Friday, November 29, 2013

சுகாதார திட்ட செயல்பாடு தமிழகம் சிறப்பான சேவை : உலக வங்கி சுகாதாரக்குழு தலைவர் பெருமிதம்

ராமநாதபுரம்: "இந்தியாவில் சுகாதார திட்டத்தை, பிற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்படுத்துவதாக,' உலக வங்கி சுகாதாரக்குழு தலைவர் பூஸ்ரா பின்டே ஆலம் கூறினார்.
ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில், உலக வங்கி நிதியுதவியுடன் சுகாதார திட்டம் செயல்படுகிறது. நவீன வசதிகளுடன் 24 மணி நேர ஆம்புலன்ஸ், இலவச அமரர் ஊர்தி , கர்ப்பிணி, தாய், சேய் நலம், தொற்றா நோய் சிகிச்சை, ஸ்கேன், நவீன எக்ஸ்ரே செயல்பாடுகளை உலக வங்கி சுகாதாரக் குழு நேற்று ஆய்வு செய்தது. 

குழுத்தலைவர் பூஸ்ரா பின்டே ஆலம் கூறியதாவது: குறைந்த வருவாய் உள்ள தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுகாதார திட்டம் செயல்பாடு குறித்து, அரசு மருத்துவமனைகளில் 3 நாள் ஆய்வு செய்தோம். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகள், அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார திட்ட நவீன சிகிச்சையால் பிரசவத்தின் போது கர்ப்பிணி, சிசு இறப்பு குறைந்துள்ளது. இதர மாநிலங்களை விட, சுகாதார திட்ட செயல்பாடுகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளன. பிற மாநிலங்களும், தமிழகத்தை பின்பற்ற வேண்டும். 1,200 கோடி ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் 2006ல் துவங்கிய இத்திட்ட செயல்பாடுகள் செப்.2014ல் முடிவடைகிறது. தமிழக அரசு விரும்பினால், இத்திட்டத்தை தொடரலாம், என்றார். உலக வங்கி ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பிரதீப் வல்சங்கர், சங்கீதா பின்டே, ஸ்ரீலதா ராவ், தமிழ்நாடு சுகாதார திட்ட சிறப்பு ஆலோசகர் காமாட்சி, துணை இயக்குனர் திருநாவுக்கரசு, சிறப்பு டாக்டர்கள் சுனில் கவாஸ்கர், பூர்வாதேவி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சாதிக்அலி உடனிருந்தனர்.


World Bank team expresses satisfaction over implementation of health projectWorld Bank Visit - Dr. Bushra Binte Alam


  • Tamil Nadu has done extremely well compared to other States.
  • Tamil Nadu has done exceptionally well in this area and set a model to be followed by other states.
  • Other States should learn lessons from Tamil Nadu in detecting NCDs at an early stage.
  • The project was drawing to a close in September next year in the State, after which, the World Bank would fund low income States to improve the health care system.

A six-member World Bank team headed by Dr. Bushra Binte Alam, Senior Health Specialist, on Wednesday visited the Government Headquarters Hospital here and other peripheral hospitals in the district and expressed satisfaction over the implementation of World Bank aided Tamil Nadu Health System Project.
“Tamil Nadu has done extremely well compared to other States and we are quite satisfied with the implementation of the project in the state,” Dr. Alam told reporters after visiting the facilities at the Headquarters hospital here, Government Hospital in Paramakudi and Public Health Centre at Pogalur with her team members.
The 217-million US dollar project launched in 2005 was aimed at improving the effectiveness of the health system, increasing access to health services, especially by the poor and the disadvantaged tribal groups and intervening and addressing key health challenges, particularly the four non-communicable diseases (NCD) such as hypertension, diabetes, breast cancer and cervical cancer, she said.
Ms. Alam said under the project, World Bank worked in partnership with the State government and played a significant role in the early detection of the NCDs and helped to bring down health care cost. Tamil Nadu has done exceptionally well in this area and set a model to be followed by other states, she said.
“Other States should learn lessons from Tamil Nadu in detecting NCDs at an early stage, reducing the maternal mortality and covering a large number of people under the health care system,” she said. The World Bank aided project was launched in 16 districts in the State in the first phase in 2005, she said adding the second phase was launched in April in the remaining districts including Ramanathapuram.
The project was drawing to a close in September next year in the State, after which, the World Bank would fund low-income States to improve the health care system, she said.
Dr. Sadhiq Ali, District Coordinator, Tamil Nadu Health System Project, said under the project, a total of 8,891 hypertension cases and 3,591 diabetes cases were detected and the patients were being given medicine regularly.
They have been advised lifestyle modifications too. He said doctors have identified 469 suspicious cervical cancer and 2,025 breast cancer cases.Thursday, November 28, 2013

