இடங்களை உருவாக்கி 5 வருடமாக தொகுப்பூதியத்தில் இருக்கும் செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டோம். செயலர் அவர்களும் கண்டிப்பாக உதவி செய்வதாக கூறினார். அவர் சொன்னது போலவே செய்தும் கொடுத்து உள்ளார்.

இவ்வாறு நிரந்தர பணி இடங்களை உருவாக்க அனுமதி அளித்த எங்கள் இதயதெய்வம், கருணைதாய், ஓவ்வொரு தொகுப்பூதிய செவிலியர்கள் வாழ்விலும் ஒளியேற்றி கொண்டு இருக்கும் எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு 5000 தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்கிறோம். தமிழக முதல்வர் அம்மா ஆசைப்படி தமிழக மக்களுக்கு சிறப்பான சேவை செய்து அம்மா அவர்களுக்கும் அரசுக்கும் நற்பெயர் பெற்று தருவோம் என்று உறுதி அளிக்கிறோம்.

இதே போல் கிராமபுறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.

கவுன்சிலிங் ஆணை மற்றும் சர்வீஸ் பர்டிகுலர்ஸ்







by RAVI