Thursday, September 12, 2013

உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன் அவர்களை சந்தித்து தொகுப்பூதிய செவிலியர் நலசங்கம் கோரிக்கை-11/09/2013



தொகுப்பூதிய செவிலிய சங்க நிர்வாகிகள் திரு.ஜெயகுமார், செல்வி.தேவிகா, மற்றும் ரவி, மற்றும் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்களுடன் உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன்  சார் அவர்களை சந்தித்து தமிழகத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களின் எண்ணிக்கை, அவர்கள் பணி புரிந்த ஆண்டுகள் குறித்த தகவல்கள், மற்றும் தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்ய ஆகும் காலம் வரை குறைந்தது முழு ஊதியம், கிராமப்புறங்களில் மூன்று செவிளியர்களில் இரண்டு செவிளியர்களாக மாற்றம் மற்றும் அதனால் மற்ற இரு செவிலியர்களின் 12 மணி நேர பணி ஆணை அதனால் அவர்கள் படும் இன்னல்கள், மற்ற மாநிலங்களில் NRHM செவிலியர்களுக்கு தரப்படும் அதிக படியான ஊதியம் பற்றி விளாவரியாக எடுத்து கூறபட்டது.


உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன்  சார் நாம் கூறிய அனைத்து விசயங்களையும்  அவருடைய கடுமையான பணி சூழ்நிலைகளுக்கு இடையே மிகுந்த நேரம் ஒதுக்கி பொறுமையாக கேட்டு தற்பொழுது உள்ள சூழல் குறித்தும், நமக்காக எடுக்கபடும் நடவடிக்கைகள் குறித்தும் நம்மிடம் தெளிவாக எடுத்து கூறினார். இன்னும் ஓரிரு வாரங்களில் என்னவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட உள்ளன என்ற விவரம் முழுமையாக தெரிய வரும். 

மேலும் தொகுபூதிய செவிலியர்களாகிய நாமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கருணை பார்வை நம்மேல் கருணையுடன் படும் வண்ணம் ஒற்றுமையாக சில காரியங்களை செய்ய வேண்டும். அவைகள் என்னஎன்ன வென்று  விரைவில் தெரிவிக்க படும்.