1000 அலவன்சு, தரபடாமல் உள்ள பல மாத ஊதியம், அனைத்தும் விரைவில் தரப்படும்-திட்ட இயக்குனர் (PD)மரியாதைக்குரிய சுகாதார துறை சிறப்பு செயலர் மற்றும் TNHSP திட்ட இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் சார் அவர்களிடம் கீழ்க்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு தொகுப்பூதிய சங்கத்தின் சார்பாக தெரிவிக்க பட்டது.

விரைவில் 1000 RCH எக்ஸ்ட்ரா டுட்டி அலவன்சு வழங்க படும் என்றும் மேலும் தமிழ்நாடு முழுவதும் CEMONC, MMU, RCH பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு  வழங்க படாமல் பல மாதங்களாக உள்ள ஊதியம் உடனே வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்து உள்ளார்.
From:-
S. Ravi,
Vice President,
Tamilnadu Govt Contract Nurses Welfare Association,
Chennai

To:-
The Additional Secretary to Government,
Health and Family Welfare Department,
The Project Director,
TNHSP,
Tamil Nadu

Respected Sir,
            Greetings Sir, 
            Sub:- Tamil Nadu Government Contract Nurses Not getting Salary and Allowance  - Regarding
 
I am Ravi, from Contract  Nurses Association (Tamilnadu Government Contract Nurses Welfare Association.)
This mail is regarding Salary and Allowance issues of the Contract Nurses.
 
We heartfully thank you for creating 192 new staff nurses posts in block level primary health centres, and the continuos efforts for the welfare of nurses.
Inspite of your serious and sincere efforts, contract nurses who are all working under RCH, MMU, CEmONC schemes are suffered due to NOT getting salary and allowances.

 
Most of the contract nurses and their family members are depended on this salary only.

 
Getting salary from the attached office is tougher than work. They simply tells no fund for salary and allowances. We have no other way to express our problem in this regard.

This salary and allowance problem are persist in all over Tamil Nadu. Here I have mentioned example only sir.

For your kind reference, we would like to mention some districts and some nurses contact numbers.

RCH-12 HOURS EXTRA DUTY ALLOWANCES NOT GIVEN:
Due to shortage of nurses and redeployment process most of the additional and some block PHCs have only two staff nurses. They are doing 12 and 24 hours duty.

But most of the PHCs not yet given this allowance. Office people tells government has to allot seperate fund for this extra allowance, and also most of the time they are ignore this and also throw some random reasons for not giving this allowance even though we are doing 12 hours and 24 hours duty continuously. Please do needful in this regard sir.
.


MMU- NO SALARY FOR LAST 6 MONTHS

Karur and Kanniyakumari Districts

MMU staff nurses who are all working in the above districts are NOT getting salary for last  six months.

Rajalakshimi - 8056934763
P.Renugadevi-8508871416
Jeyamalar     -9790943193

CEMONC-NO SALARY

Kanniyakumari GH, Colachel GH-        6 MONTHS

Tirupur Districts and Taluks-                 3 MONTHS
Chidhamparam GH, Cuddlore District- 4 months

Sathish - 99944 97490
Emaraj-96000 52624
Pasupathy - 9566756325

CEmONC staff nurses who are all working in the above districts not getting salary last three to six months.

