Saturday, November 9, 2013

HEALTH SECRETARY -தொகுப்பூதிய நலசங்க உறுப்பினர்கள் சந்திப்பு-08/11/2013



மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் உயர்திரு உயர்திரு ராதாகிருஸ்ணன் அவர்களை மீண்டும் சந்தித்து கிராமப்புற நிரந்தர பணி இடங்கள் உருவாக்கம் சம்ந்தமான பணிகள் கேட்ட பொழுது அது சமந்தமான கோப்பு இறுதி கட்ட பணிகளுக்காக நிதிதுறையின்  அனுமதி கோரி அனுப்பபட்டுள்ளது. மேலும் மூன்று முறைக்கு மேல் சில திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பபட்டு இறுதி வடிவம் அங்கு அனுப்ப பட்டுளதாக கூறினார்.

மேலும் செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மிக மோசமான செவிலியர் எண்ணிகை குறித்து தெரிவித்து மேலும் அதை சரி செய்து MCI விதிப்படி நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி தொகுபூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டு கொண்டோம். செயலாளர்  அவர்களும் இந்த பிரச்சனையை கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்றும் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் இது சமந்தமான ஆய்வு மேற்கொள்ளபடும் என்றும்  மேலும் இது சமந்தமான விரிவான ஆய்வுக்கு பிறகு போதுமான அளவில் செவிலியர் நியமிக்க படுவர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த MCI விதிப்படி செவிலியர் நியமனம் பற்றி விரிவாக பேசுவர்தற்கு செயலாளர் அவர்களிடம் APPOINTMENT கேட்டுளோம். விரைவில் அது பற்றி தெரிவிக்க படும்.

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட 500 படுக்கைகளுக்கு ஒரு செவிலியர் கூட நியமிக்க படவில்லை என்று தெரிவித்தோம்.. கோரிக்கையை பெற்று கொண்ட செயலாளர் அதன் மீது உரிய ஆய்வுக்கு பிறகு செவிலியர்கள் உறுதியாக நியமிக்க படுவர் என்று தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை, சென்னையில் புதிதாக ஆரம்பிக்க படவுள்ள மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர்கள் நியமிக்க படுவார்கள் என்று தெரிவித்தார்.


நமது தொகுபூதிய செவிலியர் சங்கம் நம்மால் இயன்ற அளவு பணி நிரந்தரம் என்ற இலக்கை நோக்கி முயற்சிகளை செய்து
கொண்டு இருக்கிறோம்.


தயவு செய்து யாரும் உடனே எதுவும் நடக்கவில்லையே என்று தளர்ச்சி அடைய வேண்டாம்.


கண்டிப்பாக அனைவரும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய படுவோம்.

தொட்டு விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை விட்டு விடும் எண்ணத்தில் நாமும்  இல்லை