Thursday, October 24, 2013

நன்றி ரவீந்திரநாத் சார்-சுகாதார துறை ஊழியர் தற்கொலை-வேலை பளு- உயர் அதிகாரிகளால் மனஉளைச்சல்-ஹிந்து தமிழ்

நன்றி ரவீந்திரநாத் சார்-சுகாதார துறை ஊழியர் தற்கொலை-வேலை பளு- உயர் அதிகாரிகளால் மனஉளைச்சல்-ஹிந்து தமிழ்


புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவர் திருச்சி காஜாமலை சுகாதாரத்துறையில் மலேரியா தடுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 24/10/2013 அன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி போலீசாரிடம் அளித்த புகாரில், "உயர் அதிகாரி(துணை இயக்குனர்-சேரன்) ஒருவர் தனது கணவரை வேலை நிமித்தமாக அடிக்கடி சித்ரவதை செய்தார். இதனால் அவர் நீண்டநாட்களாக மனஉளைச்சலில் சிரமப்பட்டார். அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த சம்பவம் அறிந்த மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சங்கத்தினர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டனர். சுகாதாரத்துறை உயர் அதிகாரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

உயர் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அப்போது பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனை முடித்து வேனில் ஏற்றி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே கொண்டு செல்ல தயார் ஆனது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேனுக்கு முன்பு அமர்ந்து உடலை வாங்க மறுத்து கோஷம் போட்டனர்.

திருச்சி கோட்டாட்சியர் பஷீர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இந்த சம்பவம் குறித்து பாலாஜியின் மனைவி முத்துலட்சுமி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சுகாதாரத்துறை உயர் அதிகாரியிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார் என்று தெரிகிறது.

தொகுப்பூதிய செவிலிய சங்கத்தின் சார்பாக இவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். .... அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

HEALTH SECRETARY AND DMS-தொகுப்பூதிய நலசங்க உறுப்பினர்கள் சந்திப்பு-23/10/2013


சுகாதரதுறை செயலாளர் உயர்திரு ராதாகிருஸ்ணன் சார் அவர்களை சந்தித்து கிராமப்புற நிரந்தர பணி இடங்கள் உருவாக்கம் சம்ந்தமான பணிகள் குறித்து கேட்டு அறிந்தோம். மேலும் அது தொடர்பான பணிகளை விரைவாக முடித்து தரும்படி கேட்டு கொண்டோம். செயலாளர் அவர்களும் இந்த அது தொடர்பான பணிகளை விரைந்து முடித்து தருவதாக உறுதி அளித்தார்.

மேலும் பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பற்றாகுறை உள்ளதையும் மேலும் MCI விதிப்படி செவிலியர்கள் நியமிக்க படாததால் 5500 தொகுபூதியத்தில் செவிலியர்கள் தொடர்ந்து தொகுபூதியத்தில் பணி புரிந்து கொண்டிருப்பது பற்றியும் விளக்கமாக எடுத்து கூறபட்டது. அதை கேட்ட செயலளார் அவர்கள் இது சமந்தமாக துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டு அடுத்த மீட்டிங்கில் இதை பற்றி பேசுவதாக கூறியுள்ளார். இது சமந்தமாக அடுத்த மாதம் தெரிவிக்க படும்.

அடுத்து DMS அலுவலககத்தில் உள்ள BUDJET DEPRTMENT சென்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுமாதமாக ஊதியம் வழங்கபடாமல் இருப்பதாக சுட்டி காட்டினோம். உடனே அங்கு இருந்த அதிகாரி அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட JD அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ததோடு இனிமேல் இவ்வாறு எந்த மாவட்டத்தில் வழங்காமல் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும்படி கூறினார். மேலும் இது சமந்தமாக மதிப்பிற்குரிய DMS அவர்களிடம் தெரிவிக்கபட்டது. உடனே DMS சார் அவர்களும் கன்னியாகுமரி JD அவர்களை தொடர்பு கொண்டு இந்த 6 மாத ஊதியதை உடனே வழங்க உத்தரவிட்டார்.

மேலும் TNHSP அலுவலகம் சென்று NRHM அலுவலகத்தில் உள்ள அதிகாரியை பார்த்து RCH SCHME இல் பணி புரியும் செவிலியர்கள் படும் அனைத்து இன்னல்களையும் எடுத்து கூறினோம். 12 மணி நேர பணி, விடுப்பின்மை, மற்றும் இவ்வாறு பிரசவத்தை மட்டுமே கணக்கில் கொண்டு முன்று செவிலியர்களை இரண்டாக மாற்றியது, மற்றும் ஆரம்ப சுகாதர நிலையத்தில் உள்ள இதர பணிகள், ANM அனைவரும் VHN ஆக மாற்ற பட்டது கூறித்து எடுத்து கூறினோம்.

அதற்கு அவர்கள் இது மத்திய அரசுசில் உள்ள சுகாதார துறை எடுத்த முடிவு, மேலும் OUTSOURSE முறையில் RCH SCHME இன் கீழ் விரைவில் செவிலியர்கள் நியமிக்க படுவார்கள். அவ்வாறு நியமிக்க படும் போது அவர்கள் செவிலியர்கள் எங்கு வார விடுப்பு மற்றும் மற்ற விடுப்பு எடுகிறர்களோ அங்கு சுழற்சி பணி புரியவர் என்று கூறினார்.

மேலும் 12 மணி நேர பணிக்கு 1000 எக்ஸ்ட்ரா அலவன்சு தரபடாமல் செவிலியர்கள் அலைகிளிக்க படுவதை எடுத்து கூறினோம். இது சமந்தமாக உடனே அனைவர்க்கும் EMAIL அனுப்புவதாக கூறினார்.

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 பிரசவத்துக்கும் குறைவாக நடப்பதாலேயே இரண்டு செவிளியர்களாக மாற்ற பட்டதாக கூறினார். மேலும் தாய்சேய் இறப்பு ஏற்பட partogram போடாததே காரணம் எனவும் அதை பின்பற்ற வேண்டும் எனவும் இதை அனைவர்க்கும் தெரிவிக்கும் படியும் கூறினார்.

அவர்கள் கூறிய விசங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருந்ததன, அதை அவர்களிடம் எடுத்து கூறினோம்,

நீண்ட நாட்களாக எந்த வித அறிவிப்பும் WEBSITIL இல்லையே என்று அனைவரும் கேட்கின்றனர். சென்றோம், பார்த்தோம், வந்தோம் என்று மாதத்திற்கு மாதம் போடுவதால் என்ன பயன். அலைந்து திரிந்து போராடுபவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ சென்றோம், பார்த்தோம், வந்தோம் என்று இதை படிபவர்களுகும் சலிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் ஓவ்வொரு முறை செல்வதை பற்றியும் நடந்ததை பற்றியும் UPDATE செய்ய படுவதில்லை.

சுருக்கமாக சொன்னால் 95% மேல் பெண்கள் பணி ஆற்றும் செவிலிய சமுதாயம் அந்த பணிக்குரிய மரியாதையை மற்றும் மற்ற உரிமைகளை பெற தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

நன்றி

அனைத்து செவிலியர்களும் கொஞ்சம் விழிப்போடு இருங்கள்