RCH-NO SALARY
LAST 3 MONTHS- NO SALARY
Revathi
Ponbethi Block
Pudhukottai Dt
Cell: 97909 60056

Whole block RCH staffs not getting 3 months salary.

We are trying to meet you more time sir, but unfortunately  you are on busy schedule sir, We have tried our best to solve this issue ourselves by meeting Concern PHC Medical Officer, Block Medical officer, Deputy Director, but we are not able to solve this,

The last and least hope is for us is you only sir. That is why we are sending this mail to you sir. We need our salary monthly basis sir, please give any permanent solution for this salary issue sir.Thanking You Sir

S.Ravi
Tamilnadu Govt Contract Nurses Welfare Association

Cell: 9789 3435 91 

கரூர் மாவட்டத்தில் மூன்று மாத சம்பளம் இன்று வழங்கப்பட்டது-நன்றி மரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கு

கடந்த வாரம் ஆறு மாதமாக சம்பளம் வாங்காமல் கரூர் மாவட்ட MMU ஒப்பந்த செவிலியர்கள் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற விவரங்களை DPH அவர்களிடம் தெரிவித்தோம்.

மரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களும் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இன்று(28/11/2013) மூன்று மாத சம்பளம் வழங்கபட்டுள்ளது.


நடவடிக்கை எடுத்த DPH அவர்களுக்கு நன்றி.

Sunday, November 24, 2013

அரசு டாக்டர், நர்ஸ்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஸ்டிரைக்


பிரசவத்தின்போது குழந்தை இறந்தது தொடர்பாக திருவள்ளூர் ஜிஹெச்சில் டாக்டர், நர்ஸ் உள்பட 3 பேரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்    அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் மனைவி தமிழ்செல்வி (24) கடந்த 13ம் தேதி பிரசவத்திற்காக திருவள்ளூர் ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்செல்விக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. இதில் குழந்தை இறந்துவிட்டது.

குழந்தை உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. டாக்டர், நர்ஸ்கள் கவனக்குறைவால் குழந்தை இறந்ததாக கூறி தமிழ்செல்வி உறவினர்கள், கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரசவத்தின் போது பணியில் இருந்த டாக்டர், நர்ஸ் மற்றும் உதவியாளரை திருவள்ளூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர் இளங்கோ பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நேற்று கலெக்டர் வீரராகவராவ் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஜிஹெச் டாக்டர் சூரிய பிரபாவதி, நர்ஸ் வள்ளி, உதவியாளர் சம்பத் அம்மாள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் அரசு மருத்துவமனையில் இன்று காலை பணிக்கு வந்த டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் திரண்டனர். கலெக்டர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு டாக்டர்கள் யாரும் சிகிச்சையளிக்க போகவில்லை.

இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை இணை இயக்குநர் பிரபாகரன் சிகிச்சையளித்தார். இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பரபரப்பு ஏற்பட்டதுதகவலறிந்ததும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் அபிராமி, தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தால்தான் கலைந்து செல்வோம் என்றனர்.இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சந்திரநாதனை போனில் தொடர்பு கொண்டு பேசினர். அதன்பிறகு சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதன் காரணமாக போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மாலை 5 மணிக்கு பணிக்கு திரும்பினர்.

Friday, November 22, 2013

ஆறு மாதமாக சம்பளம் வாங்காத அவலம்-கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் பணி புரியும் ஆறுக்கு மேற்பட்ட MOBILE MEDICAL UNIT செவிலியர்களுக்கு கடந்த ஆறு மாதமாக ஊதியமே வழங்க படவில்லையாம். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால் FUND வர வில்லையாம்.


தமிழகத்தில் CeMonc, RCH, MMU, NICU NCD என்று பல்வேறு பிரிவுகளில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.


