Thursday, June 27, 2013

ஓமாந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய செவிலியர் பணி இடங்கள் உருவாக்க வாய்ப்பு



 
 
 

ஓமந்தூர் அரசினர் தோட்டத்தை AIIMS மருத்துவமனைக்கு இணையாக வடிவமைக்கும் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள், அதன் முதல் படியாக அங்கு தற்பொழுது நிர்வாக உதவிக்காக தேவைப்படும் நிர்வாக அலுவலர் நிரந்தர பணி இடங்களை உரூவாக்கி அரசானை பிறப்பித்து உள்ளார்கள்.

இந்த மருத்துவமனை முழுவடிவம் பெற்று இயங்க ஆரம்பிக்கும் பட்சத்தில் அதுவும் AIIMS மருத்துவமனைக்கு இணையாக என்கிறபொழுது எப்படியும் 500 கும் மேற்பட்ட நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்க படும்.

அம்மா அவர்களின் கருணையால் இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றபட்டு கொண்டிருப்பதால் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் செவிலியர்கள் பலர் இந்த மருத்துவமனை திறக்கபடும் பொழுது பணி நிரந்தரம் செய்ய பட வாய்ப்புள்ளது.

நாம் ஏற்கனவே தெரிவித்தது போல 40 செவிலியர்கள் மட்டுமே பணி புரிந்து வந்த சிவகங்கை மருத்துவ கல்லூரியில் தற்பொழுது அம்மா அவர்களின் ஆசியால் 218 மேற்பட்ட நிரந்தர செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டுள்ளது.

அதே போல் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கும் நிரந்த செவிலியர் பணி இடங்கள் தோற்றுவிக்கும் பணி நடந்து வருகிறது.

நன்றி.


நிர்வாக பணி இடங்கள் தோற்றுவிக்க பட்டதற்கான அரசு ஆணை