Monday, September 23, 2013

2007 BATCH சார்ந்த 300 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வாய்ப்பு


Nursing Superintendent Grade - I and Nursing Superintendent Grade - II Service particulars Called


தமிழக அரசு மருத்துவமனைகளில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட, வட்ட, வட்டம் சாராத மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்) பணிபுரியும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு (Grade I & II) வழங்கும் பொருட்டு அவர்களின் பணி பற்றிய கருத்துரு சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது.



அதற்கான தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.


இதன் மூலம் ஏற்படும் காலி பணி இடங்களில் 300 தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியராக பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


1.  Please click here for Nursing Superintendent Grade - 1 Proposed Panel List (Not Final List)




2. Please click here for Nursing Superintendent Grade - 2 Proposed Panel List (Not Final List)

Thursday, September 19, 2013

புதிய DMS அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தின் சார்பாக வாழ்த்து




புதிய DMS ஆக பொறுப்பேற்று உள்ள மரியாதைக்குரிய திரு. சந்திரநாத் சார் அவர்களுக்கு தொகுப்புதிய செவிலிய சங்கத்தின் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க பட்டது.

Saturday, September 14, 2013

Thursday, September 12, 2013

உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன் அவர்களை சந்தித்து தொகுப்பூதிய செவிலியர் நலசங்கம் கோரிக்கை-11/09/2013



தொகுப்பூதிய செவிலிய சங்க நிர்வாகிகள் திரு.ஜெயகுமார், செல்வி.தேவிகா, மற்றும் ரவி, மற்றும் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்களுடன் உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன்  சார் அவர்களை சந்தித்து தமிழகத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களின் எண்ணிக்கை, அவர்கள் பணி புரிந்த ஆண்டுகள் குறித்த தகவல்கள், மற்றும் தொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்ய ஆகும் காலம் வரை குறைந்தது முழு ஊதியம், கிராமப்புறங்களில் மூன்று செவிளியர்களில் இரண்டு செவிளியர்களாக மாற்றம் மற்றும் அதனால் மற்ற இரு செவிலியர்களின் 12 மணி நேர பணி ஆணை அதனால் அவர்கள் படும் இன்னல்கள், மற்ற மாநிலங்களில் NRHM செவிலியர்களுக்கு தரப்படும் அதிக படியான ஊதியம் பற்றி விளாவரியாக எடுத்து கூறபட்டது.


உயர்திரு மக்கள் நல்வாழ்வுதுறை செயலர் ராதாகிருகிருஷ்ணன்  சார் நாம் கூறிய அனைத்து விசயங்களையும்  அவருடைய கடுமையான பணி சூழ்நிலைகளுக்கு இடையே மிகுந்த நேரம் ஒதுக்கி பொறுமையாக கேட்டு தற்பொழுது உள்ள சூழல் குறித்தும், நமக்காக எடுக்கபடும் நடவடிக்கைகள் குறித்தும் நம்மிடம் தெளிவாக எடுத்து கூறினார். இன்னும் ஓரிரு வாரங்களில் என்னவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட உள்ளன என்ற விவரம் முழுமையாக தெரிய வரும். 

மேலும் தொகுபூதிய செவிலியர்களாகிய நாமும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கருணை பார்வை நம்மேல் கருணையுடன் படும் வண்ணம் ஒற்றுமையாக சில காரியங்களை செய்ய வேண்டும். அவைகள் என்னஎன்ன வென்று  விரைவில் தெரிவிக்க படும்.
















Thursday, September 5, 2013

மாநில செயற்குழு கூட்டம்-15/09/2013-திருச்சி








சகோதரசகோதரிகளே வரும் 15/09/2013 ஞாயிற்றுகிழமை திருச்சி அரசு மருத்துவகல்லூரி முன் உள்ள ஹாலில் தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடத்த பட உள்ளது. கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் நிரந்தர செவிலிய பணி இடங்கள் உருவாக்கம் மற்றும் தற்பொழுது ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரம் தொடர்பாக பிரச்சனைகள், ஊதிய பிரச்சனைகள் தொடர்பாக நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மேலும் நமது கோரிக்கை மற்றும் குறைகளை முறையாக மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க உள்ளோம். எனவே அனைவரும் வர வேண்டும் என கேட்டு கொள்கிறோம். உங்கள் வரவு எங்களுக்கு ஊக்கம் தரும். பணிகளை சிறப்பாக செய்ய நல்ல வழிமுறைகளை காட்ட உதவியாக இருக்கும்.

Tuesday, September 3, 2013

டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றி


   
   


கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களின் 12 மணி நேர பணி பற்றியும், விடுப்பு இல்லாமல் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி புரிவது பற்றியும், அரசு மருத்தவ கல்லூரி மருத்துவ மனையில் இந்திய மருத்துவ கவூன்சில் விதிகளின் படி செவிலியர்களை நியமிக்க வேண்டிய தேவை பற்றியும் 03/09/2013 அன்று தொலைகாட்சியின் வாயிலாக அரசுக்கும் மக்களுக்கும் தெரிவித்த டாக்டர் ரவீந்திரநாத் அவர்களுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.