அவ்வபோது ஏற்படும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளால் தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதியத்தை சரியாக பெறாமல் பணி புரிந்து வருகின்றனர்.


உதாரணமாக CeMonc பிரிவில் பணி புரியும் செவிலியர்களுக்கு HEAD OF THE ACCOUNT மாற்ற பட்டு ஆணை பிறப்பிக்க பட்டு அனைவர்க்கும் ஊதியம் உடனே வழங்க மரியாதைக்குரிய TNHSP PROJECT DIRECTOR அவர்களால் நடவடிக்கை எடுக்க பட்டு ஆணை பிறப்பிக்க பட்டது.  ஆனால் இன்னமும் பல இடங்களில் பல மாதமாக ஊதியம் வழங்க படாமல் உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் மருத்துவமனையில்  பணி புரியும் செவிலிய சகோதரர்கள் ஆறு மாதங்களாக ஊதியமே இல்லாமல் பணி புரிந்து உள்ளார்கள். இப்போது அவர் ரெகுலர்ரே ஆகி விட்டார். இந்த நிலைமை பல இடங்களில் உள்ளது.


ஆனால் சில இடங்களில் HEAD OF THE ACCOUNT மாற்ற பட்ட விவரம் தெரியாமல் சில கிளர்க்குகள் FUND இல்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

இது சமந்தமாக தொகுபூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக நாம் மருத்துவம் மற்றும்
ஊரக நல பணிகள் இயக்கதில் உள்ள பட்ஜெட் பிரிவை தொடர்பு கொண்ட போது எல்லா FUND ALOTTMENT செய்ய பட்டு விட்டதாக கூறினர். மேலும் சில இடங்களை தொடர்பு கொண்டு ஊதிய பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.

மேலும் RCH பிரிவில் 12 மணி நேரம் பணி புரியும் செவிலியர்களுக்கு 1000 ரூபாய் EXTRA அலவஸ் தராமல் பல இடங்களில் அலைகிளிகின்றன்ர்.

32 மாவட்டகங்களில் பல்வேறு இடங்களில்ஊதிய மற்றும் அலவன்ஸ் பிரச்னை உள்ளது. இது சமந்தமாக தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் சார்பாக DMS, DPH, PD, HEALTH SECRETARY அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய உள்ளத்தால், யாருக்கேனும் இந்த ஊதியம் மற்றும் அலவன்ஸ் வழங்க படாமல் இருந்தால் கீழ் கண்ட EMAIL ID அல்லது மொபைல் எண்ணிற்கு இக்கு கீழ் கண்ட தகவல்களோடு ஈமெயில் அல்லது SMS அனுப்பவும்.

CELL NO : 9789 3435 91
EMAIL ID: cbnursesassociation@gmail.com

பெயர்:

பணி புரியும் இடம்:

மாவட்டம்:

செல் நம்பர்:

பணி புரியும் SCHEME இன் பெயர் :

சம்பளம் வாங்காத மாதங்களின் எண்ணிக்கை:விரைவில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனை திறக்கபட வாய்ப்புஇதன் மூலம் 200 மேற்பட்ட புதிய நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்க பட வாய்ப்புள்ளது.

இதனால் 200 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது.


அப்படி நிரப்ப பட்டால் நாங்கள் சென்னையில் தான் பணி புரிய வேண்டுமா என்று என்ன வேண்டாம்

வழக்கம் போல் ஏற்கனேவே பணியில் உள்ள நிரந்தர செவிலியர்களுக்கு ஒரு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த பட்டு யார் யாருக்கு சென்னைக்கு வர விருப்பமோ அவர்களுக்கு பணி மாறுதல் அளித்து விட்டு அதன் மூலம் ஏற்படும் காலி பணி இடம் தொகுப்பூதிய செவிலியர்கலால் நிரப்ப படும்.

