Friday, December 20, 2013

14 மருத்துவமனைகளில்(CASUALTY)-மருத்துவமனைக்கு 8 நிரந்த செவிலியர்கள் வீதம் 112 புதிய செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிப்பு







மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு செயலர் மற்றும் TNHSP PD பங்கஜ் குமார் பன்சால் அவர்களின் சிறப்பான திட்டங்களால் தமிழக மருத்துவ துறை சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. தாலுக மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு அதனை வெற்றி கரமாக நடைமுறை படுத்தி வருகிறார். 

மேலும் செவிலிய துறைக்கு பல நன்மைகளை செய்து உள்ளார். குறிப்பாக கிராமபுறங்களில் ஏற்கனேவே 192 நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி 192 தொகுபூதிய செவிலியர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.

அதே போல் தற்பொழுது விபத்துகளில் அதிக உயிரிலப்பு ஏற்படுவதால் அதை தடுக்கும் நோக்கில் முதல் கட்டமாக கீழே உள்ள 14 மருத்துவ மனை அவசர வார்டுகளில் 4 மெடிக்கல் ஆபீசர் மற்றும் 8 நிரந்தர் செவிலியர் பணி இடங்கள் உருவாக்கி அரசு ஆணை வெளியிடபட்டு உள்ளது. இதன் மூலம் 2007 BATCH தொகுப்பூதிய செவிலியர்கள் 112 பேருக்கு நிரந்தர பணி விரைவில் கிடைக்கும்.. இந்த இடங்கள் உருவாக்கபட முழுகாரணமும் பங்கஜ் குமார் பன்சால் சார் அவர்கள் தான். அதற்கான அரசானை கீழே உள்ளது.

மேலும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் மற்றும் அலவன்சு 6 மாதமாக வரவில்லை என்று தெரிவித்த அடுத்த மூன்று நாட்களில் அனைத்து JD மற்றும் DD அவர்களுக்கு இந்த பிரச்சனையை தெரிவித்து  ஊதியத்தை பெற உதவினார்.

பல நிறைகள் சில வருத்தங்கள் மட்டுமே.

மருத்துவ துறையில் மக்கள் நலனுக்காக வேலை பார்க்கும் ஊழியர்களின் உடல் நலனும் மன நலனும் சிக்கலான நிலையில் உள்ளது.

கிராம புறங்களில் ஒரு செவிலியருக்கு 12 மணி நேர பணி, DEPUTATION DUTY, CALL DUTY, DEPUTATION காரணமாக  2 மணி நேரம் பயணம், கால் டூட்டி,  மீதி நேரத்தில் தூங்கி,  குடும்பத்தையும் குழந்தைகளை கவனிக்க முடியாமல் பெரும்பாலான தொகுப்பூதிய செவிலியர்கள் உடல் நலன் பாதிப்பை காட்டிலும், மிகுந்த அளவு மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

மரியாதைக்குரிய பங்கஜ் குமார் பன்சால் சார் அவர்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்,  மருத்துவர் மற்றும் செவிலியர் நிரந்தர பணி நியமனங்களை போதுமான அளவு ஏற்படுத்தி, தயவு செய்து எங்களுக்கு மகிழ்ச்சியான, மனநிறைவோடு பணி புரியும் சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறோம். 

நன்றி.