Tuesday, November 19, 2013

நேர்மையாக நடந்த நிரந்தர கவூன்சிலிங்- மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி


19/11/2013 அன்று சென்னை DMS வளாகத்தில் நடைபெற்ற 250 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தர கலந்தாய்வு நேர்மையாகவும் சிறப்பாகவும் இதுவரை நடைபெற்ற கவூன்சிலிங் போல் இல்லாமல் நன்றாக நடந்தது.


மரியாதைக்குரிய DMS சந்திரநாதன் சார் அவர்களின் சிறப்பான தலைமையாலும், அவரது சிறந்த முயற்சியாலும் எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் உள்ள இடங்கள் உள்ளவாறு காண்பிக்க பட்டு நிரப்பபட்டன.

அன்னியர்கள் யாரும், எதற்க்கும், எங்கும் அனுமதிக்க படவில்லை.

ரேங்க் பட்டியலில் முன்னர் உள்ள செவிலியர்கள் பெரும்பாலும் தாங்கள் விரும்பிய அல்லது விரும்பத்தக்க இடங்களை பெற்றனர். தேனி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, ஊட்டி, மற்றும் பல்வேறு இடங்கள் காண்பிக்க பட்டன. விருதுநகர், தூத்துகுடி, நெல்லை போன்ற மாவட்டங்கள் காண்பிக்க பட்டதாக தெரியவில்லை.


ஒரு சில சிறு குறைபாடுகள் இருந்தாலும் அதற்கு காரணம் நமது செவிலிய சகோதரிகள் தான்.


மொத்தத்தில் புன்னகை பூத்த முகங்கள் அதிகம்.

ஆக மொத்தம் இந்த கவூன்சிலிங் தொகுபூதிய செவிலியர்களின் பார்வையில் மனநிறைவாக இருந்தது. இதே போல் வர இருக்கும் அனைத்து கவூன்சிலிங் நடக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

கவூன்சிலிங் சில காட்சிகள்:Friday, November 15, 2013

19/11/2013 கவூன்சிலிங்கில் நிரந்தர செய்யபடவிருக்கும் 250 தொகுப்பூதிய செவிலியர்களின் பெயர்கள்-RANK LIST

கீழ்க்கண்ட லிஸ்டில் இருக்கும் செவிலியர்கள் மட்டும் வரும் 19/11/2013 அன்று நடைபெறவிருக்கும் கவூன்சிலிங் மூலம் நிரந்தரபடுத்த இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.மேலும் அனைவரும் மீதி உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அடுத்த கவூன்சிலிங் எப்போது என்று கேட்கிறார்கள். அதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இது சம்மந்தமாக நாம் கேட்ட பொழுது சென்னை ஓமந்தூர் மருத்துவமனைக்கும் மேலும் சில மருத்துவகல்லூரிகளில் புதிய பணி இடங்கள் உருவாக்க பட இருப்பதாக தெரிவித்தார்கள். இவை உருவாக்க பட்ட உடன் மீதி உள்ள நபர்கள் நிரந்தரபடுவார்கள் என்று தெரிவித்தார்கள்.


இதை தவிர்த்து அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்க தொகுப்பூதிய செவிலியர் சங்கத்தின் சார்பில் அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

விரைவில் அதை பற்றி தெரிவிக்க படும்.

நன்றி.

Wednesday, November 13, 2013

தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்சிலிங் தேதி-19/11/2013-இடம்-DMS- 250 பேருக்கு


தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு

கவுன்சிலிங் தேதி-19/11/2013

இடம்-DMS

250 பேருக்கு

2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த மேலும் 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் வரும் 19/11/2013 அன்று பணி நிரந்தரம் செய்ய பட உள்ளனர் என்பதை தொகுப்பூதிய நல சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இது போக 2007 செவிலியர்கள் மேலும் 750 பேர் மீதம் உள்ளனர்.


இதே போல் தொகுபூதியத்தில் உள்ள அனைத்து செவிலியர்களையும் நிரந்தரம் செய்யபட அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.


மரியாதைக்குரிய மருத்துவம் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை 

இங்கு தர வேற்றம் செய்ய பட்டுள்ளது.இந்த தகவலை நாம் உடனே பெற உதவியவர்

திரு.சேலம் மாதேஷ்
ஆண் செவிலியர்


அவருக்கு நன்றி

Tuesday, November 12, 2013

2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த மேலும் 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் ஓரிரு வாரங்களில் செய்யப்பட வாய்ப்பு

2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த மேலும் 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் ஓரிரு வாரங்களில் செய்யப்பட வாய்ப்பு
2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணியில் இணைந்த முதல் 584 செவிலியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்ய பட்டு உள்ளனர்.

இதற்கு அடுத்து ரேங்க் லிஸ்டில் உள்ள 250 மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் ஓரிரு வாரங்களில் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரபூர்வ மற்ற தகவல்கள் தெரிவிகின்றன.

மேலும் திருவண்ணாமலையில் உருவாக்க பட்டுள்ள 93 பணி இடங்கள் தமிழ்நாடு முழுவதும் நிரந்தர பணியில் உள்ள செவிலியர்கள் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்களுக்கு 13/11/2013 நடைபெற உள்ள கலந்தாய்வில் நிரப்பபட்டு இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்படும் காலி பணி இடம் பின்னர் நடக்க இருக்கும் தொப்பூபுதியம் TO ரெகுலர் கலந்தாய்வில் நிரப்பபடும்.

உதாரணமாக சேலத்தில் பணி புரியும் ஒருவர் திருவண்ணமலைக்கு 13/11/20141 அன்று கலந்தாய்வில் விருப்ப பணி மாறுதல் பெற்றால், சேலத்தில் ஏற்படும் காலி பணி இடம் பின்னர் நடக்க இருக்கும் தொப்பூபுதியம் TO ரெகுலர் கலந்தாய்வில் நிரப்பபடும்.

Saturday, November 9, 2013

புதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - -திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு பணி மாறுதல் வேண்டுவோர் மட்டும் வருக- 13.11.2013 at 11.00 A.M - DMS
புதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர செவிலியர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு - -திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு பணி மாறுதல் வேண்டுவோர் மட்டும் வருக- 13.11.2013 at 11.00 A.M - DMS


இதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏற்படும் காலி பணி இடங்களில் இதன் பின்னர் நடக்க இருக்கும் தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வில் நிரப்பபடும். திருவண்ணாமலையில் 60 இருந்து 90 புதிய பணி இடங்கள் உருவாக்க பட்டுல்லதாக தெரிகிறது. சரியான எண்ணிக்கை விரைவில் தெரிவிக்கபடும்.

நிரந்தர செவிலியர்களுக்கு 13/11/2013 அன்று பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்வர்கள் கண்டிப்பாக ஒரு வருடம் கண்டிப்பாக தற்பொழுது பணிபுரியும் இடத்தில பணி புரிந்து இருக்க வேண்டும். 

மேலும் அதற்கான சர்வீஸ் சர்டிபிகேட் கண்டிப்பாக கவுன்சிலிங் வரும் பொழுது கொண்டு வர வேண்டும். 

மரியாதைக்குரிய மருத்துவம் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை இங்கு தர வேற்றம் செய்ய பட்டுள்ளது.
MEDICAL AND RURAL HEALTH SERVICES DEPARTMENT

From
Dr.A. Chandranathan, M.D.,
Director of Medical and Rural Health Services,
Chennai-6.

To
The Director of Medical Education, Kilpauk, Chennai-10.
The Commissioner of Indian Medicine and Homeopathy, Arumbakkam, Chennai-106.
The Director of Medical and Rural Health Services (ESI), Chennai-6.

Ref.No.71756/N2/2/2013, dated 8.11.2013.

Sir,
Sub: Nursing Establishment – Staff Nurse (Regular), Thiruvannamalai

Medical College, Thiruvannamalai District – Counselling on 13.11.2013 –

Regarding.

Ref: G.O(Ms) No.233, Health and Family Welfare (J2) Department, dated

18.10.2013.

******

It is proposed to conduct a Transfer Counselling for Staff Nurses (Regular)in the newly created Staff Nurses post in the reference cited. Thiruvannamalai Medical College, Thiruvannamalai District on 13.11.2013 at 11.00 A.M at the Office of the Director of Medical and Rural Health Services, Chennai-6 (6th floor Conference Hall)

With the following conditions:

1. Those who are willing for transfer to Thiruvannamalai Medical College, Thiruvannamalai District with one year service in the present station along with the service certificate issued by the Head of the institution alone will be permitted to participate in the transfer counseling. Others will not be permitted to attend the counseling.
Yours faithfully,

for Director of Medical and Rural Health Services

Copy to:
ALL the Joint Director of Health Services.

All the Deputy Director of Health Services.

All Deans.

Stock file/ Spare copy.

HEALTH SECRETARY -தொகுப்பூதிய நலசங்க உறுப்பினர்கள் சந்திப்பு-08/11/2013மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் உயர்திரு உயர்திரு ராதாகிருஸ்ணன் அவர்களை மீண்டும் சந்தித்து கிராமப்புற நிரந்தர பணி இடங்கள் உருவாக்கம் சம்ந்தமான பணிகள் கேட்ட பொழுது அது சமந்தமான கோப்பு இறுதி கட்ட பணிகளுக்காக நிதிதுறையின்  அனுமதி கோரி அனுப்பபட்டுள்ளது. மேலும் மூன்று முறைக்கு மேல் சில திருத்தங்களுக்காக திருப்பி அனுப்பபட்டு இறுதி வடிவம் அங்கு அனுப்ப பட்டுளதாக கூறினார்.

மேலும் செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மிக மோசமான செவிலியர் எண்ணிகை குறித்து தெரிவித்து மேலும் அதை சரி செய்து MCI விதிப்படி நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்கி தொகுபூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டு கொண்டோம். செயலாளர்  அவர்களும் இந்த பிரச்சனையை கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்றும் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளிலும் இது சமந்தமான ஆய்வு மேற்கொள்ளபடும் என்றும்  மேலும் இது சமந்தமான விரிவான ஆய்வுக்கு பிறகு போதுமான அளவில் செவிலியர் நியமிக்க படுவர் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த MCI விதிப்படி செவிலியர் நியமனம் பற்றி விரிவாக பேசுவர்தற்கு செயலாளர் அவர்களிடம் APPOINTMENT கேட்டுளோம். விரைவில் அது பற்றி தெரிவிக்க படும்.

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட 500 படுக்கைகளுக்கு ஒரு செவிலியர் கூட நியமிக்க படவில்லை என்று தெரிவித்தோம்.. கோரிக்கையை பெற்று கொண்ட செயலாளர் அதன் மீது உரிய ஆய்வுக்கு பிறகு செவிலியர்கள் உறுதியாக நியமிக்க படுவர் என்று தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை, சென்னையில் புதிதாக ஆரம்பிக்க படவுள்ள மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர்கள் நியமிக்க படுவார்கள் என்று தெரிவித்தார்.


நமது தொகுபூதிய செவிலியர் சங்கம் நம்மால் இயன்ற அளவு பணி நிரந்தரம் என்ற இலக்கை நோக்கி முயற்சிகளை செய்து
கொண்டு இருக்கிறோம்.


தயவு செய்து யாரும் உடனே எதுவும் நடக்கவில்லையே என்று தளர்ச்சி அடைய வேண்டாம்.


கண்டிப்பாக அனைவரும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய படுவோம்.

தொட்டு விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை விட்டு விடும் எண்ணத்தில் நாமும்  இல்லை